வலிமை படத்தில் அஜித்திற்கு பைக் விபத்து. விரைவில் குணமடைய ரசிகர்கள் உருவாக்கிய ஹேஷ்டேக் ட்ரெண்டிங்.

By Rajkumar · 19/2/2020

தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து கொண்டு இருப்பவர் நடிகர் அஜித் குமார். தற்போது தல அஜித்தின் “வலிமை” படம் குறித்து அதிர்ச்சியிடும் தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதனால் தல ரசிகர்கள் எல்லாம் மிகுந்த கவலையில் உள்ளார்கள். இந்த வருடம் அஜித் அவர்களின் நடிப்பில் வெளிவந்த ‘விஸ்வாசம் மற்றும் நேர்கொண்ட பார்வை’ ஆகிய இரண்டு படமுமே மக்களிடையே நல்ல வரவேற்பையும், வசூலையும் பெற்றது.

https://twitter.com/mohandreamer/status/1229969164627894272

அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தின் மாஸ் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் வினோத்தும், தயாரிப்பாளர் போனிகபூர் இருவரும் மீண்டும் இணைந்து தல அஜித்தை வைத்து “வலிமை” படத்தை உருவாக்கி வருகிறார்கள். இந்த படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவாளராக உள்ளார். சமீப காலமாகவே தல அஜித் அவர்கள் படங்களில் பெப்பர் சால்ட் லுக்கில் இருந்த நிலையில் இந்த வலிமை படத்தில் பிளாக் ஹேர் ஸ்டைலில் அதுவும் இளமை தோற்றத்துடன் நடிக்கிறார். இந்த படத்தில் தல அஜித் அவர்கள் போலீசாக நடிக்கிறார். ஹீரோயினியும் போலீஸ் கேரக்டர் தான் என்றும் சொல்லப்படுகிறது.

இதையும் பாருங்க : சைவத்திற்கு மாறிய ரகுல் ப்ரீத் சிங். ஷூட்டிங் ஸ்பாட்டில் கூட இதை எடுத்துட்டு போய் சாப்பிடுவாராம்.

இந்த படத்தில் தல இரட்டை வேடத்தில் நடிக்கிறார் என்றும் பேசப்படுகிறது. இந்த படத்தில் அதிரடி ஆக்ஷன் காட்சிகளும், பைக் ரேஸ் காட்சிகளும் கண்டிப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று கூறினார்கள். அதே போல நடிகர் அஜித் குமார் அவர்கள் எப்போதும் தான் நடிக்கும் படங்களில் பைக் ஸ்டண்ட் மற்றும் சில சண்டை காட்சிகளில் டூப் போடாமல் நடிப்பார். அது போல இந்த வலிமை படத்தில் அவர் ஒரு ரிஸ்க் எடுத்து உள்ளார்.

சமீபத்தில் இந்த படத்தின் பைக் காட்சி ஒன்றில் அஜித் பைக் ஓட்டிய போது எதிர்பாராதவிதமாக அவர் பைக்கில் இருந்து தவறி விழுந்துள்ளார். இதனால் அவருக்கு ஒரு சில சிறுகாயங்கள் ஏற்பட்டிருக்கிறது. பின்னர் அவர் மருத்துவ உதவிகளை எடுத்துக்கொண்டு உடனடியாக மீண்டும் சூட்டிங்கிற்கு திரும்பி அந்த காட்சிகளில் நடித்து முடித்துள்ளார். அஜித் குணமடைய அஜித் ரசிகர்கள் #GetWellSoonThala என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி உள்ளனர். இந்த ஹேஷ் டேக் ட்ரெண்டிங்கில் வந்துள்ளது

Tamil Behind Talkies AMP · Quick view
View full