'உங்க குடும்பத்தை பாருங்க' பல ஆண்டுகள் கழித்து ரசிகர்களுக்காக அஜித் வெளியிட்ட வீடியோ

By ·

பிரபல நடிகர் அஜித் தனது ரசிகர்களுக்காக பேசி வெளியிட்டிருக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக அல்டிமேட் ஸ்டார் ஆக ஜொலித்துக் கொண்டிருப்பவர் அஜித். இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்று தந்திருக்கின்றது. மேலும், இவர் நடிப்பை தாண்டி கார் ரேஸிங் மீதும் அதிக ஆர்வம் கொண்டவர். இது அனைவருக்குமே தெரியும்.

இவர் சினிமாவில் நுழையும்போது இருந்தே கார் ரேஸிங்கில் கவனம் செலுத்தி வருகிறார். இவர் சர்வதேச அளவில் பல்வேறு பார்முலா ரேஸ் பந்தயத்தில் கலந்து கொண்டு இருக்கிறார். மேலும், இவரது படங்கள் என்றாலே கண்டிப்பாக பைக் அல்லது கார் ஓட்டும் காட்சிகள் நிச்சயம் இடம் பெற்றுவிடும். தற்போது ’24H’ கார்பந்தயம் துபாயில் நடக்கிறது. இதில் அஜித் குமாருடைய டீமுமே களம் இறங்கி இருக்கிறது. கடந்த ஆண்டு ‘அஜித்குமார் ரேசிங் டீம்’ என்ற குழுவை அஜித் உருவாக்கி ரேஸிங்க்கு தேவையான அனைத்தையுமே செய்து வந்திருந்தார்.

அஜித்குமார் ரேசிங் டீம்:

தற்போது அந்த குழுவுடன் கார் பந்தயத்திலும் அஜித் களம் இறங்கி இருக்கிறார். இந்நிலையில், நடிகர் அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா தனது எக்ஸ் தளத்தில், துபாயில் இருந்து அஜித் தனது ரசிகர்களுக்காக பேசி இருக்கும் வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். அதில், ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. வாழ்க்கை முழுவதும் மோட்டார் பந்தயங்கள் என்னுடைய ஆர்வமாக இருந்து வருகிறது. நிறைய ரசிகர்கள் நேரில் வந்தது எமோஷனலாக இருந்தது. அதே நேரம், நான் சொல்ல வேண்டியது இதுதான். நீங்கள் அனைவரும் சந்தோஷமாகவும், ஆரோக்கியத்துடன், மன நிம்மதியுடன் வாழ நான் கடவுளை வேண்டிக் கொள்கிறேன்.

View this post on Instagram

A post shared by Suresh Chandra (@sureshchandraaoffl)

அஜித் சொன்ன விஷயம்:

மேலும், நீங்கள் அனைவரும் உங்களுடைய குடும்பத்தைப் பாருங்கள். நன்றாக படியுங்கள் ‌ வேலைக்குச் செல்பவர்கள் கடுமையாக வேலை பாருங்கள். நமக்கு பிடித்த விஷயத்தில் நாம் கலந்து கொள்ளும்போது வெற்றி பெற்றால் நல்ல விஷயம் தான். ஆனால், வெற்றி கிடைக்காவிட்டாலும் சோர்ந்து விடாதீர்கள். வாழ்க்கையில் போட்டிகள் ரொம்ப முக்கியம். உங்களுடைய ஆற்றலையும், அர்ப்பணிப்பையும் யாருக்காகவும் விட்டுக் கொடுக்காதீர்கள். உங்கள் அனைவரையும் நிபந்தனையின்றி நான் நேசிக்கிறேன்.

ரேசிங் குறித்து:

அதேபோல், என்ட்யூரன்ஸ் ரேசிங் மற்றும் போட்டிகளைப் போன்று தனிநபர் விளையாட்டு அல்ல. இந்தப் போட்டியில் ஒரு காரில் மூன்று முதல் நான்கு வீரர்கள் இருப்பார்கள். எனவே, நாங்கள் அனைவருமே ஒவ்வொருவரின் திறமைக்குப் பொறுப்பாளர்கள். எனவே, காரைப் பந்தயத்தில் பத்திரமாக பாதுகாக்க வேண்டும். அதேநேரம், சிறந்த லேப் டைமிங்கையும் சாதிக்க வேண்டும். இது கார் ஓட்டுநர்கள், பராமரிப்பாளர்கள் உள்ளிட்ட அனைவரது பங்களிப்பும் கலந்தப் போட்டி.

குடும்பத்தைப் பாருங்கள் :

சினிமா துறையைப் போல தான் இதுவும், சினிமாவில் எப்படி எப்போதும் ஒரு குழுவாக செயல்படுகிறோமோ அதே போல் தான் இந்த ரேசிங்கும். எனவே, எல்லாரும் அவர்களது கடமைகளைத் தானாகவே செய்தால் போதும், முடிவுகள் தானாக வந்து சேரும். என் ரசிகர்கள் யாரும் சண்டை போடாதீர்கள். வாழ்க்கை ரொம்ப சின்னது. மகிழ்ச்சியாக இருங்கள். ‌ உங்கள் குடும்பத்தைப் பார்த்துக் கொள்ளுங்கள் என்று அஜித் ரசிகர்கள் மீது அக்கறையுடன் பேசி இருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full