விமான நிலைய ஊழியரிடம் மன்னிப்பு கேட்ட அஜித், என்ன மனுஷன்யா. ஏன் பாருங்க (வைரலாகும் வீடியோ)

By subhashini · 15/6/2022

ரசிகை ஒருவர் போட்டோ எடுக்க கேட்க, அஜித் மன்னிப்பு கேட்டு மறுத்து இருக்கும் வீடியோ தற்போது சோஷியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டு இருப்பவர் அஜித். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் வெளியான அஜித்தின் வலிமை படம் ரசிகர்கள் மத்தியில் மிக பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டு இருந்தது. இரண்டு வருட காத்திருப்புக்கு பிறகு வலிமை படம் ரிலீசாகி இருந்தது.

இந்த படத்தை வினோத் இயக்கி இருந்தார் மற்றும் போனிகபூர் தயாரித்து இருந்தார். இந்த படத்தில் ஹூமா குரேஷி, கார்த்திகேயா உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். மேலும், அஜித்தின் வலிமை படம் வசூலில் வாரி இறைத்து இருந்தது என்று இந்த படத்தின் தயாரிப்பாளரே அறிவித்து இருந்தார். தற்போது வலிமை படத்தை இயக்கிய இயக்குனர் வினோத் குமாரின் மொத்த டீமும் ‘ஏகே 61’ படத்திற்கான வேலையில் மும்முரமாக இறங்கி இருக்கிறார்கள்.

ஏகே 61 படம்:

அதுமட்டும் இல்லாமல் இந்த படம் பல மொழிகளில் வெளியிடத் திட்டமிட்டு இருக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு ஏப்ரலில் தொடங்கி இந்த ஆண்டு தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும், இந்த கதையில் அஜித் மிகவும் இன்வால்வ் ஆகி இருப்பதால் அவரது லுக்கை அவரே டிசைன் செய்து இருக்கிறார். சமீபத்தில் அதற்கான புகைப்படங்கள் செய்து வெளியாகி இருந்தது. அப்படியே இந்த படத்திற்கான பிற நடிகர்களின் தேர்வுகளும் நடந்து கொண்டிருக்கின்றது.

https://www.youtube.com/watch?v=lt9V8OOuw3M

ஏகே 61 படத்தின் படப்பிடிப்பு:

மேலும், இந்த படத்தில் அஜித்திற்கு இரட்டை வேடம் என்று கூறப்படுகிறது. அதுமட்டும் இல்லாமல் அஜித் இந்த படத்திற்காக 20 முதல் 25 கிலோ வரை எடை குறைத்திருக்கிறார். தற்போது ஹைதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் பிரம்மாண்ட செட் அமைத்து படப்பிடிப்பு நடத்தப்பட்டு வருகிறது. முதலில் இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக தபு நடிப்பதாக கூறி இருந்த நிலையில் மலையாள நடிகை மஞ்சுவாரியர் அஜித்துக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்.

அஜித்தின் லேட்டஸ்ட் வீடியோ :

மேலும், இந்த படம் ஒரு வங்கி சம்பந்தமான பிரச்சனையை மையமாக கொண்ட கதை என்ற தகவல் வெளியாகி இருக்கின்றது. இந்த படத்தில் சமுத்திரக்கனி, மஞ்சு வாரியர், ராஜதந்திரம் வீரா உட்பட பல நடிகர்கள் நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது அஜித்தின் லேட்டஸ்ட் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, அஜித் அவர்கள் ஏர்போர்ட்டில் இருந்து வெளியேறும் போது வாசலில் ரசிகை ஒருவர் அவருடன் புகைப்படம் எடுத்துக் கொள்ளலாமா? எனக் கேட்கிறார்.

ரசிகையிடம் மன்னிப்பு கேட்ட அஜித்:

அதற்கு வாசலருகே எடுத்தால் கூட்டம் கூடி பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் என்பதால் அந்த ரசிகை இடம் அஜித் பணிவாக மறுத்துவிட்டு சாரி சொல்லிவிட்டு செல்கிறார். அதன் பின்னர் விமான நிலையம் உள்ளே பல ரசிகர்கள் அஜித்திடம் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள். தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை தொடர்ந்து அஜித்தின் ஏகே 62வது படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்க இருப்பதாக உள்ள தகவல் சில மாதங்களுக்கு முன் சோசியல் மீடியாவில் வெளியாகி இருந்தது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full