திடீரெண்டு ஸ்லிம்மாக மாறிய அஜித்.! ஆனால், சட்டை பாக்கட்டில்.!

By Rajkumar · 19/2/2019


அஜித் நடிப்பில் சமீபத்தில் வெளியான விஸ்வாசம் செம ஹிட் அடைந்துள்ளது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து அல்டிமேட் ஸ்டார் அஜித் தற்போது ‘தல59’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை சதுரங்கவேட்டை, தீரன் போன்ற வெற்றி படங்களை இயக்கிய  பிரபலமடைந்த இயக்குனர் வினோத் குமார் இயக்கி வருகிறார்.   

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் தயாரிக்கும் இந்த படம் இந்தியில் அமிதாப் பச்சன் நடிப்பில் வெளியான ‘பிங்க்’ படத்தின் ரீமேக் என்பது ஏற்கனவே அறிந்த ஒன்று தான்.ஆனால், அதை அப்படியே எடுக்காமல் சில மாற்றங்களை செய்துள்ளனராம்.   

இந்த படம் இந்தியில் அமிதாப் பச்சன் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடைந்த ‘பிங்க்’ படத்தில் ரீமேக் என்பது அனைவருக்கு தெரியும். மேலும், இந்த படத்தில் நடிக்கும் கலைஞ்சர்களின் விவரம் ஏற்கனவே வெளியான நிலையில் தற்போது இந்த படத்தில் போனி கபூரின் மகள் ஜான்வி கபூர் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும், இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்புகள் தற்போது ஆந்திராவில் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் நடிகர் அஜித் ரசிகர்கள் சிலருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. அதில் முன்பைவிட கொஞ்சம் ஸ்லிம்மாக இருக்கிறார் அஜித்.

மேலும், அஜித்தின் சட்டை பாக்கட்டில் ஸ்மார்ட் போனும் இருக்கிறது. நீண்ட நாட்களாக அஜித் பட்டன் போனை தான் பயன்படுத்தி வருகிறார் என்று கூறிவந்த நிலையில் தற்போது சமர்ட் போனுக்கு அஜித் மீண்டும் மாறியுள்ளாரா என்று ரசிகர்கள் எண்ணி வருகின்றனர்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full