நண்பனின் பிறந்தநாளுக்கு வந்த அஜித், Selfie கேட்ட ஊழியரிடம் சொன்ன விஷயம். வைரலாகும் வீடியோ.

By subhashini · 23/9/2023

ரசிகருக்கு அஜித் போட்டிருக்கும் அன்பு கட்டளை குறித்த லேட்டஸ்ட் வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. கோலிவுட்டில் 90 காலகட்டத்தில் தொடங்கி தற்போது வரை தனது உழைப்பினால் உயர்ந்து அல்டிமேட் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் திகழ்ந்து கொண்டு இருப்பவர் அஜித். இவர் திரைப்படங்களில் நடிப்பது மட்டும் இல்லாமல் துப்பாக்கி சுடுதல் , கார் மற்றும் பைக் ஓட்டுவதிலும் மிகுந்த ஆர்வம் கொண்டவர்.

அதற்காக இவர் பல விருதுகளையும் வாங்கியிருக்கிறார். மேலும், இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்று இருக்கிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு வெளியான வலிமை படம் ரசிகர்கள் மத்தியில் மிக பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டு இருந்தது. வலிமை படத்தை இயக்கிய இயக்குனர் வினோத் குமாரின் மொத்த டீமும் துணிவு படத்தை எடுத்து இருக்கிறார்கள். இந்த துணிவு திரைப்படம் கடந்த மாதம் ஜனவரி 11ஆம் தேதி வெளியானது.

துணிவு படம்:

இப்படத்தில் மஞ்சு வாரியார், சமுத்திரக்கனி, சதிஷ், பாவனி, அமீர் போன்றவர்கள் நடித்திருந்தார்கள். மேலும், இந்த படத்தை ரெட் ஜெயின்ட்ஸ் நிறுவனம் திரையரங்குளில் வெளியிட்டது. இப்படம் வசூல் ரீதியாக வெற்றியடைந்து விட்டது என்று கூட கூறியிருந்தனர். இதனை அடுத்து அஜித் அவர்கள் ஏகே 62 படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை முதலில் விக்னேஷ் சிவன் தான் இயக்க இருந்தது. அதற்கான அறிவிப்புகள் எல்லாம் வெளியாகியிருந்தது.

View this post on Instagram

A post shared by Behind Talkies (@behindtalkies)

ஏகே 62 படம்:

பின் இந்த படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் விலகிவிட்டார் என்று கூறப்பட்டது. அதன் பின் அஜித்தின் ஏகே 62 படத்தை இயக்குனர் மகிழ்திருமேனி இயக்க இருப்பதாக அதிகாரப்பூர் அறிவிப்பு வெளியானது. அது மட்டும் இல்லாமல் இந்த படத்திற்கு அனிரூத் இசையமைக்கிறார். மேலும், நடிகர் அஜித்தின் பிறந்த நாளை முன்னிட்டு இந்த படத்திற்கு விடா முயற்சி என்ற பெயரிடப்பட்ட போஸ்டர் வெளியாகி இருந்தது. இந்த படம் பயணம் சார்ந்த கதையாக இருக்கும் என்று ரசிகர்கள் கூறுகின்றனர். அதோடு இந்த படத்தில் முதல் முறையாக அஜித் பாட இருப்பதாகவும் கூறப்படுகிறது.

படம் குறித்த தகவல்:

மேலும், இந்த படத்திற்காக அஜித் அவர்கள் லண்டனில் வெளிநாட்டு பிட்னஸ் பயிற்சியாளர்கள் மேற்பார்வையில் உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாகி வருகிறார். இந்தப் படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. தற்போது இந்த படத்தின் முதற்கட்ட பணிகள் நடைபெற்று வருவதாக சோசியல் மீடியாவில் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்த படத்தில் நடிக்க திரிஷா, தமன்னா, சஞ்சய் தத் , அர்ஜுன் தாஸ் போன்ற பல பேரிடமும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அக்டோபரில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று கூறப்படுகிறது.

அஜித் லேட்டஸ்ட் வீடியோ:

இந்நிலையில் அஜித்தின் லேட்டஸ்ட் வீடியோ தான் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. அதாவது, சமீபத்தில் அஜித், தனது நண்பர் அஜித் நம்பியாரின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்துகோலா சென்னையில் உள்ள ஹில்டன் ஓட்டல் ஒன்றிற்கு சென்றிருக்கிறார். அப்போது அஜித்தை பார்த்த ரசிகர்கள் அவரை சூழ்ந்து ஃபோட்டோ எடுக்க முயற்சி செய்திருக்கிறார்கள். அதில் ரசிகர் ஒருவர் அஜித்திடம் போட்டோ எடுக்க கேட்டிருக்கிறார். அதற்கு அஜித், போட்டோ எடுக்காதீங்க என்று அன்பாக கூறியிருக்கிறார். இருந்தாலும் அவருடைய ரசிகர்கள் வீடியோ எடுத்து சென்று கொண்டிருந்தார்கள். தற்போது இது தொடர்பான வீடியோ தான் இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

behindtalkies AMP · Quick view
View full