அஜித் ஆரம்பிக்க போகும் புதிய தொழில்..!அதுவும் எங்கு தெரியுமா ?

By Rajkumar · 4/12/2018
அல்டிமேட் ஸ்டார் அஜித் தற்போது சிவா இயக்கத்தில் 'விஸ்வாசம்' படத்தில் நடித்து வருகிறார். வரும் பொங்கல் அன்று வெளியாக உள்ள இந்த படத்தின் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி பல்வேறு சாதனைகளை புரிந்திருந்தது. இந்த படத்தின் நடிகர் அஜித் தூக்கு துரை என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா அஜித்தின் ஜோடியாக நடித்துள்ளார்.சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு, டி.இமான் இசையமைத்துள்ளார். மதுரை மற்றும் தேனிப் பின்னணியை கதைக்களமாகக் கொண்டு இந்த படம் உருவாகியுள்ளது. இந்நிலையில், கிழக்கு கடற்கரைச் சாலையில் மிகப் பிரமாண்டமான வீடு ஒன்றைக் கட்டி வருகிறார் அஜித். ஐந்து கிரவுண்டு பரப்பளவில் உருவாகிவரும் இந்த வீட்டில், டிஜிட்டல் தியேட்டர், டப்பிங் மற்றும் எடிட்டிங் ஸ்டுடியோ என சகல வசதிகளும் இருக்கும் என்று கூறப்படுகிறது.படங்களின் டப்பிங் உள்பட அனைத்து பணிகளும் இனிமேல் அஜித் வீட்டில்தான் நடக்குமாம். மேலும், இதனால் ஷூட்டிங் தவிர வேறு எதற்கும் வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டிய அவசியம் இல்லை என்பது மட்டுமின்றி எக்ஸ்ட்ரா வருமானமும் அஜித்துக்கு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. பொதுவாக அஜித்திற்கு கார், பைக் போன்றவைகள் மீது தான் ஆர்வம் மிக அதிகம் அதுபோக தற்போது எம் ஐ டி கல்லூரியில் உள்ள ஆளில்லா விமான ஆராய்ச்சி குழுவின் ஆலோசகராகவும் இருந்து வருகிறார் அஜித். தற்போது தனது துறை சம்மந்தபட்ட தொழிலிலேயே அஜித் இறங்கிவிட்டார் என்று பலரும் கூறி வருகின்றனர்.
Tamil Behind Talkies AMP · Quick view
View full