தென்னிந்திய திரைப்பட உலகில் வலம் வந்து கொண்டிருக்கும் நட்சத்திரங்களில் ஒருவர் அல்டிமேட் ஸ்டார் அஜித்.அஜித் அவர்களின் நடிப்பில் “தல 60” படத்தின் படப்பிடிப்பு தொடங்கிவிட்டது என்று இணையதளங்களில் அவரின் போலீஸ் கெட்டப்பில் இருக்கும் புகைப்படம் ஜெட் வேகத்தில் வெளியானது. இதனால் தல ரசிகர்கள் உற்சாகத்தில், ஆர்ப்பாட்டத்திலும் இருக்கிறார்கள் என்ற தகவல் வெளிவந்தது.அஜித்தின் அடுத்த படமான தல 60 படத்திலும் தயாரிப்பாளர் போனி கபூர் , இயக்குனர் வினோத் என்று அறிவிக்கப்பட்டது. சமீபத்தில் தல நடிப்பில் வெளியான “விஸ்வாசம், நேர் கொண்ட பார்வை” ஆகிய இரண்டு படங்களும் மக்களிடையே அதிக வரவேற்பையும்,நல்ல வசூலையும் பெற்றுத்தந்தது. இதனை தொடர்ந்து அஜித் அவர்கள் “தல 60” என்ற படத்தில் நடிக்க உள்ளார் என்ற தகவல் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்கள் படக்குழு.

இதனைத் தொடர்ந்து அஜித் அவர்கள் அடுத்தடுத்து படங்களில் கமிட் ஆகியுள்ளார் என்ற தகவலும் வெளிவந்தது. மேலும்,இந்த படத்தின் கதை குறித்து ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு செய்தி இணையங்களில் வருகிறது. ஆனால்,இயக்குனர் வினோத் அவர்கள் இது குறித்து கூறுகையில், இது என்னுடைய கற்பனை கதை தான் என்று கூறியிருந்தார். தல 60 படத்தில் அஜித் அவர்கள் ஃபிட்டாக இருக்க வேண்டும் என்று இயக்குனர் கூறியிருந்தார். அதற்காக அவர் கடுமையாகவும், தீவிரமாக உடற்பயிற்சியில் இறங்கினார். மேலும், இந்த படத்தில் தல அஜீத் செம்ம மாஸாக இருக்க போகிறார் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். அதுமட்டுமில்லாமல், இந்த படத்திற்காக அவர் அதிக உடற்பயிற்சி எடுத்து பிட்னஸ் ஆக இருக்கிறார் என்ற தகவலும் பரவி வருகிறது. மேலும், அவருடைய இந்த புதிய பிட்னஸ் லுக்கை பார்க்க ரசிகர்கள் வெறித்தனமாக உள்ளனர் என்ற தகவலும் வெளிவந்துள்ளது.

இதையும் பாருங்க : ‘A’ என்ற வார்த்தையில் முடியும் நபர் தான் வின்னரா.! ட்வீட் செய்த முக்கிய பிரபலம்.!

Advertisement

இதுகுறித்து தல 60 படத்தில் அஜித் குமார் கார் ரேஸர் மற்றும் போலீஸ் அதிகாரியாக இருவேடங்களில் நடிக்க உள்ளார் என்ற தகவலும் வெளிவந்தது. இந்த படத்திற்கு தல 60 என்று தற்போது பெயர் வைத்து உள்ளார்கள்.மேலும் தல 60 படத்திற்காக அஜித் குமார் உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக அழகான தோற்றத்திலும் காட்சியளிக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது. இதற்காக தினமும் 6 மணி நேரம் ஜிம்மில் ஒர்க் அவுட் செய்கிறாராம் அஜித். நீண்ட காலத்திற்குப் பிறகு அஜித்தின் தலை முடியை கருமையாகவும், இளமையான தோற்றத்தில் இருக்கிறார் என்ற தகவல்கள் வெளிவந்தன.இந்த புகைப்படத்தை பார்த்த உடன் தல ரசிகர்கள் தல 60 என்ற ஹாஸ்டேக்கை போட்டு தல கிளம்பிட்டார் என்று பல கருத்துகளை பதிவிட்டும் , மேலும் தல 60 படத்தை குறித்து அப்டேட்களை பதிவிட்டும் வந்திருந்தனர்

இது குறித்து படக்குழுவினர் கூறியது,இந்த தல 60 படத்தில் அதிரடி சண்டை காட்சிகளும், கார் பந்தயமும், மோட்டார் பைக் பந்தய காட்சிகளும் இடம் பெறும். இது தல ரசிகர்களுக்கு மாபெரும் விருந்தாகும். ஆனால் அஜித்தின் படத்தில் தோற்றம் குறித்து இன்னும் அறிவிக்கப்படவில்லை. இப்போதுதான் தல 60 படத்திற்கான நடிகர்கள், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு செய்து வருகிறோம். எல்லா பணிகளும் முடிந்த பின்பு அதிகாரப்பூர்வமாக மீடியாக்களில் அறிவிப்போம் என்று கூறினர்.படம் ஆரம்பமாகும் தேதி குறித்து அறிவிப்போம் என்று கூறினர்.ஆனால் போலீஸ் அதிகாரி சீருடையில் அவர் பைக்கில் செல்வது போன்ற புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிக் கொண்டு வருகிறது. ரசிகர்கள் பலர் இதுதான் அஜித்குமாரின் கதாபாத்திரமா?? என்று பல குழப்பத்திலும், சந்தேகத்திலும் உள்ளனர்.

Advertisement

இந்த படத்தின் கதாநாயகியாக நடிக்க நயன்தாராவிடம் கேட்டதற்கு அவருக்கு கால்ஷீட் இல்லை என்று கூறியதால், பிரபல இந்தி நடிகையை தேர்வு செய்து உள்ளார் என்று குறிப்பிடப்படுகிறது. படத்தில் அஜீத் இரண்டு குழந்தைகளின் தந்தையாக நடிக்க உள்ளார் என்றும் அதில் ஒரு குழந்தை ஏற்கனவே அஜித்துடன் இரண்டு படங்களில் நடித்த அனிகா சுரேந்திரன் என்ற தகவலும் வெளிவந்தது .வில்லன் வேடத்தில் இந்தி நடிகர் அக்ஷய்குமார், அஜய் தேவ்கான் அவர்களில் ஒருவர் நடிக்க உள்ளார் என்ற தகவலும் வெளிவந்தன.

Advertisement

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Advertisement