தனது ரோல் மாடலின் புகைப்படத்துடன் செல்ஃபி எடுத்துக்கொண்ட அஜித் - அவரை பற்றி அன்றே அஜித் சொன்ன வீடியோ இதோ

By subhashini · 21/9/2024

தன்னுடைய ரோல் மாடல் உடன் அஜித் எடுத்து இருக்கும் புகைப்படம் தான் தற்போது இணையத்தில் வைரலாக்கப்பட்டு வருகிறது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டுகாலமாக அல்டிமேட் ஸ்டார் ஆக ஜொலித்துக் கொண்டிருப்பவர் அஜித். இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அதிக வசூலையும் பெற்று தந்திருக்கின்றது. மேலும், இவர் நடிப்பை தாண்டி கார் ரேஸிங் மீதும் அதிக ஆர்வம் கொண்டவர்.

இது அனைவருக்குமே தெரியும். இவர் சினிமாவில் நுழையும்போது இருந்தே கார் ரேசிங்கில் கவனம் செலுத்தி வருகிறார். இவர் சர்வதேச அளவில் பல்வேறு பார்முலா ரேஸ் பந்தயத்தில் கூட கலந்து கொண்டு இருக்கிறார். அதோடு இவரது படங்கள் என்றாலே கண்டிப்பாக பைக் அல்லது கார் ஓட்டும் காட்சிகள் நிச்சயம் இடம் பெற்றுவிடும். அது மட்டும் இல்லாமல் பைக் ரைடிங், துப்பாக்கி சுடுதல் போன்ற மற்ற பல விஷயங்களிலும் அஜித் அதிக ஆர்வம் கொண்டு இருக்கிறார்.

அஜித் லேட்டஸ்ட் புகைப்படம்:

இப்படி இருக்கும் நிலையில் தற்போது அஜித் தன்னுடைய தன்னுடைய ரோல் மாடல் Ayrton Senna புகைப்படத்துடன் நின்று அஜித் செல்பி எடுத்து இருக்கிறார். இதை தான் ரசிகர்கள் தற்போது இணையத்தில் வைரலாக்கி வருகிறார்கள். மேலும், அஜித் அவர்கள் தன்னுடைய ரோல் மாடல் குறித்து பேட்டி ஒன்று அளித்து இருந்தார். அந்த பேட்டி வீடியோவில், என்னுடைய ரோல் மாடல் Ayrton Senna.

அஜித் பேட்டி வீடியோ:

இவர் பிரேசில் நாட்டை சேர்ந்தவர். இவர் கார் ரேஸர். இவர் மூன்று முறை ஃபார்முலா ஒன் உலக சாம்பியன். பின் இவர் 1994 இத்தாலியில் நடந்த பார்முலா ஒன் ரேஸில் நடந்த விபத்தில் இறந்தார். மேலும், இவர் கார் ரேசர் மட்டும் இல்லை அவர் ஒரு philosophical. அவர் பேச்சு ரொம்ப ஆழமானதாக இருக்கும் என்று கூறியிருந்தார். தற்போது இந்த வீடியோவையும் இணையத்தில் வைரலாக்கி வருகிறார்கள்.

அஜித் திரைப்பயணம்:

கடைசியாக அஜித் அவர்கள் வினோத் இயக்கத்தில் துணிவு என்ற படத்தில் நடித்து இருந்தார். இப்படம் விமர்சன ரீதியாக வெற்றியடைந்தது. தற்போது அஜித்தின் விடாமுயற்சி படத்தை இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கி இருக்கிறார். இந்த படத்திற்கு அனிரூத் இசை அமைக்கிறார். இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக திரிஷா நடிக்கிறார். இவர்களுடன் இந்த திரைப்படத்தில் சஞ்சய் தத், ஆரவ், அர்ஜுன் தாஸ், அருண் விஜய், ஆரவ், உட்பட பல நடிகர்கள் நடிக்கிறார்கள். தற்போது இந்த படத்தின் இறுதி கட்ட பணிகள் நடந்து கொண்டு இருக்கிறது.

அஜித் நடிக்கும் படம்:

இதை அடுத்து அஜித் அவர்கள் குட் பேட் அக்லி என்ற படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் தான் இயக்குகிறார். தேவி ஸ்ரீ பிரசாத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். இந்த படத்தினுடைய சூட்டிங் தொடங்கி விட்டார்கள். அதோட இந்த படத்தில் சிம்ரன், மீனா நடிப்பதாக கூறப்படுகிறது. இதை அடுத்தும் சில படங்களில் அஜித் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full