மகளுடன் கைகோர்த்து சென்ற தல..!சமீபத்தில் வெளியான வைரல் வீடியோ..!

By Rajkumar · 14/11/2018
தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நட்சத்திரமாக விளங்கி வருபவர் அல்டிமேட் ஸ்டார் அஜித் குமார். தற்போது சிறுத்தை சிவாவுடன் நான்காவது முறையாக கூட்டணி அமைத்துள்ள அஜித் ”விசுவாசம்’ படத்தில் நடித்து வருகிறார். என்னதான் அல்டிமேட் ஸ்டார் ஆனாலும் தனது பிள்ளைகளுக்கு அல்டிமேட் அப்பாவாக விளங்கி வருகிறார் நடிகர் அஜித். பொதுவாக வெளியே வரும் போது அவ்வளவாக அலட்டி கொள்ளாத அல்டிமேட் ஸ்டார் என்னதான் ஷூட்டிங்கில் பிஸி ஆக இருந்தாலும் தனது மகன் ஆத்விக் மற்றும் மகள் அனோஷ்கா அவர்களுக்கு நேரம் ஒதுக்கவதில் மிகுந்த அக்கறை கொள்வார். தற்போது விஸ்வாசம் படத்தின் படப்பிடிப்புகள் முனிந்ததால் தனது குடும்பத்துடன் நேரத்தை செலவழித்து வருகிறார் நடிகர் அஜித். இன்று மதியம் நடிகர் அஜித் தனது மகள் அனோஷ்காவுடன் கைகோர்த்து சென்ற வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.
Tamil Behind Talkies AMP · Quick view
View full