அஜித் வீடு கட்டி தருவார் என்று கூறி ஏமாற்றிய அஜித் ரசிகர் மன்ற உறுப்பினர் - பணத்தை இழந்த ஏழைப்பெண் புகார்.

By Manikandan · 20/12/2022

நடிகர் அஜித் ரசிகர் மற்ற நிர்வாகி எனக் கூறி மோசடியில் ஈடுபட்டதாக தற்போது ஒரு தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. கோலிவுட்டில் பல ஆண்டு காலமாக அல்டிமேட் ஸ்டாராக ஜொலித்து கொண்டு இருப்பவர் அஜித். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்று இருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் வெளியான அஜித்தின் வலிமை படம் ரசிகர்கள் மத்தியில் மிக பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் இந்த படத்திற்கு பிறகு தற்போது அஜித் நடித்துள்ள படமான "துணிவு" வரும் பொங்கலன்று வெளியாகவுள்ளது. இப்படத்தின் தயாரிப்பு பணிகள் ஏற்கனனே முடிவடைந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் முதல் சிங்கிளானது வெளியாகி வைரலாகியது. இந்நிலையில் படத்தின் அடுத்த "காசேதான் கடவுளடா" என்ற பாடலும் வெளியாகி அஜித் ரசிகர்கள் மத்தியில் வைரலாகிய நிலையில். மேலும் இவரின் ரசிகர்கள் மாற்றத்தில் பல லட்சம் உறுப்பினர்கள் உள்ளனர்

இந்த மன்றம் சார்பில் பல நற்பணிகளை செய்து வருகிறார் தல அஜித். இந்த நிலையில் தற்போது அஜித் மன்ற நிர்வாகி எனக் கூறி சிவா என்பவர் ராஜேஸ்வரி -ஐயப்பன் என்ற தம்பதியிடம் 1 லட்சம் மோசடி. இந்த நிகழ்வு திருநெல்வேலி மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் கட்டபுள்ளி என்ற பகுதியில் நடந்துள்ளது. ஐயப்பன் தீவிரமான அஜித் ரசிகர் என்று கூறப்படுகிறது.இதனை பயன்படுத்திக்கொண்ட திருநெல்வேலி மாவட்டம் தளையத்தூரை சேர்ந்தவர் சிவா என்பவர் கஷ்ட்டப்படும் அஜித் ரசிகர்களுக்கு மன்ற உறுப்பினர்களை மாவட்டம் வாரியாக கணக்கெடுத்து அஜித்தை இலவசமாக வீடு கட்டி தருவதாக தெரிவித்துள்ளார்.

இதனை முதலில் ஐயப்பன் மற்றும் ராஜேஸ்வரி தம்பதி நம்பவில்லை. இதனால் சுரேஷ் சந்திரா எந்த அலுவலகத்தில் பணிபுரியும் சங்கர் என்பவரை சிவா தயார் செய்திருக்கிறார்.அதற்கு பிறகு ஐயப்பன் மற்றும் ராஜேஸ்வரியை அழைத்து சங்கருடன் பேசவைத்திருக்கிறார இதற்கு பிறகு 15 லட்சம் வீடு கட்ட வாங்கி கணக்கிற்க்கே பணம் வரும் ஆனால் பத்திர பதிவுக்கு மட்டும் 1 லட்சம் தேவை படுகிறது என்று மோசடியில் ஈடுபட்டுள்ளார் சிவா

இலவச வீடு அதுவும் நடிகர் அஜித்தே கட்டித்தருகிறார் என்றதும் ஐயப்பன் இதற்கு சம்மதித்து சிறுக சிறுக சேர்ந்த 1.10 லட்சம் ரூபாயை சிவாவிடம் கொடுத்துள்ளார் ஐயப்பன்- ராஜேஸ்வரி தம்பதி.பணம் செலுத்திய பிறகு சிவாவிடம் இருந்து எந்த தகவலும் வரவில்லை. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த ஐயப்பன் சிவா இருக்கும் இடம் அறிந்து அங்கு சென்று கேட்டபோது ஐயப்பன்- ராஜேஸ்வரி தம்பதிக்கு சிவா கொலை மிரட்டல் விட்டதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஐயப்பன் மற்றும் சிவா புகாரளித்து தாங்கள் சிறுக சிறுக சேர்த்த பணத்தை மீட்டு கொடுக்க வேண்டும் என்று புகை அளித்துள்ளார். இதனையடுத்து காவல் துறை தற்போது விசாரணை நடத்தி வருகிறது. பொதுவாக நடிகர் அஜித் எந்த சர்ச்சைகளில் சிக்காமல் இருக்க படங்களில் கூட சில காட்சிகளை நீக்க சொல்வார். ஆனால் தற்போது அவரது ரசிகர் மற்ற நிர்வாகி என்றே சொல்லி 1 லட்சம் ருபாய் பணத்தை ஏமாற்றி இருப்பது அஜித் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full