கருப்பு மாஸ்க், கருப்பு கேப். லாக்டவுன் சமயத்தில் ரசிகர்களுக்கு கிடைத்த தல தரிசனம். வீடியோ இதோ.
கொரோனா ஊரடங்கு காரணமாக திரைப்பட துறை ஒட்டுமொத்தமாக முடங்கியுள்ளது. சினிமா படப்பிடிப்புகள் பல மாதங்களாக முடங்கியுள்ள நிலையில் பல்வேறு படங்களும் OTT தளத்தில் வெளியாகி கொண்டு இருக்கிறது. சமீபத்தில் கூட சூர்யாவின் 'சுரரை போற்று' திரைப்படம் வரும் அக்டோபர் மாதம் 30 ஆம் தேதி வெளியிட போவதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி இருந்தது. OTT தளத்தில் வெளியாகும் முதல் உச்ச நடிகரின் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
இது ஒருபுறம் இருக்க கொரோனா பிரச்சனை காரணமாக படப்பிடிப்புகள் இல்லாததால் நடிகர் நடிகைகள் வீட்டிலேயே முடங்கியுள்ளனர். நடிகைகள் பலரும் யோகா சனம், உடற்பயிற்சி, மேக் அப் வீடியோ என்று சமூக வலைதளத்தில் தொடர்ந்து வெளியிட்டு வருகின்றனர். அதே போல நடிகர்களும் அடிக்கடி எதாவது சில புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர். ரஜினிகாந்த் கேளம்பாக்கம் சென்றது, நடிகர் விஜய் மரக்கன்று நட்டு போட்டோ வெளியாகி வைரலானது.
இந்நிலையில் தற்போது அஜித் தனது மனைவி ஷாலினியுடன் காரில் ஏறிச் செல்லும் வீடியோ சமூகவலைதளத்தில் வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் கருப்பு மாஸ்க் அணிந்து கருப்பு தொப்பியுடன் இருக்கும் அஜித். ஷாலினி மற்றும் மற்றொரு காரில் அமர வைக்கிறார் பின்னர் அந்த காரில் ஏறும் ஜோடி நீங்கள் வரலையா என்று கேட்க அதற்கு 'நீங்கள் கேளுங்கள் நான் பின்னாடி சென்று வருகிறேன்' என்று கூறுகிறார் அஜித் இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.
https://twitter.com/_ThalaRasigan/status/1297085055882244098
ஏற்கனவே லாக்டவுன் காலத்தில் தனது குடும்பத்தினருடன் நேரத்தைச் செலவிட்டு வரும் அஜித், கடந்த மே மாதத்தில் தனது மனைவியுடன் மருத்துவனை சென்ற வீடியோ வெளியாகி வைரலானது. மேலும், அஜித் ஏன் மருத்துவமனைக்கு சென்றார் என்று குழம்பி இருந்த நிலையில்மூன்று மாதங்களுக்கு ஒருமுறை உடல் பரிசோதனை செய்து கொள்ளும் அஜித், அதற்காகத்தான் மருத்துவமனை சென்றிருந்தார் என்றும் அப்போது அவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.