இன்று நிதி கொடுத்தது விஜய், ஆனால் ட்ரெண்டிங்கில் வந்தது அஜித் ஹேஷ் டேக். அப்படி என்ன அது ?

By Rajkumar · 22/4/2020

தமிழ் சினிமாவில் விஜய் மற்றும் அஜித் இரு துருவங்களாக இருந்து வருகின்றனர். இவர்களது படங்கள் என்றாலே ரசிகர்கள் மத்தியில் ஒரு தனி வரவேற்பையும், எதிர்பார்ப்பையும் பெற்றுவிடுகிறது. மேலும், இவர்களது பல படங்கள் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் அடைந்துள்ளது. அதற்கு முக்கிய காரணமே இவர்களது ரசிகர்கள் தான் என்னதான் விஜய் மற்றும் அஜித் நண்பர்கள் என்றாலும், ஆரம்ப காலத்தில் இவர்களது படங்களில் ஒருவரை ஒருவர் தாக்கி வசனங்கள் இடம்பெற்று இருக்கிறது. அப்போது ஆரம்பித்த விஜய் அஜித் ரசிகர்களின் சண்டை இன்னும் ஓயவில்லை.

https://twitter.com/JosephineWI1/status/1252931415483670528

இந்த நிலையில் விஜய் கொரோனா நிதி கொடுத்த சில மணி நேரத்திலேய விஜய் அஜித் ரசிகர்களின் ட்விட்டர் சண்டை ஆரம்பித்துவிட்டது. தற்போது இந்தியாவில் கொரோனாவால் 19,984 பேர் பாதிக்கப்பட்டும், 640 பேர் உயிர் இழந்தும் உள்ளார்கள். இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்வதால் நாடு முழுவதும் பிரதமர் மோடி அவர்கள் ஊரடங்கு உத்தரவை மே 3 ஆம் தேதி வரை நீட்டித்து உள்ளார்.

படப்பிடிப்புகள் எல்லாம் மூடப்பட்டு உள்ளதால் திரைப்பட தொழிலாளர்கள் தங்களின் வாழ்வாதரத்திற்கே கஷ்டப்படும் நிலையில் உள்ளார்கள். இந்நிலையில் சினிமா தொழிலாளர்களுக்கு உதவ வேண்டும் என பெப்சி அமைப்பு நிதி திரட்டி வருகிறது. சினிமா தொழிலாளர்கள் சங்கத்தில் மொத்தம் 25 ஆயிரம் உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களுக்கு ரூ.3.75 கோடி தேவைப்படுகிறது என்பதால் நடிகர், நடிகைகள் அனைவரும் நிதி வழங்க வேண்டும் என்றும் பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி வேண்டுகோள் விடுத்து இருந்தார்.

https://twitter.com/ThalaVinitha10/status/1252892707137089538

இதுவரை பெப்சி அமைப்புக்கு ரூ.2 கோடியே 45 லட்சம் நிதி வசூலாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.நடிகர்களை பொறுத்த வரை சிவகார்த்திகேயன்-விஜயசேதுபதி சூர்யா ஆகியோர் தலா 10 லட்சமும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 50 லட்சமும், அஜித் 1.25 கோடியும் அளித்திருந்தனர். மேலும் ராகவா லாரன்ஸ் அதிகபட்சமாக 3 கோடி ரூபாயை அளித்திருந்தார்.

ஆனால், தமிழ் சினிமாவில் முக்கிய நடிகரும் அதிகம் சம்பளம் வாங்கும் விஜய் கொரோனா நிவாரண நிதியாக எதுவும் கொடுக்கவில்லை. இதனால் விஜய் மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்தது.இந்த நிலையில். விஜய் கொரோனா நிதியாக 1.30 கோடி ரூபாயை கொடுத்துள்ளார். அதில் முதல்வர் நிவாரண நிதியாக 50 லட்சமும் பிரதமர் நிவாரண நிதியாக 25 லட்சமும் வழங்கியுள்ளார். அஜித் 1.25 கோடி நிதியுதவி அளித்திருந்த நிலையில் தற்போது விஜய் அவரை விட 5 லட்ச ரூபாயை அதிகமாக வழங்கியுள்ளார் என்று விஜய் ரசிகர்கள் மார்தட்டி கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் விஜய் மற்றும் அஜித் ரசிகர்களும் மாறி மாறி ட்விட்டரில் சண்டை போட்டு வருகின்றனர். அஜித்தை விட விஜய் தான் அதிக நிவாரண நிதியை கொடுத்தார் என்று விஜய் ரசிகர்களும், அஜித் தான் அதிக நிதி கொடுத்தார் என்று அஜித் ரசிகர்களும் கூறி வருகிறன்றனர். இதனால் அஜித் ரசிகர்கள் உருவாக்கிய #அஜித்தைபின்தொடரும்விஜய் என்ற ஹேஷ் டேக் இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் வந்துள்ளது.

behindtalkies AMP · Quick view
View full