அஜித்தின் குட் பேட் அக்லி படத்தினுடைய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் செய்திருக்கும் சாதனை தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் 90 காலகட்டத்தில் தொடங்கி தற்போது வரை தனது உழைப்பினால் உயர்ந்து அல்டிமேட் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் திகழ்ந்து கொண்டு இருப்பவர் அஜித். கடைசியாக அஜித் அவர்கள் வினோத் இயக்கத்தில் துணிவு என்ற படத்தில் நடித்து இருந்தார். இப்படம் விமர்சன ரீதியாக வெற்றியடைந்து விட்டது.

தற்போது அஜித்தின் விடாமுயற்சி படத்தை இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கி வருகிறார். இந்த படத்திற்கான வேலைகள் மும்முரமாக நடைபெற்று இருக்கிறது. இந்த படத்திற்கு அனிரூத் இசை அமைக்கிறார். இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக திரிஷா நடிக்கிறார். ஏற்கனவே அஜித்- திரிஷா இருவரும் இணைந்து ஜி, கிரீடம், என்னை அறிந்தால், மங்காத்தா போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார்கள்.

Advertisement

விடாமுயற்சி படம்:

தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு இருவரும் விடாமுயற்சி படத்தில் இணைந்து நடிக்கிறார்கள். இவர்களுடன் இந்த திரைப்படத்தில் சஞ்சய் தத், ஆரவ், அர்ஜுன் தாஸ், அருண் விஜய், ஆரவ், உட்பட பல நடிகர்கள் நடிக்கிறார்கள். இதுவரை 80% படப்பிடிப்பு முடிந்து விட்டது. இதை அடுத்து அஜித் அவர்கள் குட் பேட் அக்லி என்ற படத்தில் நடிக்கிறார். இது அஜித்தின் 63வது படமாகும். இந்த படத்தை இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் தான் இயக்குகிறார். இதற்கான அறிவிப்புகள் எல்லாம் ஏற்கனவே வெளியாகியிருந்தது.

Good Bad Ugly படம்:

இவர் ஏற்கனவே திரிஷா இல்லனா நயன்தாரா, பகிரா, மார்க் ஆண்டனி போன்ற படங்களை இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அது மட்டும் இல்லாமல் இவர் அஜித் உடைய தீவிர ரசிகர். இதனால் இந்த படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். இந்தப் படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்து வருகிறது.

Advertisement

படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்:

அதோடு மே 10 ஆம் தேதி தான் இந்த படத்தினுடைய படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்கப்பட்டது. எந்த ஒரு அறிவிப்புமே இல்லாமல் 20-ஆம் தேதி படத்தினுடைய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியிருந்தது. இது மிகப்பெரிய அளவில் ட்ரெண்டிங் ஆகியிருந்தது. இந்த படத்திற்கான பிரம்மாண்டமாக செட்டை ஒரு வாரத்திற்குள் போட்டு படத்தின் வேலையை ஆரம்பித்திருக்கிறார்கள். இரவும் பகலும் என்று பார்க்காமல் செட் போட உழைத்த நபர்கள் அஜித்துடன் செல்பி எடுக்க ஆசைப்பட்டு இருக்கிறார்கள்.

Advertisement

போஸ்டர் செய்த சாதனை:

செல்ஃபி எடுத்தால் படத்தில் அஜித் லுக் வெளியில் வந்துவிடும் என்று இயக்குனர் பயந்து இருக்கிறார். இன்னொரு பக்கம் அஜித்திற்கு அவர்களை வெறுங்கையோடு அனுப்ப மனசும் இல்லை. இதனால் திடீரென்று இந்த படத்தினுடைய போஸ்டரை வெளியிட்டு இருக்கிறார்கள். இந்த போஸ்டர் வெளியாகி 4.1 கோடி பார்வையாளர்களை கடந்திருக்கிறது. இதற்கு பட குழுவினர் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்திருக்கிறார்கள்.

Advertisement