கதவை திறந்துவந்து ரசிகர்களை சந்தித்த அஜித் - தல தரிசனத்தால் ஆர்ப்பரித்த ரசிகர்கள். வீடியோ இதோ.

By Rajkumar · 22/10/2022

ரசிகர்களை சந்தித்து அஜித் பேசியிருக்கும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. பல ஆண்டு காலமாக தமிழ் சினிமா உலகில் அல்டிமேட் ஸ்டாராக ஜொலித்து கொண்டு இருப்பவர் அஜித். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்று இருக்கிறது. இதனாலே இவருக்கு தமிழகத்தில் மட்டும் இல்லாமல் உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள்.

சமீபத்தில் வெளியான அஜித்தின் வலிமை படம் ரசிகர்கள் மத்தியில் மிக பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டு இருந்தது. தற்போது வலிமை படத்தை இயக்கிய இயக்குனர் வினோத் குமாரின் மொத்த டீமும் துணிவு படத்திற்கான வேலையில் மும்முரமாக இறங்கி இருக்கிறார்கள். இந்த படம் பல மொழிகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டு இருக்கின்றனர். அதோடு இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் செய்ய இருப்பதாகவும் கூறப்படுகிறது.

துணிவு படம்:

மேலும், இந்த கதையில் அஜித் மிகவும் இன்வால்வ் ஆகி இருப்பதால் அவரது லுக்கை அவரே டிசைன் செய்து இருக்கிறார். அதோடு இந்த படத்தில் அஜித்திற்கு இரட்டை வேடம் என்று கூறப்படுகிறது. இதனால் அஜித் இந்த படத்திற்காக 20 முதல் 25 கிலோ வரை எடை குறைத்து இருக்கிறாராம். இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக மஞ்சுவாரியர் நடிக்கிறார். இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் மலையாள நடிகர் சிஜோய் வர்கீஸ், ஜான் கொகைன், வீரா, சமுத்திரக்கனி உள்பட பலர் நடிக்கிறார்கள்.

படம் குறித்த தகவல்:

இந்த படம் ஒரு வங்கி கொள்ளை சம்மந்தமான கதை என்ற தகவல் அனைவரும் அறிந்த ஒன்று. சமீபத்தில் தான் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இருந்தது. தற்போது இந்த படத்திற்கான பெரும்பாலான காட்சிகள் எடுக்கப்பட்டு விட்டது. இன்னும் சில காட்சிகள் மட்டும்தான் எடுக்க இருப்பதாக கூறப்படுகிறது. அது மட்டும் இல்லாமல் கூடிய விரைவில் இந்த படத்திற்கான போஸ்ட் பிரகடக்சன் பணிகள் எல்லாம் முடிவடைந்து விடும் என்றும் கூறியிருக்கிறார்கள். சமீபத்தில் சென்னை மவுண்ட் ரோட்டில் இந்த படத்தின் சில காட்சிகள் படமாக்கப்பட்டு இருந்தது.

https://twitter.com/AjithKumar_AK__/status/1583464432965136387

வைரலாகும் அஜித் வீடியோ:

அந்த புகைப்படங்கள் எல்லாம் சோசியல் மீடியாவில் வைரலானது. இந்த நிலையில் ரசிகர்களை அஜித் சந்தித்திருக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. அதாவது, அஜித் அவர்கள் கேரவனிலிருந்து வெளியே வரும்போது ரசிகர்கள் அவரை பார்த்து உற்சாகத்தில் கூச்சலிட்டு இருக்கிறார்கள். உடனே, அஜித் அவர்களும் ரசிகர்களை பார்த்து கைகாட்டி தம்சப் செய்து வணக்கம் தெரிவித்திருக்கிறார். இந்த வீடியோவை தான் தற்போது ரசிகர்கள் வைரல் ஆகி வருகிறார்கள்.

behindtalkies AMP · Quick view
View full