கொரோனா நிவாரண நிதி, அள்ளிக்கொடுத்து ஒட்டு மொத்த தமிழ் நடிகர்களையும் மிஞ்சிய அஜித். எவ்வளவு தெரியுமா ?

By Rajkumar · 7/4/2020

ஒட்டுமொத்த உலகமும் இந்த கொரோனா வைரஸினால் ஸ்தம்பித்து போய் உள்ளது. இந்த நிலைமையை சரிசெய்ய உலகமே போராடி வருகிறது. கொரோனா வைரசினால் உலகம் மிகப் பெரிய அளவில் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளது. இந்தியாவிலும் நாளுக்கு நாள் இந்த கொரோனா வைரஸின் பரவல் அதிகமாகிக் கொண்டே வருகிறது. தற்போது இந்தியாவில் கொரோனாவினால் 4421 பேர் பாதிக்கப்பட்டும், 114 பேர் பலியாகியும் உள்ளனர். உயிரை கொன்று வரும் இந்த வைரஸ் பரவலை தடுக்க பிரதமர் மோடி அவர்கள் நாடு முழுவதும் 21 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பித்து உள்ளார்.

https://twitter.com/Dheena_shankar/status/1247476302648508416

ஊரடங்கு உத்தரவால் போக்குவரத்துக்கு, கடைகள், பொது இடங்கள் என அனைத்தும் மூடப்பட்டு உள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்கை பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. கொரோனாவினால் மக்கள் அனைவரும் வாழ்வாதாரத்திற்காக மிகவும் கஷ்டப்படும் சூழல் ஏற்பட்டு உள்ளது. மேலும், தினகூலி நம்பி வாழும் மக்கள்களுக்கு நாடு முழுவதும் உணவு தட்டுப்பாடு பிரச்சனை தற்போது ஏற்பட்டுள்ளது. அதே போல சினிமா துறையிலும் பலர் வேலை இல்லாமல் இருந்து வருகின்றனர்.

கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதம் 19 ஆம் தேதியே பல்வேறு படத்தின் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுளள்து .சினிமா ஷூட்டிங் நிறுத்தப்பட்டுள்ளதால் FEFSIயை தொடர்ந்து நடிகர் சங்கமும் பாதிக்கப்பட்டுள்ள சினிமா நடிகர்களுக்கு உதவி கோரியுள்ளது. கொரோனாவால் வேலையிழந்த சினிமா தொழிலாளர்களுக்கு உதவும் விதமாக ரஜினிகாந்த் உள்ளிட்ட பல நடிகர்கள் நிதி அளித்திருந்தனர்

https://twitter.com/rameshlaus/status/1247472788484411393

அதே போல சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, குஷ்பு, நயன்தாரா என்று பலரும் FEFSi சங்கத்திற்கு நிதியுதவி அளித்தனர். ஆனால், தமிழ் சினிமாவின் தற்போதைய மாஸ் நடிகர்களான விஜய் அஜித் எந்த உதவியும் செய்யவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிலையில் தல அஜித்தும் உதவிக்கரம் நீட்டியுள்ளார்.

கொரானோ தடுப்பு நிவாரண நிதியாக ரூ.1.25 கோடி வழங்குவதாக நடிகர் அஜீத்குமார் அறிவிதுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதில் பிரதமர் மற்றும் முதல்வர் நிவாரணநிதிக்கு தலா 50 லட்சமும், திரைப்பட தொழிலாளர் சங்கத்துக்கு FEFSI சங்கத்திற்கு ரூ.25 லட்சமும் வழங்குகி இருக்கிறாராம் நடிகர் அஜீத்குமார். இதன் மூலம் விஜய் கொடுப்பதற்கு முன்பாகவே அஜித் விஜய்யை முந்தி உதவி செய்துள்ளது பாராட்டபட்டு வருகிறது.

இதுவரை ரஜினி 50 லட்சம் ரூபாயும், கமல் 10 லட்ச ரூபாயும்,விஜய் சேதுபதி 10 லட்சம் ரூபாயும், சிவகார்த்திகேயன் 10 லட்சம் ரூபாயும், சூர்யா-கார்த்தி குடும்பம் 10 லட்சம் ரூபாயும் வழங்கினர். அது மட்டுமின்றி பிரகாஷ்ராஜ் மற்றும் தயாரிப்பாளர் தாணு ஆகியோர் அரிசி மூட்டைகளை அனுப்பி இருந்தனர்அதே போல லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தமிழ்நாடு சினிமா தொழிலாளர்களின் அமைப்பான ஃபெப்சிக்கு ரூ.20 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  தற்போது தமிழ் நடிகர்களில் அதிக நிதி கொடுத்தது அஜித் தான்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full