சினிமா முதல் கார் ரேஸ் வரை தன்னை பற்றிய விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த நடிகர் அஜித்
தன்னை பற்றிய விமர்சனங்கள் பற்றி நடிகர் அஜித் அளித்து இருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் 90 காலகட்டங்களில் தொடங்கி தற்போது வரை தனது உழைப்பினால் உயர்ந்து அல்டிமேட் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் திகழ்ந்து கொண்டு இருப்பவர் அஜித். இவர் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் நடிகர் அஜித் நடிப்பில் வெளிவந்த படம் குட் பேட் அக்லி.
இந்த படத்தை ஆதிக் ரவிசந்திரன் இயக்கி இருக்கிறார். அது மட்டும் இல்லாமல் இவர் அஜித் உடைய தீவிர ரசிகர். இந்தப் படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்து இருக்கிறது. இந்த படத்தில் அஜித்துடன் திரிஷா, அர்ஜுன் தாஸ், பிரசன்னா உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தில் வின்டேஜ் பாடல்கள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது மட்டும் இல்லாமல் நல்ல வசூலும் செய்து இருந்தது.
அஜித் குறித்த தகவல்:
அதோடு சமீபத்தில் 2025 ஆம் ஆண்டுக்கான கலைத்துறையில் சிறந்து விளங்கிய நடிகர் அஜித்துக்கு டெல்லியில் பத்ம விருது விழா வழங்கப்பட்டது. இந்த விருதை வாங்க அஜித் தன்னுடைய குடும்பத்துடன் சென்று இருந்தார். டெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில் குடியரசு தலைவர் கையால் அஜித் விருதை வாங்கி இருந்தார். இதற்கு பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் பாராட்டி இருந்தார்கள். இதை அடுத்து அஜித் அவர்கள் தன்னுடைய அடுத்த படம் குறித்து எந்த ஒரு அறிவிப்பையுமே வெளியிடவில்லை.
அஜித் கார் ரேஸ்:
இது ஒரு பக்கம் இருக்க, அஜித் நடிப்பை தாண்டி கார் ரேசிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார். தொடர்ச்சியாக பல கார் ரேஸில் அஜித் பங்கேற்று வெற்றியும் பெற்றிருக்கிறார். இதற்கு ரசிகர்கள், பிரபலங்கள் என பலருமே வாழ்த்து தெரிவித்திருந்தார்கள். தற்போதும் அஜித் தன்னுடைய கார் ரேசில் தான் தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறார். அதுமட்டுமில்லாமல் அஜித் அவர்கள் கார் ரேஸில் கலந்து கொண்டதுடன் பல ஊடகங்களுக்கு பேட்டியும் அளித்து வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் தன்னை பற்றிய விமர்சனம் குறித்து அஜித் கூறி இருப்பது, என்னை மற்றவர்கள் எப்படி பார்க்கிறார்கள் என்பதை நான் எப்போதுமே மதிப்பிட மாட்டேன்.
அஜித் பேட்டி:
நான் என்னுடைய விதிமுறைகளில் வெற்றியாளனாக மட்டும் இருக்க விரும்புகிறேன். என்னுடைய சினிமா கேரியரின் ஆரம்பத்தில் என்னுடைய தமிழ் உச்சரிப்பை பார்த்து பல விமர்சனங்கள் எழுந்து இருந்தது. நான் என்னுடைய பலவீனத்தை கண்டு பயப்படாமல் அதை சரி செய்ய கடினமாக உழைத்தேன். இந்த நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் தன்னை பற்றிய விமர்சனம் குறித்து அஜித் கூறி இருப்பது,
என்னை மற்றவர்கள் எப்படி பார்க்கிறார்கள் என்பதை நான் எப்போதுமே மதிப்பிட மாட்டேன். நான் என்னுடைய விதிமுறைகளில் வெற்றியாளனாக மட்டும் இருக்க விரும்புகிறேன். என்னுடைய சினிமா கேரியரின் ஆரம்பத்தில் என்னுடைய தமிழ் உச்சரிப்பை பார்த்து பல விமர்சனங்கள் எழுந்து இருந்தது. நான் என்னுடைய பலவீனத்தை கண்டு பயப்படாமல் அதை சரி செய்ய கடினமாக உழைத்தேன்.
https://www.youtube.com/watch?v=Psgj2HYlQos
இது என்னுடைய நேரம். நான் பின்வாங்க மாட்டேன். என்னுடைய உடல்நிலை அனுமதிக்கும் வரை நான் கார் ரேஸில் தொடர்ந்து கொண்டே இருப்பேன். கடவுளின் அருளால் என்னுடைய உடல்நிலை நன்றாக இருக்கிறது. என்னுடைய குடும்பமும் என்னுடைய குழுவும் எனக்கு ஆதரவாக இருக்கிறார்கள். 60 வயதுக்கு மேல் கூட பந்தயத்தில் ஈடுபட்ட வீரர்களை நான் பார்த்திருக்கிறேன். அப்படி இருக்கும் போது ஏன் என்னால் முடியாது? கார் ரேஸ் எனக்கு வெறும் பொழுதுபோக்கு கிடையாது. நான் அதை ஆழமாக நேசிக்கிறேன். என்னுடைய குழுவை எட்ட முடியாத உயரத்திற்கு எடுத்து செல்வது தான் என்னுடைய லட்சியம் என்று கூறியிருக்கிறார்.