470 நாட்களாக அப்டேட் இல்லாமல் காத்திருக்கும் ரசிகர்கள் - 10 நிமிடம் பேசிய ரசிகரிடம் தேதியோடு அப்டேட் பற்றி பேசியுள்ள அஜித்.

By Rajkumar · 4/2/2021

தமிழ் சினிமா உலகில் அல்டிமேட் ஸ்டாராக ஜொலித்து கொண்டு இருப்பவர் நடிகர் அஜித். கடந்த ஆண்டு அஜித் அவர்களின் நடிப்பில் வெளிவந்த ‘விஸ்வாசம் மற்றும் நேர்கொண்ட பார்வை’ ஆகிய இரண்டு படமுமே மக்களிடையே நல்ல வரவேற்பையும், வசூலையும் பெற்றது. அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தின் மாஸ் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் வினோத்தும், தயாரிப்பாளர் போனிகபூர் இருவரும் மீண்டும் இணைந்து தல அஜித்தை வைத்து “வலிமை” படத்தை உருவாக்கி வருகிறார்கள்.இந்த படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவாளராக உள்ளார். அதோடு நேர்கொண்ட பார்வை படத்தில் பணியாற்றிய அதே குழுவினரே அஜித்தின் வலிமைப் படத்திலும் பணியாற்றுகிறார்கள்.

https://twitter.com/one_ranjith/status/1357212863903846400

தமிழ் சினிமா உலகில் அல்டிமேட் ஸ்டாராக ஜொலித்து கொண்டு இருப்பவர் நடிகர் அஜித். கடந்த ஆண்டு அஜித் அவர்களின் நடிப்பில் வெளிவந்த ‘விஸ்வாசம் மற்றும் நேர்கொண்ட பார்வை’ ஆகிய இரண்டு படமுமே மக்களிடையே நல்ல வரவேற்பையும், வசூலையும் பெற்றது. அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தின் மாஸ் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் வினோத்தும், தயாரிப்பாளர் போனிகபூர் இருவரும் மீண்டும் இணைந்து தல அஜித்தை வைத்து “வலிமை” படத்தை உருவாக்கி வருகிறார்கள்.இந்த படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவாளராக உள்ளார்.

இதையும் பாருங்க : முதன் முறையாக தனது அம்மாவோடு புகைப்படத்தை பதிவிட்ட குக்கு வித் கோமாளி புகழ்.

அதோடு நேர்கொண்ட பார்வை படத்தில் பணியாற்றிய அதே குழுவினரே அஜித்தின் வலிமைப் படத்திலும் பணியாற்றுகிறார்கள்.இப்படி ஒரு நிலையில் வலிமை படத்தின் அப்டேட் தாமதவாமதால் கடுப்பான அஜித் ரசிகர்கள் மதுரையில் வலிமை அப்டேட் காணவில்லை என்று போஸ்டர் கூட அடித்தனர். இதை தொடர்ந்து 'வலிமை' பட அப்டேட் குறித்து அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். அஜித்தும் போனி கபூரும் இணைந்து 'வலிமை' படத்தின் அப்டேட் குறித்து முடிவெடுப்பார்கள். முறையான அறிவிப்பு வரும் வரை காத்திருக்கவும், அவர்களது முடிவுக்கு மதிப்பு தரவும் என்று குறிப்பிட்டு இருந்தார்.

https://twitter.com/sonusoodharish/status/1357212967868145665

வலிமை படத்தின் அதிகாரபூர்வ அப்டேட் வந்து கிட்டத்தட்ட 470 நாட்களுக்கு மேல் ஆகிவிட்டது. அதாவது கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகள். இப்படி ஒன்றரைவருடமாக வலிமை அப்டேட்டிற்காக காத்திருக்கும் அஜித் ரசிகர்களுக்கு ஒரு இன்பச் செய்தி வெளியாகியுள்ளது. சமீபத்தில் அஜித்தை ரசிகர் ஒருவர் சந்தித்து உள்ளார். 10 நிமிடம் அஜித்துடன் இருந்த அந்த ரசிகர் வலிமை அப்டேட் எப்போது வரும் என்று கேட்டதற்கு இந்த மாதம் இறுதியில் வரும் என்று அஜித் கூறியுள்ளாராம்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full