'இது தான் உடல் எடைய கொறச்சதா' - அஜித்தின் லேட்டஸ்ட் லுக்கை கலாய்க்கும் விஜய் ரசிகர்கள். வைரலாகும் மீம்கள்.

By Rajkumar · 27/7/2022

தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் அஜித். அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து இரண்டு வருட காத்திருப்புக்கு பிறகு வலிமை படம் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியாகி இருந்தது. நேர்கொண்ட பார்வை படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் வினோத் அவர்கள் அஜித்தை வைத்து வலிமை படத்தை இயக்கி இருந்தார். இதையும் போனிகபூரே தயாரித்து உள்ளார். இந்த படத்தில் ஹூமா குரேஷி, கார்த்திகேயா உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தனர். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை தான் கொடுத்து இருந்தது.

https://twitter.com/TVC_OFFL/status/1551917654549692416

இப்படி இருக்கும் நிலையில் வலிமை படத்தை தொடர்ந்து இயக்குனர் வினோத் குமாரின் மொத்த டீமும் ‘ஏகே 61’ படத்திற்கான வேலையில் மும்முரமாக இறங்கி இருக்கிறார்கள். ‘ஏகே 61' படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் வருகிற மார்ச் 9ஆம் தேதி முதல் துவங்க உள்ளது. இதற்கான பிரம்மாண்ட அரங்கை ஒரு மாதமாக படக்குழுவினர் அமைத்து வருகிறார்கள். மேலும், இந்த படத்தில் படத்தில் ஹீரோயினாக தபு கமிட் செய்திருக்கிறார். அதுமட்டும் இல்லாமல் வலிமை படம் ஐந்து மொழிகளில் வெளியானதை போல இந்த படத்தையும் பல மொழிகளில் வெளியிடத் திட்டமிட்டு இருக்கின்றனர்.

மீண்டும் வினோத் இயக்கத்தில் அஜித் :

இந்த படத்தின் படப்பிடிப்பு மார்ச்சில் தொடங்கி இந்த ஆண்டு தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய இருப்பதாகவும் படக்குழு திட்டமிட்டிருக்கிறார்கள். இந்த கதையில் அஜித் மிகவும் இன்வால்வ் ஆகி இருப்பதாகவும், அவரது லுக்கை அவரே டிசைன் செய்து இயக்குனரிடம் காட்டி இருப்பதாகவும் கூறப்படுகிறது. அப்படியே இந்த படத்திற்கான பிற நடிகர்களின் தேர்வுகளும் நடந்து கொண்டிருக்கின்றது.

https://twitter.com/Master_Mahiiii/status/1551891996213620736

அஜித்தின் உடல் எடை குறைப்பு :

டெக்னீசியன்கள் டீமில் ஒளிப்பதிவாளர் நீரவ்ஷா, ஸ்டண்ட் மாஸ்டராக திலிப் சுப்புராயன் இருப்பதாக கூறப்படுகிறது.இவர்களுடன் இந்த படத்தில் பிக்பாஸ் புகழ் நடிகர் கவின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். அதுமட்டும் இல்லாமல் அஜீத் அவர்கள் ஏகே 61 படத்திற்காக 25 கிலோ உடல் எடையை குறைக்க திட்டமிட்டிருப்பதாகவும், தற்போது அதற்காக 10 கிலோ எடையை குறைத்துள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இதற்காகவே தனி பயிற்சியாளரை அஜித் நியமித்திருக்கிறார்.

அஜித்தின் லேட்டஸ்ட் லுக் :

சமீபத்தில் வெளிநாட்டில் பைக் ரைட் சென்றிருந்தார். அங்கிருந்து அஜித் எடுத்துகொண்ட பல புகைப்படங்கள் வெளிவந்தது. அதை தொடர்ந்து தற்போது துப்பாக்கி சூட்டில் களமிறங்யுள்ளார் அஜித். ஆம், தற்போது திருச்சியில் நடைபெறவிருக்கும் துப்பாக்கி சூடு போட்டியில் கலந்துகொள்ள திருச்சி சென்றுள்ளார். அங்கிருந்து எடுக்கப்பட்ட வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. அதில் அஜித்தின் உடல் மீண்டும் கொண்டாக இருப்பதை கண்டு அஜித் ரசிகர்களே கவலைகொண்டு இருக்கின்றனர்.

கேலிக்கு உள்ளான அஜித்தின் லுக் :

இதனால் பலரும் 'ஓடம்ப கொற நா' என்று RRR படத்தின் பிரபலமான டெம்ப்ளட்டை போட்டு வருந்தி வருகின்றனர். அஜித் ரசிகர்களே இப்படி என்றால் விஜய் ரசிகர்கள் சும்மா இருப்பார்களா? அஜித்தின் இந்த லுக்கை கேலி செய்து பல விதமான பதிவுகளை போட்டு வருகின்றனர். மேலும், இது தான் உடல் எடையை கொறைத்ததா என்றெல்லாம் கேள்விகளை எழுப்பி கேலி செய்து வருகின்றனர்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full