கார் ரேஸ் முடிந்ததும் தன் மனைவிக்கு நன்றி சொன்ன அஜித், ஷாலினி கொடுத்த ரியாக்சன் - வைரலாகும் வீடியோ
கார் ரேஸில் வெற்றி பெற்ற பிறகு அஜித் பேசியிருக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக அல்டிமேட் ஸ்டார் ஆக ஜொலித்துக் கொண்டிருப்பவர் அஜித். இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்று தந்திருக்கின்றது. மேலும், இவர் நடிப்பை தாண்டி கார் ரேஸிங் மீதும் அதிக ஆர்வம் கொண்டவர். இது அனைவருக்குமே தெரியும்.
இவர் சினிமாவில் நுழையும்போது இருந்தே கார் ரேஸிங்கில் கவனம் செலுத்தி வருகிறார். இவர் சர்வதேச அளவில் பல்வேறு பார்முலா ரேஸ் பந்தயத்தில் கலந்து கொண்டு இருக்கிறார். இவரது படங்கள் என்றாலே கண்டிப்பாக பைக் அல்லது கார் ஓட்டும் காட்சிகள் நிச்சயம் இடம் பெற்றுவிடும். தற்போது இவர் படங்களில் பிசியாக நடித்து கொண்டு வருகிறார். இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் '24H' கார்பந்தயம் துபாயில் நடந்தது. இதில் அஜித் குமாருடைய டீமுமே களம் இறங்கி இருக்கிறது.
அஜித் கார் ரேஸ்:
கடந்த ஆண்டு 'அஜித்குமார் ரேசிங் டீம்' என்ற குழுவை அஜித் உருவாக்கி ரேஸிங்க்கு தேவையான அனைத்தையுமே செய்து வந்திருந்தார். தற்போது அந்த குழு உடனே கார் பந்தயத்திலும் அஜித் களம் இறங்கி இருந்தார். இடையில் அஜித் ரேஸில் இருந்து விலகுவதாக அறிவித்தார். பின் மீண்டும் கலந்து கொண்டார். அதோடு இவர் தன் ரசிகர்களுக்காக பேட்டியும் கொடுத்து இருந்தார். மேலும், நடந்து முடிந்த இந்த 991 பிரிவில் கார் ரேஸில் அஜித் குமார் அணி மூன்றாவது இடத்தை பிடித்திருக்கிறது.
அஜித் வீடியோ:
இதற்கு ரசிகர்கள், பிரபலங்கள் என பலருமே வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் அஜித் மேடையிலேயே பரிசு வாங்கும் போது அவருக்கு அங்கிருந்த ரசிகர்கள் ஆரவாரம் செய்து வாழ்த்து செய்துள்ளார்கள். பின் தன்னுடைய மகனை மேடையில் ஏற்றிய அஜித், அவருடைய ஒரு கையில் கோப்பையும் இன்னொரு கையில் இந்திய தேசிய கொடியும் கொடுத்து காண்பித்து இருந்தார்
அதற்க்குப்பின் தன்னுடைய அணியினர் மற்றும் தன்னுடன் இருந்தவர்களுக்கு அஜித் நன்றி சொல்லி பேசி இருக்கிறார்.
"And Shalu.. Thank you for letting me Race"
— Trollywood 𝕏 (@TrollywoodX) January 12, 2025
That's so cute man 😍 #AjithKumarRacing pic.twitter.com/1FzVQ2b0UA
நன்றி சொன்ன அஜித்:
அதுமட்டுமில்லாமல் தன்னை இந்த ரேசிற்கு அனுமதித்த என் மனைவி ஷாலினிக்கும் ரொம்ப நன்றி என்று அஜித் பேசி இருக்கிறார். அஜித் பேசியதை கேட்டு ஷாலினி க்யூட்டாக ரியாக்ஷன் கொடுத்திருக்கிறார். அதோடு இந்த ரேஸில் அஜித்தை என்கிரேஜ் செய்ய ஷாலினி தன்னுடைய பிள்ளைகளுடன் வந்து இருந்தார். தற்போது இது தொடர்பான வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கடைசியாக அஜித் நடிப்பில் வினோத் இயக்கத்தில் வெளிவந்த துணிவு படம் விமர்சன ரீதியாக வெற்றியடைந்தது. தற்போது அஜித்தின் விடாமுயற்சி படத்தை மகிழ் திருமேனி இயக்கி இருக்கிறார்.
அஜித் திரைப்பயணம்:
இந்த படத்திற்கு அனிரூத் இசை அமைக்கிறார். இந்த திரைப்படத்தில் திரிஷா, சஞ்சய் தத், ஆரவ், அர்ஜுன் தாஸ், அருண் விஜய், ஆரவ், உட்பட பல நடிகர்கள் நடிக்கிறார்கள். சமீபத்தில் தான் இந்த படத்தினுடைய படப்பிடிப்பு முடிந்தது. தற்போது இந்த படத்தினுடைய போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த படம் கூடிய விரைவில் திரையரங்கிற்கு வெளியாக இருக்கிறது. இதை அடுத்து அஜித் அவர்கள் குட் பேட் அக்லி என்ற படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் தான் இயக்குகிறார். இந்த படத்தினுடைய படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று கொண்டு வருகிறது.