ரசிகர்கள் தான் முக்கியம்.!நடுரோட்டில் அமர்ந்த அஜித்.! வைரலாகும் புதிய வீடியோ.!

By Rajkumar · 13/2/2019

கடந்த சில நாட்களுக்கு முன்னர் தல அஜித் துப்பாக்கி சுடுதல் பயிற்சயில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் போது அங்கே வந்த ரசிகர்கள் சிலர் நாங்கள் 5 மணி நேரமாக காத்துக்கொண்டிருக்குகிறோம் ஒரே ஒரு புகைப்படம் மட்டும் எடுத்துக்கொள்கிறோம் தல என்று தொல்லை செய்து கொண்டிருந்தனர்.

https://twitter.com/ajithFC/status/1095363404393398272

பொதுவாக புகைப்படம் எடுக்க கேட்டால் பக்குவமாக சொல்லும் அஜித் இம்முறை ரசிகர்களை பார்த்து இங்கிருந்து போய் விடுங்கள் என்பது போல கை எடுத்து கும்பிடு போட்டார். மேலும், அஜித்தின் பயிற்சியாளரும் ரசிகர்களிடம் இதுக்கு பயந்து கொண்டு தான் அவர் வருவதே இல்லை. அவரை கொஞ்சம் பிராக்டீஸ் எடுக்க விடுங்க என்று கூறினார்.

இந்த வீடியோ சமூக வளைத்தளத்தில் வைரலாக பரவ ரசிகர்களுடன் அஜித் புகைப்படம் எடுக்க மறுத்து விட்டார் என்று பலரும் விமர்சித்தனர். இந்நிலையில் அதே துப்பாக்கி சுடுதல் பயிற்சயில் பங்கேற்றுவிட்டு வெளியே வந்த அஜித் ரசிகர்கள் கேட்டதற்காக நடு ரோட்டில் அமர்ந்து புகைப்படம் என்றுதுகொண்டுள்ளார். இதன் மூலம் அவருக்கு ரசிகர்கள் தான் முக்கியம் என்பதை நிரூபித்துள்ளார் அஜித்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full