மங்காத்தா அஜித் ஸ்டெண்ட் காட்சி - இதுவரை காணாத மேக்கிங் வீடியோ.

By Rajkumar · 7/6/2020

தமிழ் சினிமா உலகில் அல்டிமேட் ஸ்டார் ஆக ஜொலித்துக் கொண்டு இருப்பவர் தல அஜித். கடந்த ஆண்டு தல அஜித் நடிப்பில் வெளிவந்த விசுவாசம், நேர்கொண்ட பார்வை ஆகிய இரண்டு படமுமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், வசூலையும் பெற்றிருந்தது. இந்நிலையில் தல அஜித் நடித்த படத்தின் ஸ்டன்ட் காட்சி வீடியோ ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகியுள்ளது. அதோடு அஜித் அவர்களின் திரைப்பயணத்தில் மைல்கல்லாக அமைந்த படங்களில் மங்காத்தாவும் ஒன்று. 2012 ஆம் ஆண்டில் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளிவந்த படம் தான் மங்காத்தா.

https://twitter.com/DhevVignesh/status/1269478509619052549

இந்த படத்தில் அஜித் குமார், அர்ஜுன், திரிஷா, லட்சுமிராய், அஞ்சலி உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படம் மிகப்பெரிய அளவில் பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்தது. அஜித் அவர்களின் திரைப்பயணத்தில் இந்த படம் முக்கியமான படமாக இருந்தது. இந்த படத்தின் ஓப்பனிங் காட்சியில் ஒரு ஸ்டண்ட் காட்சி செய்யப்பட்டிருக்கும். அந்த ஸ்டன்ட் காட்சியை நடிகர் அஜித் அவர்கள் டூப் போடாமலேயே செய்துள்ளார்.

தற்போது அந்த ஸ்டண்ட் காட்சி வீடியோ சோஷியல் மீடியாவில் வெளியாகி உள்ளது. இதனை தல அஜித் ரசிகர்கள் அனைவரும் ட்ரண்டிங் ஆக்கி வருகிறார்கள். தற்போது தல அஜித் அவர்கள் நேர்கொண்ட பார்வை படத்தின் வெற்றியை தொடர்ந்து வலிமை படத்தில் மும்முரமாக நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பை மிகவும் ரகசியமாக கையாண்டு வருகிறார் இயக்குனர்.

இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக காலா படத்தில் நடித்த ஹீமா குருஷி நடித்து வருகிறார். இந்த படத்தில் தல அஜித் அவர்கள் போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும், மற்ற அஜித் படங்களை போல இந்த படத்திலும் அஜித்தின் பைக் ரேஸ் காட்சிகள் எதிர்பார்க்கப்படுகிறது. அதையும் அஜித் டூப் போடாமல் நடித்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full