'இந்த படங்களுக்கு எல்லாம் நன்றி' - முக்கிய நபருக்கு அஜித் எழுதிய நன்றி கடிதம் - யாருன்னு நீங்களே பாருங்க

By subhashini · 31/8/2022

முக்கிய பிரபலத்திற்கு நன்றி கூறி அஜித் எழுதியிருந்த கடிதம் தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர வைரலாகி வருகிறது. கோலிவுட்டில் மிக பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டு இருப்பவர் அஜித். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அதிக வசூலையும் பெற்று இருக்கிறது. இது ஒரு பக்கம் இருக்க, சமீப காலமாகவே அஜித் குறித்த ஏதாவது ஒரு அப்டேட் சோசியல் மீடியாவில் வைரல் ஆகி தான் வருகிறது.

சமீபத்தில் தான் அஜித் ஐரோப்பிய சுற்றுப்பயணம் முடிந்து இருந்தார். அதன் பிறகு திருச்சியில் நடந்த ரைபில் கிளப் துப்பாக்கி சூடு போட்டியில் பங்கேற்று இருந்தார். இப்படி அஜித்துடைய ஒரு அன்சீன் புகைப்படம் கிடைத்தால் போதும் அதை ரசிகர்கள் பயங்கர ட்ரெண்டிங் ஆக்கி வருகிறார்கள். இந்நிலையில் முக்கிய பிரபலம் ஒருவருக்கு நடிகர் அஜித் எழுதியிருந்த நன்றி கடிதம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது .

அஜித் எழுதிய நன்றி கடிதம்:

அதாவது, நடிகர் அஜித் அவர்கள் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவிற்கு நன்றி கூறி கடிதம் ஒன்றை எழுதி இருக்கிறார். அதில் அவர், யுவன் நீங்கள் ஒரு ராக் ஸ்டார். தீனா, பில்லா, மங்காத்தா போன்ற திரைப்படங்களுக்காக பெரிய நன்றிகள் என்று கூறி அஜித் கையெழுத்து போட்டு இருக்கிறார். தற்போது அந்த புகைப்படத்தை தான் ரசிகர்கள் செம வைரல் ஆக்கி வருகிறார்கள். மேலும், சமீபத்தில் வெளியான அஜித்தின் வலிமை படம் ரசிகர்கள் மத்தியில் மிக பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டு இருந்தது.

ஏகே 61 படம்:

இரண்டு வருட காத்திருப்புக்கு பிறகு வலிமை படம் ரிலீசாகி இருந்தது. இந்த படத்தை வினோத் இயக்கி இருந்தார் மற்றும் போனிகபூர் தயாரித்து இருந்தார். இந்த படத்தில் ஹீமா குரேஷி, கார்த்திகேயா உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். மேலும், அஜித்தின் வலிமை படம் வசூலில் வாரி இறைத்து இருந்தது என்று படத்தின் தயாரிப்பாளரே அறிவித்து இருந்தார். தற்போது வலிமை படத்தை இயக்கிய இயக்குனர் வினோத் குமாரின் மொத்த டீமும் ‘ஏகே 61’ படத்திற்கான வேலையில் மும்முரமாக இறங்கி இருக்கிறார்கள்.

படம் குறித்த தகவல்:

அதுமட்டும் இல்லாமல் இந்த படம் பல மொழிகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டு இருக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு ஏப்ரலில் தொடங்கி இந்த ஆண்டு தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தில் அஜித்திற்கு இரட்டை வேடம் என்று கூறப்படுகிறது. தற்போது ஹைதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டி, விசாகப்பட்டினம், சென்னையில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து முடிந்து இருக்கிறது. மேலும், படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு தாய்லாந்தில் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

ஏகே 62 படம்:

அஜித்தின் ஏகே 62வது படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்க இருக்கும் தகவல் சில மாதங்களுக்கு முன் சோசியல் மீடியாவில் வெளியாகி இருந்தது. இந்த படத்தை லைகா புரொடக்ஷன் தயாரிக்கிறது. இந்த படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு செப்படம்பரில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விக்னேஷ் சிவன்- அஜித் கூட்டணி படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு ஏற்படுத்தியிருக்கிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full