'நேர்கொண்ட பார்வை' படத்தில் நான் நடிக்க இது தான் காரணம் - நடிகர் அஜித்குமார் ஓபன் டாக்

By subhashini · 3/5/2025

நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்த காரணம் குறித்து நடிகர் அஜித்குமார் அளித்து இருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த சில தினங்களாகவே அஜித் பத்ம பூஷன் விருது வாங்கி செய்தி தான் இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. 2025 ஆம் ஆண்டுக்கான கலைத்துறையில் சிறந்து விளங்கிய நடிகர் அஜித்துக்கு டெல்லியில் தான் பத்ம விருது விழா நடைபெற்றது. இந்த விருதை வாங்க அஜித் தன்னுடைய குடும்பத்துடன் சென்று இருந்தார்.

டெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில் குடியரசு தலைவர் கையால் அஜித் விருதை வாங்கி இருந்தார். இதற்கு பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் பாராட்டி இருந்தார்கள். இப்படி இருக்கும் நிலையில் பத்மபூஷன் விருது வாங்கியதை அடுத்து நீண்ட நாட்களுக்குப் பிறகு பிரபல ஊடகத்திற்கு அஜித்குமார் பேட்டி ஒன்று அளித்திருந்தார். அதில் அஜித், நான் பிங்க் திரைப்படத்தை தமிழில் ரீமேக் செய்ததற்கு காரணம் இருக்கிறது. பிங்க் படத்தின் ரீமேக் தான் நேர்கொண்ட பார்வை.

அஜித் பேட்டி:

இந்த படத்திற்கு முன்னாடி வெளிவந்த என்னுடைய சில படங்கள் என்னை குற்ற உணர்ச்சி அடைய செய்தது. பெண்களை ஸ்டாக்கிங் செய்வது போன்ற விஷயங்கள் எல்லாம் என்னுடைய படங்களில் வைத்து போல இருந்தது. வில்லன்கள் கதாநாயகிகளை தொந்தரவு செய்வது, கதாநாயகன் சென்று அவர்களை காப்பாற்றுவது, காதல் என்ற பெயரில் கதாநாயகன் கதாநாயகிகளை தொந்தரவு செய்வது போன்ற கான்செப்ட் எல்லாம் என்னுடைய படங்களில் தொடர்ந்து கொண்டிருந்தது.

https://www.youtube.com/watch?v=l34JLiG7M4Q

பிங்க் படம் பற்றி சொன்னது:

நாங்கள் திரையில் செய்யும் விஷயங்களை தான் மக்கள் பாலோ செய்ய நினைப்பார்கள். இதனால் நான் என்னுடைய முந்தைய படங்களில் செய்த தவறுகளை சரி செய்வதற்கு தான் பிங்க் படம் ஒரு வழியாக அமைந்தது. அந்த படத்தை நான் ரீமேக் செய்ததை நினைத்து ரொம்ப சந்தோஷப்படுகிறேன். நான் இப்போது கதாபாத்திரங்களை செய்வது செய்வதில் கவனமாக இருக்கிறேன். இதே எண்ணத்தில் தான் தயாரிப்பாளர்களையும் இயக்குனர்களையும் நான் சந்திக்கிறேன்.

ஓய்வு பற்றி சொன்னது:

இது எனக்கு சந்தோசத்தை கொடுக்கிறது. மேலும், நான் எப்போது ஓய்வை அறிவிப்பேன் என்பதை திட்ட முடியாது. நான் ஓய்வை அறிவிக்கும் சூழலுக்கு ஒரு வேலை தள்ளப்படலாம் என்று கூறியிருக்கிறார். மேலும், சமீபத்தில் நடிகர் அஜித் அந்த குட் பேட் அக்லி என்ற படத்தில் நடித்து இருக்கிறார். இந்த படத்தை ஆதிக் ரவிசந்திரன் இயக்கி இருக்கிறார். அது மட்டும் இல்லாமல் இவர் அஜித் உடைய தீவிர ரசிகர். இந்தப் படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்து இருக்கிறது.

அஜித் திரைப்பயணம்:

இந்த படத்தில் அஜித்துடன் திரிஷா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரசன்னா உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். மேலும், இந்த படத்தில் வின்டேஜ் பாடல்கள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இதை ரசிகர்களும் கொண்டாடி வருகிறார்கள். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது மட்டும் இல்லாமல் நல்ல வசூலும் செய்து இருந்தது. இதை அடுத்து அஜித் அவர்கள் தன் கார் ரேஸில் கவனம் செலுத்தி வருகிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full