அஜித் படம்னு நடிச்சேன், வீரம் படத்தால் என் கேரியரே பாதிக்கப்பட்டுவிட்டது - புலம்பிய நடிகை
அஜித் படத்தால் தான் தன்னுடைய கேரியர் பாதிக்கப்பட்டது என்று நடிகை மனோ சித்ரா அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகைகளில் மனோ சித்ராவும் ஒருவர். இவர் தமிழ் மொழியில் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம் போன்ற பிறமொழி படங்களிலும் நடித்திருக்கிறார். இவர் 2009 ஆம் ஆண்டு வெளிவந்த இன்னொருவன் என்ற படத்தின் மூலம் தான் தமிழில் அறிமுகம் ஆகி இருந்தார்.
அதற்குப் பின் இவர் அவள் பெயர் தமிழரசி, நீர் பறவை, வீரம் போன்ற படங்களில் எல்லாம் நடித்திருந்தார். இருந்தாலுமே இவருக்கு தமிழில் எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பு கிடைக்கவில்லை. கடைசியாக இவர் 2016 ஆம் ஆண்டில் அந்தமான் என்ற படத்தில் நடித்திருந்தார். அதனை தொடர்ந்து இவர் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். மேலும், இவரை மக்கள் மத்தியில் பிரபலமாக்கியது வீரம் படத்தின் மூலம் தான்.
வீரம்:
இயக்குனர் சிவா இயக்கத்தில் 2014 ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளியாகியிருந்த படம் வீரம். இந்த படத்தில் தமன்னா, வித்தார்த், பாலா, சந்தானம், நாசர், ரமேஷ் கண்ணா, தம்பி ராமையா உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படத்தில் தமன்னாவின் தோழியாக அனிதா என்ற ரோலில் மனோ சித்ரா நடித்திருந்தார்.
https://www.youtube.com/watch?v=t01QWcpUti8
மனோ சித்ரா பேட்டி:
இதை அடுத்தும் இவர் படங்களில் நடித்தார். இருந்தாலும் இவருக்கு எதிர்பார்த்த அளவில் படங்கள் எதுவும் அமைக்கவில்லை. இந்த நிலையில் சமீபத்தில் அடித்த பேட்டியில் மனோ சித்ரா, வீரம் படத்தினுடைய படப்பிடிப்பு பல இடத்தில் நடந்தது. இந்த படத்தில் எப்படியாவது நன்றாக நடித்து பெரிய நடிகையாக வரவேண்டும் என்று குறிக்கோளுடன் இருந்தேன். ஆனால், படப்பிடிப்பின் போது எனக்குள் பல கேள்விகள் வந்தது., காரணம் படத்தின் கதையை என்னிடம் சொல்லும்போது தமன்னா பாதியிலேயே இறந்து விடுவார்.
"வீரம் படத்தால் என் வாழ்க்கையே காலி.." அஜித் பட பிரபல நடிகை பகீர் பேட்டி https://t.co/R2RkJeUsV1#ajith #veeram #actressmanochithra #manochithra
— Thanthi TV (@ThanthiTV) February 7, 2025
அஜித் படம் குறித்து சொன்னது:
நீங்கள் தான் அஜித்திற்கு ஜோடி என்றெல்லாம் சொன்னார்கள். ஆனால், அதெல்லாம் பொய் என்று படப்பிடிப்பிற்கு வந்த பிறகுதான் எனக்கு தெரிந்தது. அதனால் தான் நான் படத்தில் நடிக்க மறுத்து கிளம்ப முடிவெடுத்தேன். பின்னர் எல்லோரும் என்னை சமாதானம் செய்தார்கள். ஆனால், நான் இரண்டு நாட்களில் அங்கிருந்து கிளம்பி விட்டேன். அதற்குப்பின் சில நாட்கள் கழித்து இரண்டு நாட்கள் மட்டும் நடித்துவிட்டு செல்லுங்கள் என்று பட குழுவினர் என்னிடம் கேட்டுக் கொண்டார்கள்.
விடாமுயற்சி:
நான் அஜித் சாருக்காக தான் நடித்தேன். வீரம் படத்தால் தான் தமிழ் சினிமாவில் என்னுடைய கேரியர் பாதித்தது என்று கூறியிருந்தார். தற்போது அஜித் அவர்கள் இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் ‘விடா முயற்சி’ என்ற படத்தில் நடித்திருக்கிறார். இந்தப் படத்தில் அஜித்துடன் த்ரிஷா, ஜெரினா கஸான்ட்ரா, அர்ஜுன், ஆரவ் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இப்படத்திற்கு அனிருத் இசை அமைத்திருக்கிறார். இந்த படம் ரசிகர்கள் மத்தியிலும் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது.