பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் வெளியான விடாமுயற்சி எப்படி இருக்கு? முழு விமர்சனம் இதோ

By krithika · 6/2/2025

ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்த விடாமுயற்சி திரைப்படம் உலகம் முழுதும் இன்று வெளியாகி இருக்கிறது. தமிழில் மீகாமன், தடையரை தாக்க, தடம் போன்ற சுவாரசியமான படங்களை கொண்டத்த மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி உள்ள இந்த படத்தில் அஜித், அர்ஜுன், திரிஷா, ரெஜீனா, ஆரவ் என்று ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. லைகா தயாரித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசைமைத்துள்ளார். இந்த படத்தை பற்றிய விமர்சனத்தை தற்போது காணலாம்.

கதைக்களம் :

அர்ஜுன் (அஜித்) , கயல் (திரிஷா) ஒருவர் மீது ஒருவர் அதீத அன்பு வைத்திருக்கும் கணவர் மனைவியாக இருந்து வருகின்றனர். இருவரும் ஒரு நாள் ஒரு நீண்ட பயணம் செல்லும் போது இவர்களின் கார் பாலைவனத்திற்கு நடுவே நின்று விடுகிறது. அப்போது ட்ரக்கில் ரக்ஷித் (அர்ஜுன்)வருகிறார். அவர் இருவருக்கும் உதவி செய்ய முன் வருகிறார். இதனால் திரிஷாவை அவரது வாகனத்தில் அஜித் ஏற்றி அனுப்பிவிடுகிறார். தனது மனைவியை அழைத்து சென்ற பின்னர் அவர் அவரின் ட்ராக்கில் திரிஷாவை ரக்ஷித் (அர்ஜுன்) மீண்டும் வந்து தன்னையும் அழைத்து செல்வார் என்று எதிர்பார்த்த நிலையில் இருவரும் திரும்பி வராததால் தனது மனைவியை தேடி செல்கிறார் அர்ஜுன் (அஜித்). அதன் பின்னர் என்ன நடக்கிறது என்பதே படத்தின் மீதிக்கதை.

https://www.youtube.com/watch?v=XnsoFDraszc

படத்தை பற்றிய அலசல் :

இந்தக் கதை ஹாலிவுட் வெளியான பிரேக் டவுன் படத்தின் ரீமேக் என்றும் கூறப்பட்டது. ஆனாலும் அந்த படத்தை பார்த்தேன் ரசிகர்களுக்கு விடாமுயற்சி படம் எந்த அளவிற்கு மாறுபட்டு இருக்கிறது என்பது நிச்சயம் புரியும். மாஸ் என்ட்ரி, மாஸ் இடைவேளை காட்சி, ஹீரோ பில்ட்டப், பஞ்ச் டயலாக் என்று எதுவுமே இல்லாமல் வெறும் கதையை மட்டும் நம்பி இந்த படத்தில் அஜித் நடித்திருக்கிறார்.

நிறை :

படத்தின் முதல் பாதி கிளாஸ், இரண்டாம் பாதி மாஸ்

அஜித்தை தாண்டி, அர்ஜுன், ஆரவ், ரெஜீனா என்று அனைவரின் கதாபாத்திரம் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு இருக்கிறது

படத்தின் மிகப்பெரிய பலம் திரைக்கதை மற்றும் கேமரா ஒர்க் தான்

படத்தின் இடைவேளை காட்சி எதிர்பார்ப்பை எகிற வைக்கிறது

ஆங்காங்கே வரும் ட்விஸ்ட்டுகள்

ரெஜீனாவை இதுவரை தமிழ் சினிமா சரியாக பயன்படுத்தவில்லை என்ற அளவுக்கு அவரின் நடிப்பு அசர வைத்துள்ளது

அனிருத் பாட்டை பல முறை கேட்டு விட்டோம், ஆனால், படம் முழுதும் BGMல் பின்னி எடுத்துள்ளார்

https://www.youtube.com/shorts/0qx1kEKj9_A

குறை :

படத்தில் அஜர்பைஜான் மொழியில் பேசும் போது திரையில் கவனம் செலுத்த முடியாமல் சப் டைட்டிலை பார்ப்பது கொஞ்சம் சுவாரசியத்தை கெடுகிறது.

இரண்டாம் பாதியை பார்க்கும் போது முதல் பாதி கொஞ்சம் சுவாரசியம் குறைவு தான்

ரெஜீனாவின் Flashback காட்சியை கொஞ்சம் குறைத்து இருக்கலாம்

அஜித் போன்ற ஒரு மாஸ் ஹீரோவை இப்படி வேறு விதமான பரிணாமத்தில் பார்ப்பதை எல்லாராலும் ஏற்றுக்கொள்ள முடியுமா என்று தெரியவில்லை.

இறுதி அலசல் :

அஜித்தை போன்ற ஒரு மாஸ் ஹீரோ, தனது மாஸ் பிம்பத்தில் இருந்து முழுவதும் விலகி படத்தின் கண்டண்டை மட்டும் நம்பி இயக்குனரிடம் தன்னை முழுமையாக அர்ப்பணித்து தனது உழைப்பை 100 சதவீதம் கொடுத்திருக்கிறார். கண்டன்ட் படத்தில் நடிக்கிறேன் என்று கருத்து சொல்லாமல் ஒரு சாதாரண ஒரு கதையை தேர்ந்தெடுத்து அதனை சவாரஸ்யமாக கொடுத்துள்ளார் மகிழ் திருமேனி.ஆக்ஷன், காதல், ட்விஸ்ட், மொத்தத்தில் விடாமுயற்சி VICTORY

Rating : 6/10

Tamil Behind Talkies AMP · Quick view
View full