அனைவரும் எதிர்பார்த்த அந்த தருணம் - குடியரசு தலைவர் கையால் பத்ம பூஷன் விருதை பெற்ற அஜித் - இதோ வீடியோ

By subhashini · 28/4/2025

நடிகர் அஜித்துக்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டு இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்தியாவில் மத்திய அரசால் வழங்கப்படும் விருதுகளில் ஒன்றான பத்ம விருதுகள் ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு பிரிவுகளை சார்ந்தவர்களுக்கு அறிவிக்கப்படுகிறது. அந்த வகையில் இந்த 2025 ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் 23 பெண்கள் உட்பட 139 பேருக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. அந்த வகையில் கலைத்துறையில் சிறந்து விளங்கும் நடிகர் அஜித்துக்கும் இந்த விருது வழங்கப்படுவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.

https://youtube.com/shorts/Ld2ujPrNu-c?si=QtwGbziOiUdV0fHH

இதனால் ரசிகர்கள், பிரபலங்கள் என பலருமே அஜித்திற்கு வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள். மேலும், தனக்கு பத்ம பூஷன் விருது கிடைப்பதை ஒட்டி அஜித்தும் அறிக்கை வெளியிட்டிருந்தார். அந்த அறிக்கையில், இந்திய குடியரசுத் தலைவரிடம் இருந்து மதிப்பிற்குரிய பத்மபூஷன் விருதை வாங்குவதில் நான் ரொம்ப பெருமை அடைகிறேன். இந்த மதிப்பிற்குரிய மரியாதையை வழங்கிய பிரதமர் மோடிக்கும் குடியரசு தலைவர் திரெளபதி முர்மூவுக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

பத்மபூஷன் விருது:

இந்த அங்கீகாரத்தை எனக்கு கிடைத்த பாக்கியமாக கருதுகிறேன். அதோடு இந்த தருணத்தில் என்னுடைய தந்தை இருந்திருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். என் மீது அளவு கடந்த அன்பைப் பொழிந்து, நிறைய தியாகங்களையும் செய்த என்னுடைய தாய்க்கும் நன்றி. மேலும், 25 ஆண்டுகளாக எனக்கு துணையாக இருக்கும் என்னுடைய மனைவி ஷாலினிக்கும் நன்றி. என்னுடைய மகிழ்ச்சிக்கும் வெற்றிக்கும் காரணமாக ஷாலினி இருக்கிறார் என்று கூறியிருந்தார்.

விருது வாங்கிய அஜித்:

இந்நிலையில் இன்று மாலை டெல்லியில் தான் பத்ம விருது விழா நடைபெறுகிறது. இந்த விருதை வாங்க அஜித் தன்னுடைய குடும்பத்துடன் சென்று இருக்கிறார். இன்று டெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில் தான் இந்த விழா நடைபெறுகிறது. இந்த விழாவில் குடியரசு தலைவர் திரெளபதி முர்மு கையால் அஜித்துக்கு பத்ம பூஷன் விருதை வழங்கி இருக்கிறார். இதை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

அஜித் திரைப்பயணம்:

தமிழ் சினிமா உலகில் 90s காலகட்டங்களில் தொடங்கி தற்போது வரை தனது கடுமையான உழைப்பினால் உயர்ந்து அல்டிமேட் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் ஜொலித்து கொண்டிருப்பவர் அஜித். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்று இருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் நடிகர் அஜித் அவர்கள் குட் பேட் அக்லி என்ற படத்தில் நடித்து இருக்கிறார். இந்த படத்தை ஆதிக் ரவிசந்திரன் இயக்கி இருக்கிறார். அது மட்டும் இல்லாமல் இவர் அஜித் உடைய தீவிர ரசிகர்.

குட் பேட் அக்லி படம்:

இந்தப் படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்து இருக்கிறது. இந்த படத்தில் அஜித்துடன் திரிஷா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரசன்னா உட்பட பல அர்ஜுன் நடித்திருக்கிறார்கள். மேலும், இந்த படத்தை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வசூல் செய்து வருவதாக கூறப்படுகிறது.
மேலும், இந்த படத்தில் வின்டேஜ் பாடல்கள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இதை ரசிகர்களும் கொண்டாடி வருகிறார்கள். இதை அடுத்து அஜித் அவர்கள் தன் கார் ரேஸில் கவனம் செலுத்தி வருகிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full