குட் பேட் அக்லி படத்தை பார்க்க வருபவர்களுக்கு அஜித் ரசிகர்கள் கொடுத்த சப்ரைஸ் - என்ன தெரியுமா?

By subhashini · 10/4/2025

குட் பேட் அக்லி படம் பார்க்க வருபவர்களாக அஜித் ரசிகர்கள் செய்திருக்கும் செயல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் 90 காலகட்டங்களில் தொடங்கி தற்போது வரை தனது உழைப்பினால் உயர்ந்து அல்டிமேட் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் திகழ்ந்து கொண்டு இருப்பவர் அஜித். இவர் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் கடைசியாக அஜித் நடிப்பில் இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் வெளிவந்த படம் ‘விடா முயற்சி’.

இந்தப் படத்தில் அஜித்துடன் த்ரிஷா, ஜெரினா கஸான்ட்ரா, அர்ஜுன், ஆரவ் உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இப்படத்திற்கு அனிருத் இசை அமைத்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. நீண்ட இடைவெளிக்கு பின் இந்த படம் வந்ததால் திரையரங்குகளில் ரசிகர்கள் இந்த படத்தை கொண்டாடி இருந்தார்கள். அதோடு இந்த படம் மொத்தமாக 150 கோடி வரை வசூல் செய்து இருக்கிறது. தற்போது நடிகர் அஜித் அவர்கள் குட் பேட் அக்லி என்ற படத்தில் நடித்து வருகிறார்.

குட் பேட் அக்லி படம்:

இந்த படத்தை ஆதிக் ரவிசந்திரன் இயக்கி வருகிறார். கடைசியாக இவர் இயக்கிய மார்க் ஆண்டனி படம் ரசிகர்கள் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றுத் தந்திருந்தது. அது மட்டும் இல்லாமல் இவர் அஜித் உடைய தீவிர ரசிகர். குட் பேட் அக்லி படத்தை தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இந்தப் படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்து வருகிறது. இந்த படத்தில் அஜித்துடன் திரிஷா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரசன்னா உட்பட பல அர்ஜுன் நடித்திருக்கிறார்கள்.

படம் குறித்த தகவல்:

மேலும், தமிழ்நாட்டில் இன்று இந்த படத்தினுடைய முதல் காட்சி காலை 9 மணிக்கு தான் திரையிடப்பட்டது. ஆனால், அதற்கு முன்பு வெளிநாடுகளில் படம் ரிலீஸ் ஆகிவிட்டது. அங்கு படத்தை பார்த்து ரசிகர்கள், இது முழுக்க முழுக்க ரசிகர்களாக எடுக்கப்பட்ட படம். மாஸ் காட்சிகள் நிறைய இருக்கிறது என்றெல்லாம் கமெண்ட்ஸ் போட்டு இருந்தார்கள். இன்று முதல் காட்சி பார்க்க வந்த அஜித் ரசிகர்கள் தியேட்டரில் ஆடி பாடியும், பேனர்களுக்கு பால் அபிஷேகம் செய்தும் கொண்டாடி இருக்கிறார்கள்.

ரசிகர்கள் செய்த செயல்:

இப்படி இருக்கும் நிலையில் சென்னையில் புகழ்பெற்ற திரையரங்கில் ஒன்றான ரோகினி தியேட்டரில் படம் பார்க்க வரும் ரசிகர்களுக்கு ஹால்ஸ் மிட்டாயை கொடுத்திருக்கிறார்கள். படத்தில் நிறைய மாஸ் காட்சிகள் இருப்பதால் படம் பார்க்க வரும் ரசிகர்கள் கத்தி கத்தி தொண்டை வறண்டு போய்விடக்கூடாது என்பதற்காகத்தான் முன்னெச்சரிக்கையாக ஹால்ஸ் மற்றும் விக்ஸ் மிட்டாய்களை கொடுத்ததாக
கூறப்படுகிறது. தற்போது இது தொடர்பான புகைப்படங்கள் தான் இணையத்தில் வைரலாகி வருகிறது.

படத்தின் கதை:

படத்தில் அஜித் இந்தியாவே நடுங்கும் அளவுக்கு மிகப்பெரிய கேங்ஸ்டர் ஆக இருக்கிறார். அந்த வேலையால்
அஜித்தினுடைய குடும்பத்திற்கு மிகப்பெரிய ஆபத்து வருகிறது. இதனால் திரிஷா மனம் உடைந்து தன் கணவரை விட்டு பிரிந்திருக்கிறார். அது மட்டும் இல்லாமல் பிறந்த குழந்தையை கூட பார்க்க விடாமல் திரிஷா தடுக்கிறார். இதனால் அஜித் போலீஸிடம் சரண்டர் ஆகி விடுகிறார். பின் 17 வருடம் கழித்து
தன்னுடைய கேங்ஸ்டர் தொழில் எல்லாம் விட்டுட்டு தன்னுடைய மகனை பார்க்க வருகிறார். அப்படி வரும்போது அஜித் உடைய மகனை அர்ஜுன் தாஸ் போலீஸ் இடம் ஏதோ ஒரு பிரச்சனையில் சிக்க வைத்து விடுகிறார். இதனால் நன்றாக இருந்த அஜித் மீண்டும் வில்லனாக மாறுகிறார். அர்ஜுன் தாஸ் ஏன் அஜித்துடைய மகனை ஜெயிலுக்கு அனுப்பினார்? அதற்கான காரணம் என்ன? தன் மகனை ஜெயிலில் இருந்து அர்ஜுன் மீட்டாரா? என்பது தான் படத்தினுடைய மீதி கதை.

Tamil Behind Talkies AMP · Quick view
View full