தல மட்டும் இல்ல குட்டி தலையும் மாஸ் தான் - ட்விட்டரில் இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் வந்த அஜித் மகனின் புகைப்படங்கள்.

By Rajkumar · 27/1/2021

ஆல்டிமேட் ஸ்டார் அஜித்தின் மகன் ஆத்விக்கின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. சினிமா உலகில் தன்னுடைய விடா முயற்சியாலும், தன்னம்பிக்கையாலும் நடிகர் அஜித் இந்த அளவிற்கு உயர்ந்து நிற்கிறார். மேலும்,இவரை ரசிகர்கள் செல்லமாக 'தல' என்றும் திரைஉலகம் அல்டிமேட் ஸ்டார் என்றும் தான் அழைப்பார்கள். அதோடு நடிகர் அஜித்துக்கு என ஒரு தனி ரசிகர் படையை உள்ளது. அந்த அளவிற்கு மக்களின் மனதில் அதிக இடம் பிடித்தவர். ஷாலினி நடிப்பில் 1999 ஆம் ஆண்டு வெளிவந்த படம் தான் 'அமர்க்களம்'. இந்தப் படத்திற்கு பிறகு அஜீத்தும், ஷாலினியும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். பின் இவர்களுக்கு 2008 ஆம் ஆண்டு அனோஷ்கா என்ற அழகான மகளும், 2014ம் ஆண்டு சுட்டித்தனமான ஆத்விக் என்ற மகளும் பிறந்தார்கள்.

https://twitter.com/ThalaAjith_FC/status/1354127335608393729

எப்பவுமே நடிகர் அஜித் அவர்கள் பொது நிகழ்ச்சிகளிலும், சினிமா பட புரமோஷன்களிலும் கலந்து கொள்வதில்லை. அதோடு அவர் தன் குழந்தைகளையும் மீடியா பக்கம் கொண்டு வருவதில்லை. சொல்லப் போனால் மீடியா வாசனையே இல்லாமல் வளர்த்து வருகிறார் என்று கூட சொல்லலாம். ஆனால், அஜித் குடும்பத்தை விமான நிலையத்திற்கு வரும் போது, ஷாப்பிங் செல்லும்போது,மக்கள் கூடும் இடங்களுக்கு வரும் போது தான் பார்க்க முடியும்.

இதையும் பாருங்க : மாஸ்டர் படத்தை தட்டித்தூக்கிய அமேசான் - புதிய ட்ரைலருடன் வெளியான அறிவிப்பு. என்ன ஸ்பெஷல் தெரியுமா ?

அதுவும் குடும்பத்துடன் போட்டோ எடுத்துக்கொள்ளலாம் எனக் கேட்டால் அஜித் செல்பி எடுத்து தர மறுத்து விடுவார். அப்படி மீறி புகைப்படம் வருவது ரொம்ப அரிதான ஒன்று.அஜித் குடும்பத்துடன் இருக்கும் மாதிரி வரும் புகைப்படங்கள் எல்லாம் அவர் எடுப்பதில்லை. ரசிகர்கள் எடுத்து இணையங்களில் வெளியிடுவது. அதுமட்டுமில்லாமல் அவர்களுடைய புகைப்படம் ஒட்டுமொத்த குடும்பத்துடன் கிடைப்பது ஒரு அபூர்வமான ஒன்று கூட சொல்லலாம்.

இப்படி ஒரு நிலையில் அஜித் மனைவி ஷாலினி மற்றும் மகன் ஆத்விக் சமீபத்தில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு இருந்தனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. அதிலும் அந்த புகைப்படங்களில் ஆத்விக் அபபடியே அஜித்தை போல குட்டி தலை மாதிரி இருக்கிறார். இந்த புகைப்படங்கள் ட்விட்டரில் வைரலானதை அடுத்தது என்ற ஹேஸ் டேக்கும் இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் வந்துள்ளது.

behindtalkies AMP · Quick view
View full