தனது மகனின் பிறந்த நாளை குடும்பத்துடன் கொண்டாடிய அஜித். வைரலாகும் வீடியோ.
உலகம் முழுவதும் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை கொண்டவர் தல அஜித். எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல் தன்னுடைய கடின உழைப்பினால் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து உள்ளார். இவர் நடிப்பில் மட்டுமில்லாமல் கார் ரேஸ், பைக் ரேஸ், போட்டோகிராஃபர், மெக்கானிக், யுஏவி சிஸ்டம் அட்வைசர், ஹெலிகாப்டர் பைலட் ட்ரைனர் என பலதுறைகளில் சாதனை புரிந்து வருகிறார். கடந்த வருடம் அஜித் நடிப்பில் வெளிவந்த விஸ்வாசம், நேர்கொண்ட பார்வை ஆகிய படம் பட்டையை கிளப்பியது. மேலும், தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்த ஷாலினி அவர்களை திருமணம் செய்து கொண்டார்.
https://twitter.com/AjithNetwork/status/1234094322695303170
இவர்களுக்கு அனோஷ்கா என்ற மகளும் ஆத்விக் என்ற மகனும் இருக்கிறார்கள். இந்நிலையில் நாளை அஜித் அவர்களின் மகன் ஆத்விக்கு பிறந்தநாள்.நாளையுடன் ஆத்விக்கு நான்கு ஆண்டுகள் ஆகிவிட்டது என்பது குறிபிடத்தக்கது. தற்போது ஆத்விக் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கேக் வெட்டும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது. மேலும், அஜித்தின் ரசிகர்கள் ஆத்விக் பிறந்தநாளை மிகப் பெரிய அளவில் சமூக வலைதளங்களில் தற்போதே கொண்டாடி வருகிறார்கள். ரசிகர்கள் பலர் வீதிகளில் போஸ்டர் ஒட்டியும், பேனர் அடித்தும் தங்களுடைய ஹீரோவின் மகனின் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். கோலாகலமாக ஆத்விக் பிறந்தநாளை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
தல அஜித் அவர்கள் தற்போது வலிமை படத்தில் மும்முரமாக நடித்து வருகிறார். இந்த படத்தை இயக்குனர் வினோத் இயக்குகிறார். இந்த படத்தை தயாரிப்பாளர் போனிகபூர் தயாரித்து வருகிறார். நேர்கொண்ட பார்வை படத்தில் பணியாற்றிய அதே குழுவினரே அஜித்தின் வலிமைப் படுத்திலும் பணியாற்றுகிறார்கள். மேலும், படத்திற்கு ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா மற்றும் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா. இந்த படத்தில் தல இரட்டை வேடத்தில் நடிக்கிறார் என்றும் பேசப்படுகிறது. இந்த வலிமை படத்தில் அஜித் அவர்கள் பிளாக் ஹேர் ஸ்டைலில் அதுவும் இளமை தோற்றத்தில் காட்சி அளிப்பதாக கூறப்படுகிறது.
https://twitter.com/ThalaFCTeam/status/1234021616297836544
இந்த படத்தில் தல அஜித் அவர்கள் போலீசாக நடிக்கிறார். படத்தின் வேலைகள் எல்லாம் மும்முரமாக போய் கொண்டு உள்ளது. இந்த படத்தில் அதிரடி ஆக்ஷன் காட்சிகளும், பைக் ரேஸ் காட்சிகளும் கண்டிப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் வலிமை படத்தின் படப்பிடிப்பு தளத்தில் அஜித் அவர்களுக்கு காயம் ஏற்பட்டது. காயங்கள் ஆனாலும் அஜித் அவர்கள் அந்த காட்சியை நடித்துக் கொடுத்து விட்டுத் தான் சென்றார். இது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இந்த படம் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்கில் வெளியிடப்போவதாக படக்குழுவினர் அறிவித்து உள்ளனர்.