10 கிலோவை கொறச்சதுக்கு இப்படி இருக்காரே, இன்னும் 25 கிலோ கொறச்சா - வெளியான அஜித்தின் லேட்டஸ்ட் லுக்.

By subhashini · 3/3/2022

தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் அஜித். அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து இரண்டு வருட காத்திருப்புக்கு பிறகு வலிமை படம் கடந்த மாதம் 24 ஆம் தேதி ரிலீசாகி இருக்கிறது. நேர்கொண்ட பார்வை படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் வினோத் அவர்கள் அஜித்தை வைத்து வலிமை படத்தை இயக்கி இருக்கிறார். இதையும் போனிகபூரே தயாரித்து உள்ளார். இந்த படத்தில் ஹூமா குரேஷி, கார்த்திகேயா உட்பட பல நடிகர்கள் நடித்து உள்ளார்கள். மேலும், படத்தில் அஜித் அவர்கள் அசிஸ்டன்ட் கமிஷனராக நடித்து உள்ளார். சென்னையில் Satan Slave குழுவை சேர்ந்த இளைஞர்கள் பைக்கை வைத்து பல்வேறு குற்றங்களில் ஈடுபடுகின்றார்கள்.

இதை அஜித் கண்டுபிடித்து அந்த கூட்டத்தின் தலைவரை பிடிக்கிறார். இந்த குழுவில் அஜித்தின் தம்பியும் இருப்பது தெரிகிறது. இதையெல்லாம் அஜித் எப்படி சமாளித்து வருகிறார்? என்பது தான் படத்தின் கதை. மேலும், படம் முழுவதும் அஜித்தின் ஒவ்வொரு காட்சிகளும் பிரமிக்க வைக்கும் வகையில் உள்ளது. வலிமை படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதுமட்டும் இல்லாமல் வலிமை படம் வெளியாகி மூன்றே நாளில் 100 கோடி வசூல் செய்திருப்பதாக தகவல் வந்திருக்கிறது.

ஏகே 61 படத்தில் நடிக்கும் நடிகர்கள்:

இப்படி இருக்கும் நிலையில் வலிமை படத்தை தொடர்ந்து இயக்குனர் வினோத் குமாரின் மொத்த டீமும் ‘ஏகே 61’ படத்திற்கான வேலையில் மும்முரமாக இறங்கி இருக்கிறார்கள். ‘ஏகே 61' படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் வருகிற மார்ச் 9ஆம் தேதி முதல் துவங்க உள்ளது. இதற்கான பிரம்மாண்ட அரங்கை ஒரு மாதமாக படக்குழுவினர் அமைத்து வருகிறார்கள். மேலும், இந்த படத்தில் படத்தில் ஹீரோயினாக தபு கமிட் செய்திருக்கிறார். அதுமட்டும் இல்லாமல் வலிமை படம் ஐந்து மொழிகளில் வெளியானதை போல இந்த படத்தையும் பல மொழிகளில் வெளியிடத் திட்டமிட்டு இருக்கின்றனர்.

ஏகே 61 படம் பற்றிய தகவல்:

இந்த படத்தின் படப்பிடிப்பு மார்ச்சில் தொடங்கி இந்த ஆண்டு தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய இருப்பதாகவும் படக்குழு திட்டமிட்டிருக்கிறார்கள். இந்த கதையில் அஜித் மிகவும் இன்வால்வ் ஆகி இருப்பதாகவும், அவரது லுக்கை அவரே டிசைன் செய்து இயக்குனரிடம் காட்டி இருப்பதாகவும் கூறப்படுகிறது. அப்படியே இந்த படத்திற்கான பிற நடிகர்களின் தேர்வுகளும் நடந்து கொண்டிருக்கின்றது. டெக்னீசியன்கள் டீமில் ஒளிப்பதிவாளர் நீரவ்ஷா, ஸ்டண்ட் மாஸ்டராக திலிப் சுப்புராயன் இருப்பதாக கூறப்படுகிறது.

ஏகே 61 படத்திற்காக உடல் எடை குறைத்த அஜித்:

இவர்களுடன் இந்த படத்தில் பிக்பாஸ் புகழ் நடிகர் கவின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். அதுமட்டும் இல்லாமல் அஜீத் அவர்கள் ஏகே 61 படத்திற்காக 25 கிலோ உடல் எடையை குறைக்க திட்டமிட்டிருப்பதாகவும், தற்போது அதற்காக 10 கிலோ எடையை குறைத்துள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இதற்காகவே தனி பயிற்சியாளரை அஜித் நியமித்திருக்கிறார். இந்த நிலையில் அஜித் தன் குடும்பத்துடன் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது.

அஜித் மகனின் பிறந்தநாள்:

குட்டி தல என்று அழைக்கப்படும் அஜித்தின் மகன் ஆத்விக் பிறந்தநாள் சமீபத்தில் கொண்டாடப்பட்டது.
இதில் அஜீத் தனது குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடி இருக்கிறார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. இதில் அஜித் கடுக்கன், தாடியுடன் இருப்பது போன்ற புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இது தான் ஏ கே 61 படத்திற்கான லூக்கா இருக்குமோ? என்று ரசிகர்கள் அனைவரும் கேட்டு வருகிறார்கள். இந்த புகைப்படத்தை ரசிகர்கள் பயங்கர ட்ரெண்டிங் ஆக்கி வருகிறார்கள்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full