அவர் என்ன சாப்பிடறாரு, எனக்கு மாதிரி உடல் வேணும் -ஜிம் மாஸ்டரிடம் கேட்டுள்ள அஜித்.

By Rajkumar · 30/6/2020

பொதுவாக பாலிவுட்டில் தான் சிக்ஸ் பேக் மோகம் அதிகம் இருந்து வந்தது. ஆனால், வாரணம் ஆயிரம் படத்திற்கு பின்னர் தான் தமிழ் சினிமாவிலும் சிக்ஸ் மோகம் அதிகமானது என்று சொல்லலாம். அதன் பின்னர் பல நடிகர்கள் சிக்ஸ் பேக் வைத்தார்கள். அந்த வகையில் அஜிதிக்கும் ஒரு கட்டத்தில் சிக்ஸ் பேக் மோகம் வந்துள்ளது. அல்டிமேட் ஸ்டார் அஜித்தின் டயட் பிளான், பிட்னஸ் போன்ற பல விஷயங்களை பகிர்ந்துள்ளார் பிரபல பிட்னஸ் பயிற்சியாளரான சிவா.

https://www.youtube.com/watch?v=4KFspXX9BhM

இவர் தமிழ் சினிமாவில் அர்ஜுன், பரத், அருண் விஜய், லாரன்ஸ் போன்ற பல நடிகர்களுக்கு பயிற்சியாளராக பணியாற்றியுள்ளாள்ர் சிவகுமார்.தற்காப்பு கலையில் பிளாக் பெல்ட் ஹோல்டரான இவர், மிஸ்டர் தமிழ் நாடு, மிஸ்டர் மெட்றாஸ் போன்ற பல பட்டங்களை வென்றுள்ளார். இவர் தமிழ் சினிமா நடிகர்களுக்கு உடற்பயிற்சியாளராக பணிபுரிய துவங்கியது அர்ஜுன் நடித்த துரை படத்தின் மூலம் தானாம்.

துரை படத்தின் படப்பிடிப்பில் அர்ஜுன் இவரது உடலை பார்த்துவிட்டு தனக்கு உடற்பயிற்சிகளை அளிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.அந்த படத்தில் துவங்கி தற்போது வரை தமிழில் உள்ள பல்வேறு நடிகர்களுக்கு உடற்பயிற்சியாளராக பணியாற்றி வருகிறார். மேலும், பரத் நடித்த '555' படத்தில் பரத் சிக்ஸ் பேக் உடலை வைக்க காரணமும் இவர் தான். இந்த நிலையில் அஜித்துடன் பணியாற்றிய அனுபவம் குறித்து பேசியுள்ளார் சிவகுமார்.

மேலும், ஒரு முறை பரத் என்ன சாப்பிடுகிறார் அதை நானும் டயட்டாக எடுத்துக்கொள்ளலாமா என்று கேட்டார். பரத் என்ன சாப்பிட்டாரோ அதே தான் அஜித்தும் சாப்பிட்டார். பரத் போன்று தனக்கும் சிக்ஸ் பேக் வேண்டும் என்று மெனக்கெட்டர் அஜித். அதே போல அவருக்கு த்ரட் மில்லில் ஓடுவது சுத்தமாக பிடிக்காது. மாறாக அவர் வால்கிங் செல்வார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full