இணையத்தில் வைரலாகும் அஜித்தின் மகன் மற்றும் மகள் புகைப்படம். ஆனால், அனோஷ்காவின் பற்களில் ?

By Rajkumar · 7/11/2019

தமிழ் சினிமா உலகின் அல்டிமேட் ஸ்டார் அஜித் அவர்களின் மகன், மகள் போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவுகிறது. அது மட்டும் இல்லாமல் இப்போது ட்ரெண்டிங் நியூஸ் இது கூட சொல்லலாம். அதுவும் ரெண்டு பேரும் அப்படியே அஜித்,ஷாலினி மாதிரி ஜெராக்ஸ் காப்பி ஆக இருக்கிறார்கள் கூட கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர் நெட்டிசன்கள். சினிமா உலகில் தன்னுடைய விடா முயற்சியாலும், தன்னம்பிக்கையாலும் நடிகர் அஜித் இந்த அளவிற்கு உயர்ந்து நிற்கிறார். மேலும்,இவரை ரசிகர்கள் செல்லமாக 'தல' என்றும் திரைஉலகம் அல்டிமேட் ஸ்டார் என்றும் தான் அழைப்பார்கள். அதோடு நடிகர் அஜித்துக்கு என ஒரு தனி ரசிகர் படையை உள்ளது. அந்த அளவிற்கு மக்களின் மனதில் அதிக இடம் பிடித்தவர்.

இதனைத்தொடர்ந்து அஜித்,ஷாலினி நடிப்பில் 1999 ஆம் ஆண்டு வெளிவந்த படம் தான் 'அமர்க்களம்'. இந்தப் படத்திற்கு பிறகு அஜீத்தும், ஷாலினியும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். பின் இவர்களுக்கு 2008 ஆம் ஆண்டு அனோஷ்கா என்ற அழகான மகளும், 2014ம் ஆண்டு சுட்டித்தனமான ஆத்விக் என்ற மகளும் பிறந்தார்கள். எப்பவுமே நடிகர் அஜித் அவர்கள் பொது நிகழ்ச்சிகளிலும், சினிமா பட புரமோஷன்களிலும் கலந்து கொள்வதில்லை. அதோடு அவர் தன் குழந்தைகளையும் மீடியா பக்கம் கொண்டு வருவதில்லை. சொல்லப் போனால் மீடியா வாசனையே இல்லாமல் வளர்த்து வருகிறார் என்று கூட சொல்லலாம். ஆனால், அஜித் குடும்பத்தை விமான நிலையத்திற்கு வரும் போது, ஷாப்பிங் செல்லும்போது,மக்கள் கூடும் இடங்களுக்கு வரும் போது தான் பார்க்க முடியும்.

இதையும் பாருங்க : கமலின் பிறந்தநாளன்று மீரா மிதுன், கமல் குறித்து போட்ட பதிவு. கேவலமாக திட்டும் நெட்டிசன்கள்.

அதுவும் குடும்பத்துடன் போட்டோ எடுத்துக்கொள்ளலாம் எனக் கேட்டால் அஜித் செல்பி எடுத்து தர மறுத்து விடுவார். அப்படி மீறி புகைப்படம் வருவது ரொம்ப அரிதான ஒன்று.அஜித் குடும்பத்துடன் இருக்கும் மாதிரி வரும் புகைப்படங்கள் எல்லாம் அவர் எடுப்பதில்லை. ரசிகர்கள் எடுத்து இணையங்களில் வெளியிடுவது. அதுமட்டுமில்லாமல் அவர்களுடைய புகைப்படம் ஒட்டுமொத்த குடும்பத்துடன் கிடைப்பது ஒரு அபூர்வமான ஒன்று கூட சொல்லலாம். ஆனால், தற்போது அஜித் மற்றும் அவரது குடும்பத்தினர் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வருகிறது. இது அஜித் ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது அஜீத் மகன் ஆத்விக்கும், அனோஷ்காவும் தங்களுடைய நாய்க்குட்டியை வைத்து கொண்டு எடுத்த செல்ஃபி ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார்கள். தற்போது ட்ரெண்டிங் நியூஸில் இது தான் மாஸ் காட்டி வருகிறது.

இவர்கள் இருவரும் தரையில் படுத்தபடி வாய் நிறைய புன்னகை உடன் அந்தப் புகைப்படத்திற்கு போஸ் கொடுத்து இருக்கிறார்கள். மேலும், இந்தப் புகைப்படத்தை பார்த்து அஜித் ரசிகர்கள் கூறியது, அனோஷ்காவை குட்டி ஷாலினி என்றும் ஆத்விக்கை குட்டி அஜித் என்றும் கூறி வருகிறார்கள். அதுமட்டுமில்லாமல் அஜித் ரசிகர்கள் சொல்வது போலத் தான் புகைப்படத்தில் அந்த குழந்தைகளும் அப்படியே அஜித்,ஷாலினி போலவே ஜெராக்ஸ் காப்பி ஆக இருக்கிறார்கள். அதே போல அனோஷ்காவின் பற்களில் கிளிப் ஒன்றும் பொறுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அஜீத் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் "#AadvikAjith, AnoushkaAjith" என்ற ஹேஸ்டேக்கைகளை உருவாக்கி அதில் அஜீத் மற்றும் அவரது குடும்பத்தினர் சம்பந்தப்பட்ட புகைப்படங்களையும், கருத்துக்களையும் பதிவிடும் ட்ரெண்டிங் செய்து வருகின்றனர்.

behindtalkies AMP · Quick view
View full