ஆழ்வார் பேட்டை ஆண்டவருக்காக கொள்கையை தளர்த்தினாரா அல்டிமேட் ஸ்டார்.

By Rajkumar · 6/11/2019

சினிமா திரையுலகின் அல்டிமேட் ஸ்டார் ஆக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் அஜித் குமார். மேலும், "ஒரு வாட்டி முடிவு பண்ணிட்டேன்னா, என் பேச்சை நானே கேட்க மாட்டேன்" என்ற டயலாக் ஏற்ப மாதிரி வாழ்ந்து வருபவர் தான் தல அஜித். எப்பவுமே அஜித் அவர்கள் படம் புரமோஷன், இசை வெளியீட்டு விழா,அவார்ட் நிகழ்ச்சி என எந்த ஒரு நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வது இல்லை. அதுமட்டும் இல்லாமல் நடிகர் அஜித் 'தானுண்டு தன் வேலையுண்டு' என்று இருப்பவர். இதனைத்தொடர்ந்து தல அஜித் அவர்கள் கடைசியாக மேடை நிகழ்ச்சி என கலந்து கொண்டது முன்னாள் முதல்வர் மறைந்த கருணாநிதி உடன் தான்.அதோடு அந்த நிகழ்ச்சியில் நடிகர் அஜித் தலைவர் கருணாநிதியிடம் கூறியது, ஐ'யா என்னை பங்ஷனுக்கு வர சொல்லி மிரட்டுறாங்க' என்று ஒரு முறை மேடையில் புலம்பி கொட்டி தீர்த்தார்.

மேலும்,அந்த மேடைக்கு பிறகு அஜித் அவர்கள் எந்த ஒரு நிகழ்ச்சிகளிலும், பங்ஷன்களிலும் கலந்து கொள்ளவே இல்லை. அது மட்டுமில்லாமல் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கூட அஜித் சந்தித்து எந்த ஒரு பேட்டியும் கொடுப்பதில்லை. மேலும், நடிகர் அஜித் வாழ்க்கையின் முக்கியமான லட்சியங்களுள் இதுவும் ஒன்றாக வைத்து வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் தற்போது "கமல் 65" என்ற நிகழ்ச்சியில் நடிகர் அஜித் அவர்கள் கலந்து கொள்கிறார் என்ற தகவல் சினிமா வட்டாரங்களில் வைரலாக பரவி வருகிறது. இதை அறிந்த தல ரசிகர்கள் பயங்கர குஷியிலும், உற்சாகத்திலும் கொண்டாடி வருகின்றனர். நடிகர் அஜித் எப்போதுமே தன்னுடைய படம் தொடர்பான நிகழ்ச்சிகளில் மட்டும் தான் கலந்து கொள்வார். அதுவும் கடைசியாக அவர் 'அசல்' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தான் கலந்து கொண்டார்.

இதையும் பாருங்க : கொலை மிரட்டல் விடுத்த மீரா மிதுன். போலீசில் புகார் அளித்த ஹோட்டல் நிர்வாகம்.

அதற்கு பிறகு அவருடைய படம் விழாக்களிலேயே கலந்து கொள்வது இல்லை. மேலும், வேறு எந்த சினிமா நிகழ்ச்சிகள், இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சி, அவார்டு பங்ஷனில் கூட கலந்து கொள்ளாமல் அனைத்தையும் தவிர்த்து வந்தார். இப்போது வரையும் அவர் எந்த ஒரு நிகழ்ச்சியிலும் கலந்து கொள்வது இல்லை. இதனைத் தொடர்ந்து தற்போது நீண்ட நெடுங்காலத்துக்கு பிறகு உலக நாயகன் கமலஹாசன் அவர்கள் நடத்தும் "கமல் 65" நிகழ்ச்சி ஒன்றில் தல அஜித் அவர்கள் கலந்து கொள்ள இருப்பதாக சினிமா வட்டாரங்கள் முழுவதும் பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வருகிற 17-ஆம் தேதி அன்று சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் கமல் 65 நிகழ்ச்சி நடைபெற இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.

மேலும் இந்த நிகழ்ச்சியில் இசைஞானி இளையராஜா இசை அமைக்கும் நிகழ்ச்சிக்கு தல அஜித் அவர்களை உலக நாயகன் கமல் ஹாசன் அவர்கள் தரப்பில் அழைப்பு விடுத்திருப்பதாகவும் தகவல் வந்துள்ளது. மேலும், அந்த நிகழ்ச்சியில் அஜித் அவர்கள் கண்டிப்பாக கலந்து கொள்கிறேன் என உறுதி அளிப்பதாக கமலஹாசன் அவர்கள் உருவாக்கிய மக்கள் நீதி மைய வட்டாரங்கள் முழுவதும் தெரிவித்துள்ளார்கள். அதுமட்டுமில்லாமல் இந்திய சினிமாத் துறையில் உள்ள அத்தனை நடிகர்களும், நடிகைகளும் ,பிரபலங்களும் கலந்து கொண்டு உலகநாயகன் கமலஹாசன் அவர்களை கௌரவிக்கும் நிகழ்ச்சியாகும். அந்த நிகழ்ச்சியில் கமலுக்கு தல அஜித் அவர்கள் வாக்கு கொடுத்ததைப் போல கலந்து கொண்டு தன்னுடைய சுய கௌரவத்தை காப்பாற்றிக் கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், தல அஜித்தை நிகழ்ச்சியில் பார்ப்பதற்கு ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளார்கள் என்ற தகவலும் வெளிவந்துள்ளன.

Tamil Behind Talkies AMP · Quick view
View full