நான் சொன்னதா போய் சொல்லு - அஜித் கூறியும் கேட்காத மிர்ச்சி சிவா. பேசுவதையே நிறுத்தியுள்ள அஜித்.
தமிழ் சினிமா உலகில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் மிர்ச்சி சிவா. இவர் திரைப்படங்களில் நடிப்பதற்கு முன் ரேடியோ மிர்ச்சியில் வானொலி அறிவிப்பாளராக பணியாற்றினார். இவர் 1988ஆம் ஆண்டு உடுமலைபேட்டையில் பிறந்தவர். சிவா பத்தாம் வகுப்பு வரை தான் படித்து உள்ளார். அதன் பின்னர் சென்னை வந்து சின்ன சின்ன நாடகங்களில் கலந்து கொண்டு தனது நடிப்பு திறமையை வளர்த்தி கொண்டார். சிவா என்று சொன்னவுடன் அனைவருக்கும் அவருடைய நடனம் தான் நியாபகத்திற்கு வரும். இந்த ரேடியோ ஜாக்கி வேலையை பார்த்துக் கொண்டே படங்களில் நடிக்க வாய்ப்பு தேடி வந்தார் சிவா. 2001 ஆம் ஆண்டு ஷாம் நடிப்பில் வெளிவந்த 12B என்னும் படத்தின் மூலம் தான் சிவா சினிமா உலகிற்கு அறிமுகமானார். அதன் பின்னர் விசில் என்ற படத்தில் நடித்தார்.
https://www.youtube.com/watch?v=i4l2oYOefAc
இந்த படங்களில் இவருக்கு பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை. இதனால் மீண்டும் தனது ரேடியோ ஜாக்கி வேலைக்கு சென்று விட்டார். பின் வெங்கட் பிரபு இயக்கத்தில் சென்னை 600028 என்ற படத்தின் மூலம் தான் சிவா மக்கள் மத்தியில் பிரபலமானர். இதனை தொடர்ந்து சரோஜா என்ற படத்தில் நடித்தார். இந்த இரண்டு படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், வசூலையும் பெற்றுத் தந்தது. இதனை தொடர்ந்து சிவா அவர்கள் தமிழ்ப்படம் என்ற படத்தில் நடித்தார். இந்த படம் அனைத்து படங்களையும் கிண்டல் செய்யும் வகையில் வெளியாகியிருந்தது.
இந்த படத்தால் தான் அஜித் மற்றும் மிர்ச்சி சிவா பேசுவது இல்லை என்று வலைப்பேச்சு யூடுயூப் சேனலை சேர்ந்த ஆனந்தன் கூறியுள்ளார். மிர்ச்சி சிவா, கடந்த 2012 ஆம் ஆண்டு பிரியா என்ற பேட்மிண்டன் வீராங்கனையை திருமணம் செய்து கொண்டார்..பிரியா வேறு யாரும் இல்லை நம்ம தல அஜித் குமாரின் நெருங்கிய சொந்தகாரரம். இவர்கள் இருவரது திருமணத்திற்கு நடிகர் அஜித் குடும்பத்துடன் வந்து வாழ்த்தியுள்ளார். இப்படி ஒரு நிலையில் தான் அஜித், மிர்ச்சி சிவாவுடன் ஒரு மனஸதாபம் ஏற்பட்டுள்ளது.
https://www.youtube.com/watch?v=BiyXh8_gv1Y&t=292s
அதாவது, தமிழ் படத்தை இயக்கிய இயக்குனர் அஜித்தின் மைத்துனரான ரிச்சர்டும் நண்பர்கள். மிர்ச்சி சிவா குடும்பத்திற்கு அஜித் குடும்பத்திற்கும் நல்ல உறவு இருந்தது. ஆனால், தமிழ் படம் 2வில் அஜித்தை கலாய்த்து ஒரு சீன் வைத்தார்கள். இந்த தகவலை ரிச்சர்ட் அஜித்திடம் கூறியுள்ளார். பின்னர் அஜித், அந்த காட்சியை வைக்க வேண்டாம் என்று நான் சொன்னதாக சொல்லுங்க என்று ரிச்சர்ட்டிடம் சொன்னாராம். ஆனால், அஜித் சொன்னதாக ரிச்சர்ட் சொன்னதும் அந்த காட்சியில் சிவா நடித்ததால், இருவரின் நட்பு அன்றோடு முடிந்துவிட்டது என்று கூறியுள்ளார் ஆனந்தன்.