தனது நீண்ட வருட கொள்கையை தளர்த்து அஜித் கலந்துகொள்ள போகும் முதல் நிகழ்ச்சி.!

By Rajkumar · 9/2/2019

அல்டிமேட் ஸ்டார் அஜித் கடந்த சில ஆண்டுகாளாகவே எந்த ஒரு கலை நிகழ்ச்சிக்கோ, பாராட்டு விழாவிற்கோ கலந்து கொள்வது இல்லை. அவ்வளவு ஏன் தனது படத்தின் இசை வெளியிட்டு விழாவிற்கோ, வெற்றி விழாவிற்கோ கூட அஜித் கலந்து கொண்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டது.

இறுதியாக கலைஞர் பாராட்டு விழாவின் போது நேரடியாக இனி தங்களை பொது நிகழ்ச்சிக்கோ, அரசியல் நிகழ்ச்சிக்கோ நடிகர்களை வற்புறுத்துகிறார்கள் என்று பேசிய வீடியோ பெரும் வைரலும் ஆனாது. அதன் பின்னர் அஜித் எந்த ஒரு பொது நிகழ்ச்சிக்கும் கலந்துகொள்வது இல்லை.

இந்நிலையில் இத்தனை ஆன்டுகள் கழித்து நடிகர் அஜித் ஸ்ரீதேவிக்காக தனது கொள்கையை தளர்த்துள்ளார். ஸ்ரீதேவியின் முதலாம் ஆண்டு நினைவு தினம் வரும் 24 ஆம் தேதி அனுசரிக்கபடுகிறது. இதற்காக சென்னையில் உள்ள ஸ்ரீதேவி ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளது. இந்த நிகழ்ச்சியில் அஜித் கலந்துகொள்வார் என்று எதிர்பார்க்கபடுகிறது.

அஜித்தும் ஸ்ரீதேவியும் நண்பர்களாக இருந்து வந்தனர் இருவரும் இணைந்து 'இங்கிலிஷ் விங்கிலீஷ்' படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் போது நடிகை ஸ்ரீதேவி அஜித்திடம் தனது நிதி நிலவரம் தற்போதைக்கு சரியில்லை என்று புலம்பியுள்ளார். அப்போது எதிர்ச்சியாக நடிகர் அஜித், ஸ்ரீதேவியிடம் உங்கள் தயாரிப்பில் கண்டிப்பாக ஒரு படம் பண்ணலாம் என்று கூறியுள்ளார்.

ஸ்ரீதேவிக்கு கொடுத்த வாக்குறுதிக்காக தான் தற்போது அஜித் போனி கபூர் தயாரிப்பில் 'தல 59' படத்தில் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை தீரன் அதிகாரம் ஒன்றை படத்தை இயக்கிய வினோத் இயக்குகிறார். மேலும், இந்த படத்தில் இந்தி நடிகை வித்யா பாலன், ரங்கராஜ் பாண்டே, ஆத்விக் ரவிச்சந்திரன் ஆகியோர் நடித்து வருகின்றனர்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full