லியோ படத்தை முடித்த விஜய், விடாமுயற்சி படத்தை மீண்டும் டீலில் விட்ட அஜித் - முழிக்கும் மகழ்.

By Manikandan · 19/7/2023

அஜித்தின் விடாமுயற்சி படம் குறித்த புதிய அப்டேட் தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. கோலிவுட்டில் 90 காலகட்டத்தில் தொடங்கி தற்போது வரை தனது உழைப்பினால் உயர்ந்து அல்டிமேட் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் திகழ்ந்து கொண்டு இருப்பவர் அஜித். இவர் திரைப்படங்களில் மட்டும் இல்லாமல் துப்பாக்கி சுடுதல் , கார் மற்றும் பைக் ஓட்டுவதிலும் மிகுந்த ஆர்வம் கொண்டவர். அதற்காக இவர் பல விருதுகளையும் வாங்கியிருக்கிறார்.

மேலும், இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்று இருக்கிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு வெளியான அஜித்தின் வலிமை படம் ரசிகர்கள் மத்தியில் மிக பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டு இருந்தது. வலிமை படத்தை இயக்கிய இயக்குனர் வினோத் குமாரின் மொத்த டீமும் துணிவு படத்தை எடுத்து இருக்கிறார்கள். இந்த துணிவு திரைப்படம் கடந்த மாதம் ஜனவரி 11ஆம் தேதி வெளியானது. இப்படத்தில் மஞ்சு வாரியார், சமுத்திரக்கனி, சதிஷ், பாவனி, அமீர் போன்றவர்கள் நடித்திருந்தார்கள்.

துணிவு படம்:

மேலும், இந்த படத்தை ரெட் ஜெயின்ட்ஸ் நிறுவனம் திரையரங்குளில் வெளியிட்டது. இப்படம் விமர்சன ரீதியாக வெற்றியடைந்து விட்டது என்று கூட கூறியிருந்தனர். அதோடு இந்த படம் தமிழகத்தில் மட்டும் 135 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்ததாக கூறப்படுகிறது. இதனை அடுத்து அஜித் அவர்கள் ஏகே 62 படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை முதலில் விக்னேஷ் சிவன் தான் இயக்க இருந்தது. அதற்கான அறிவிப்புகள் எல்லாம் வெளியாகியிருந்தது. பின் இந்த படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் விலகிவிட்டார் என்று கூறப்பட்டது.

ஏகே 62 படம்:

அதன் பின் அஜித்தின் ஏகே 62 படத்தை இயக்குனர் மகிழ்திருமேனி இயக்க இருப்பதாக அதிகாரப்பூர் அறிவிப்பு வெளியானது. அது மட்டும் இல்லாமல் இந்த படத்திற்கு அனிரூத் இசையமைக்கிறார். மேலும், விக்னேஷ் சிவன் படத்திலிருந்து விலகி விட்டார்கள். அதன் பின் அஜித்தின் ஏகே 62 படத்தை இயக்குனர் மகிழ்திருமேனி இயக்க இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. அது மட்டும் இல்லாமல் இந்த படத்திற்கு அனிரூத் இசையமைக்கிறார். மேலும், நடிகர் அஜித்தின் பிறந்த நாளை முன்னிட்டு படத்தினுடைய டைட்டில் போஸ்ட்டர் வெளியாகி இருக்கிறது. இந்த படத்திற்கு விடா முயற்சி என்று பெயரிடப்படுகிறது. இந்த படத்தின் டைட்டிலைத் தவிர்த்து வேறு எந்த அப்டேட்டும் வெளிவரவில்லை.

விடா முயற்சி படம் குறித்த தகவல்:

அது மட்டும் இல்லாமல் ஷூட்டிங் எப்போது என்றெல்லாம் ரசிகர்கள் கேட்டுக் கொண்டே வருகிறார்கள். இந்த நிலையில் விடா முயற்சி படம் குறித்த புதிய அப்டேட் தற்போது வெளியாகி இருக்கிறது. அதாவது, அஜித் அவர்கள் சில வாரங்களாகவே ஐரோப்பிய சுற்றுப்பயணம் சென்றிருப்பது அனைவரும் அறிந்ததே. அப்போது அஜித்திடம் இயக்குனர் மகிழ்திருமேனி கால் செய்து படத்தின் கதையை சொல்லி இருக்கிறார். ஆனால், அஜித் ஓன் லைன் கதை கேட்டு பிடித்து விட்டதாக கூறியிருந்தார். பின் முழு கதையும் ரெடியான பிறகு அஜித் சில திருத்தங்களை சொல்லி இருக்கிறார்.

படம் குறித்த அப்டேட்:

அதில் பல சீன்கள் அவருக்கு பிடிக்கவில்லை. இதனால் வேறு ஒரு கதையை இயக்குனர் வேகமாக தயார் செய்து வருகிறாராம். மேலும், இந்த மாதமே இந்த படத்தினுடைய படப்பிடிப்பு துவங்கும் என்று எதிர்பார்க்கும் நிலையில் தற்போது கதை தயாராக இல்லை என்பதால் அடுத்த மாதம் ஆகஸ்ட் மாதத்தில் படப்பிடிப்பு தொடங்கும் என்று உறுதியாக கூறப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் இந்த படத்திற்காக அஜித் அவர்கள் லண்டனில் வெளிநாட்டு பிட்னஸ் பயிற்சியாளர்கள் மேற்பார்வையில் உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாகி வருகிறார். இந்த படத்தில் ஒரு புது அஜித்தை எதிர்பார்க்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும் படத்தினுடைய கதை முழுமையாக தயாரானவுடன் அஜித் படப்பிடிப்பிற்கு வந்து விடுவார் என்று கூறப்படுகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full