மாஸ் கம்மியா இருக்குன்னு சொன்னாங்க, ஆனா - 'விடாமுயற்சி' குறித்து அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா
'விடாமுயற்சி' படம் குறித்து அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா அவர்கள் பல விஷயங்களை நம்மிடம் பகிர்ந்திருக்கிறார். தமிழ் சினிமாவில் 90ஸ் காலகட்டங்களில் தொடங்கி தற்போது வரை தனது உழைப்பினால் உயர்ந்து அல்டிமேட் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் திகழ்ந்து கொண்டு இருப்பவர் அஜித். இவர் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. தற்போது இவர் இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் ‘விடாமுயற்சி’ என்ற படத்தில் நடித்திருக்கிறார்.
இந்தப் படத்தில் அஜித்துடன் த்ரிஷா, ஜெரினா கஸான்ட்ரா, அர்ஜுன், ஆரவ் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். மேலும், இப்படத்திற்கு ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார். இசையமைப்பாளர் அனிருத் இசை அமைத்திருக்கிறார். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே இப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அஜித்தின் ரசிகர்கள் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என்று விடாமுயற்சி படத்தைக் கொண்டாடி வருகிறார்கள். இந்நிலையில், அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா அவர்கள் 'விடாமுயற்சி' படம் குறித்தும், அஜித் குறித்தும் நம்மிடம் பல விஷயங்களை பகிர்ந்திருக்கிறார்.
சுரேஷ் சந்திரா சொன்னது:
சுரேஷ் சந்திரா கூறுகையில், விடாமுயற்சி படத்திற்கு ரசிகர்கள் தரும் பெரும் வரவேற்பை பார்க்கும் போது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. இந்தப் படத்தை ஸ்கிரிப்ட் ஆக பண்ணும் போதே, பலரும் இதுல மாஸ் கம்மியா இருக்குன்னு சொன்னாங்க. ஆனால், அஜித் சார் 'என் ரசிகர்கள் மேல் எனக்கு நம்பிக்கை இருக்கு'ன்னு சொன்னாரு. அவர் தனது ரசிகர்கள் மேல் வைத்திருந்த நம்பிக்கை இன்னைக்கு உண்மையாகிவிட்டது என்று பார்க்கும்போது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது.
https://www.youtube.com/watch?v=9-rvaztUyKc
விடாமுயற்சி குறித்து:
மேலும், அஜித் சார் பல வருஷங்களாகவே இந்த மாதிரி ஒரு படம் பண்ண வேண்டும் என்று தான் ஆசையோடு இருந்தார். 'Love Is Not Romance, Care' என்பது அவருடைய கான்செப்ட். அதனால படத்தில் வெட்டு குத்து இல்லாமல் சமுதாய நலனுக்காக பெண்களை மதிக்கும் ஒரு படம் பண்ணனும்னு ஆசைப்பட்டார். தமிழ்ல எப்படி முதலெழுத்து 'அ' வோ , அதே மாதிரி இந்த படத்தோட ஆரம்பம் அஜித் சார் தான்.
மீண்டும் கூட்டணி:
அதே மாதிரி அஜித் சார்- மகிழ் திருமேனி கூட்டணி மீண்டும் சேருமா என்றால், சேருவாங்க. ஆனால், கால நிர்ணயம் இருக்காது. இப்போதைக்கு நம்ம இந்தப் படத்தை என்ஜாய் பண்ணுவோம். மகிழும் ரொம்ப கஷ்டப்பட்டு இந்த படத்தை எடுத்து இருக்காரு. அதே மாதிரி அஜித் சாரோட அடுத்த ஆறு மாச கவனமும் ரேஸ்ல தான் இருக்கிறது. இன்னும் இரண்டு மூன்று மாதங்களில், 'குட் பேட் அக்லி' படத்திருக்கு அடுத்து யார் டைரக்டர் என்பது முடிவாகும். அப்போது முறையானப்படி கண்டிப்பாக அறிவிக்கிறோம்.
அஜித் சார் சந்தோஷப்படுவார்:
விடாமுயற்சி படம் குறிப்பாக மாஸ் எலமெண்ட்சைத் தாண்டி பெண்களை மதிக்க வேண்டும் என்பதை பற்றி தான். அஜித் சாரோட ஃபேன்ஸ் அவர் கடவுளை அஜித், என்று கத்த வேணாம் என்று சொன்னவுடனே அதை நிறுத்தி விட்டார்கள். தல என்பதை நிறுத்தி விட்டார்கள். அதே போல் இந்த படத்தை பார்த்துவிட்டு அஜித் சாரோட ரசிகர்கள் பெண்களை எப்படி மதிக்க வேண்டும் என்று புரிந்து கொண்டால் அவர் ரொம்ப சந்தோஷப்படுவார் என்று சுரேஷ் சந்திரா கூறியுள்ளார்.