அஜித்தின் மேனேஜர் திடீரென போட்ட ட்விட் - தில் ராஜு பேச்சுக்கு பதிலடியா ?
தில் ராஜூக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அஜித்தின் மேனேஜர் போட்டு இருக்கும் டீவ்ட் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தளபதி விஜய். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் வெளிவந்த வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகி இருந்த படம் பீஸ்ட். இதனை அடுத்து தற்போது இயக்குனர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் வாரிசு என்ற படத்தில் விஜய் நடிக்கிறார்.
https://twitter.com/movieherald/status/1603415387688734720
வம்சி தெலுங்கு சினிமா உலகில் முன்னணி இயக்குனர் ஆவார். இந்த படத்தை தில் ராஜு தயாரிக்கிறார். மேலும், வாரிசு படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், யோகி பாபு, பிரகாஷ் மந்தனா, நாசர், பிரபு, ஜெயசுதா, ஸ்ரீகாந்த், சங்கீதா, சம்யுக்தா, குஷ்பு என்று பலர் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு தமன் இசையமைக்கிறார். இந்த படத்திற்கு கார்த்திக் பழனி ஒளிப்பதிவாளராக இருக்கிறார். சமீபத்தில் தான் இந்த படத்தின் ரஞ்சிதமே என்ற முதல் பாடல் வெளியாகி இருந்தது.
வாரிசு படம்:
இந்த பாடலை விஜய் பாடியிருக்கிறார். இதனை அடுத்து வாரிசு படத்தின் இரண்டாவது பாடலான தீ தளபதி பாடல் வெளியாகியிருந்தது. இந்த பாடலை விஜய் திரைத்துறையில் நுழைந்து முப்பது வருடங்கள் நிறைவானதை ஒட்டி படக்குழு சமர்ப்பித்திருந்தது. மேலும், இந்த பாடலை சிம்பு பாடி இருக்கிறார். முதன் முறையாக விஜய்க்கு சிம்பு குரல் கொடுத்திருப்பது ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தையும், சந்தோஷத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. மேலும், வாரிசு படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகி இருக்கிறது.
https://twitter.com/224Mafia/status/1603738192204550144
படத்தின் ரிலீஸ்:
விஜய் நடிக்கும் வாரிசு திரைப்படத்தை தமிழகத்தில் வெளியிடும் உரிமையை 7ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனம் வாங்கி இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி இருந்தது. மேலும், படத்திற்கான வியாபாரம் மற்றும் பிரமோஷன் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. அதே போல அஜித்தின் துணிவு படமும் பொங்கல் பண்டிகையன்று வெளியாக இருக்கிறது. இதனால் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும், துணிவு படத்தை தமிழகத்தில் வெளியிடும் உரிமையை உதயநிதி ஸ்டாலின் வாங்கி இருக்கிறார்.
தில் ராஜு அளித்த பேட்டி:
இந்த இரண்டு திரைப்படங்களுக்கும் சம அளவில் திரையரங்கங்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், துணிவு படத்திற்கு தான் திரையரங்கங்கள் அதிகமாக கிடைத்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இந்த நிலையில் வாரிசு திரைப்படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு தெலுங்கு மீடியாவிற்கு பேட்டி ஒன்று அளித்து இருந்தார். அதில் அவர், தமிழகத்தில் நடிகர் அஜித்தை விட விஜய் முன்னிலையில் இருக்கிறார். இது வியாபாரம். இரண்டு படங்களுக்கும் சம எண்ணிக்கையிலான திரையரங்கம் என்பது ஏற்க முடியாது. இது குறித்து பேச தான் நான் சென்னைக்கு செல்கிறேன் என்று கூறியிருக்கிறார்.
https://twitter.com/VettaiyanFk2/status/1603723846649270273
அஜித் மேனேஜர் டீவ்ட்:
இப்படி இவர் பேசி இருப்பது தற்போது கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்படுத்தியிருக்கிறது. அதுமட்டுமில்லாமல் வாரிசு படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிகளை பிரம்மாண்ட நடத்த திட்டமிட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால், துணிவு படத்தின் ப்ரோமோஷன்களில் அஜித் பங்கேற்பதில்லை என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. இந்த நிலையில் அஜித்தின் மேனேஜர் டீவ்ட் ஒன்று போட்டு இருக்கிறார். அதில் அவர், அஜித் பைக் ரைடு சென்ற ஒரு போட்டோவை போட்டு "No guts no glory" என்று குறிப்பிட்டு இருக்கிறார். தில் ராஜுக்கு பதிலடி பதிலடி கொடுக்கும் வகையில் தான் இப்படி ஒரு பதிவை அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா போட்டிருக்கிறாரா? என்ற எட்டிசன்கள் கேட்டு வருகின்றனர்.