தமிழ் சினிமா உலகில் நம்பிக்கை நட்சத்திரங்களாக திகழ்பவர்கள் அஜித்-விஜய். தற்போது வளர்ந்து வரும் கால கட்டங்களில் இவர்கள் இருவரும் வரும் தமிழ் சினிமாவின் நம்பிக்கை தூண்கள் என்று கூட சொல்லலாம். கமல், ரஜினி படங்களுக்கு பிறகு அதிக வசூலையும் ரசிகர்கள் கூட்டத்தையும் சேர்த்தது இவர்கள் இருவரும் தான். இவர்களுக்கு இந்தியாவில் மட்டுமில்லாமல் உலக அளவிலும் ரசிகர்கள் உள்ளார்கள். அதோடு பாக்ஸ் ஆபிஸில் இவர்களுடைய படம் தான் முதலிடத்தில் இருக்கும்.

ஆரம்ப காலத்தில் இவர்கள் இருவரும் ராஜாவின் பார்வையில் என்ற படத்தில் இணைந்து நடித்தார்கள். அதன் பின்னர் இவர்கள் இருவரும் நேருக்கு நேர் படத்தில் நடிப்பதாக இருந்தது. ஆனால், அஜித் அந்த படத்தில் இருந்து திடிரென்று விலகிவிட்டார். அதன் பின்னர் இவர்களது படங்களில் மாறி மாறி ஒருவரை ஒருவர் தாக்கி வசனங்களை பேச ஆரம்பித்தனர்.

இதையும் பாருங்க : திருமண பேச்சை ஆரம்பித்த பின்னர் தான் எங்க ரெண்டு பேருக்கே தெரியும்- திருமணத்திற்க்கு பின் கதிர் அளித்த பேட்டி.

Advertisement

உண்மையிலேயே அஜித்தும் விஜயும் நெருங்கிய நண்பர்கள். ஆனால், அஜித், விஜய் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் செய்யும் அட்டூழியங்களுக்கு அளவே இல்லை. இருப்பினும் இவர்கள் இருவரும் மீண்டும் இணைந்து நடித்தால் எப்படி இருக்கும் என்பது தான் பலரின் எதிர்பார்ப்பும். இந்த நிலையில் அஜித் நடிப்பில் வெளியான பில்லா பட சமயத்தின் போது விஜய் அல்லது மல்டி ஸ்டார் படங்களில் தான் ஏன் நடிக்க மறுப்பதாக காரணத்தை கூறியுள்ளார் அஜித்.

அதில், எனக்கும் விஜய்க்கும் தொழில் ரீதியாக ஆரோக்கியமான போட்டி இருப்பது உண்மை தான் ஆனால், தனிப்பட்ட முறையில் எங்களுக்குள் எந்த பிரச்சனையும் இல்லை. அவருடன் நான் ராஜாவின் பார்வையில் படத்தில் நடித்துள்ளேன். ஆனால், இன்னிக்கி ஒரு மல்டி ஹீரோ சப்ஜெக்ட்படங்களில் நடிக்க எனக்கு கம்பர்ட்டபுள் கிடையாது.

Advertisement

அதற்கு என்ன காரணம் என்றால், விஜய் ஒரு படம் பண்ணால் அவரது படத்தில் 1000 பேருக்கு மேல் வேலை வாய்ப்பு கிடைக்கும். ஆனால், இருவரும் இணைந்து நடித்தால் வேலை வாய்ப்புகள் குறையும். மேலும், படத்தின் பாடல்களில் கூட பிரச்சனை வரும் அது தேவையில்லாமல் ரசிகர்கள் மத்தியில் பிரச்சனையை ஏற்படுத்தும். வளர்ந்து வரும் சமயத்தில் சரி, ஆனால், தற்போது இருவருக்குமே தனித்தனி மார்க்கெட் இருக்கும் இணைந்து நடிப்பது என்பது தேவை இல்லாத ஒன்று என்று கூறியுள்ளார்.

Advertisement
Advertisement