வழக்கமான பரிசோதனைக்கு சென்ற அஜித், மூளையில் இப்படி ஒரு பிரச்சனையா? அறுவை சிகிச்சையே முடிந்ததா? வெளியான ஷாக்கிங் தகவல்.

By Rajkumar · 8/3/2024

பிரபல நடிகர் அஜித்குமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் தகவல் தான் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக அல்டிமேட் ஸ்டாராக ஜொலித்து கொண்டிருப்பவர் அஜித் குமார். இவருடைய நடிப்பில் வெளிவந்த அனைத்து படங்களுமே பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்திருக்கிறது. இப்படி இருக்கும் நிலையில் அஜித்குமார் திடீரென்று சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்.

இந்த தகவலை கேட்டதும் அவருடைய ரசிகர்கள் பலருமே பதறி போய் விட்டார்கள். பின் விசாரித்த போது தான் அஜித் அவர்கள் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக தான் மருத்துவமனைக்கு சென்றிருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பிட்ட வயதிற்கு மேலானவர்கள் முழு உடல் பரிசோதனை மற்றும் வழக்கமான பரிசோதனை செய்வது வழக்கம் தான். உடலில் என்ன பிரச்சனை இருக்கிறது என்பதை பரிசோதனை மூலம் தெரிந்து கொண்டு அதற்கு ஏற்ப முன்கூட்டியே சிகிச்சை எடுத்துக் கொள்வது நல்லது.

முழு உடல் பரிசோதனை என்பது ரத்த அழுத்தம், கொழுப்பின் அளவு, கண் பரிசோதனை, சரும பரிசோதனை, பாலியல் தொடர்பான சோதனை உள்ளிட்ட பல பரிசோதனைகள் இருக்கிறது. அதோடு குடும்பத்தில் ஏதேனும் மரபியல் நோய் குறித்து விசாரிக்கப்படுவார்கள். இதனால் தற்போது நடிகர் அஜித்குமாருக்கு 52 வயதாகிறது. 50 வயதுக்கு மேல் ஆனாலே முழு உடல் பரிசோதனை செய்வார்கள்.

https://twitter.com/AshokSuryaOff03/status/1765699868482502889

அஜித் திரைப்பயணம்:

இதனால் தான் அஜித்தும் பரிசோதனை செய்து கொள்ள மருத்துவமனைக்கு சென்று இருக்கிறார். இதை தெரிந்தவுடன் ரசிகர்கள் நிம்மதி ஆகினர். அனால், அஜித்துக்கு மூளையில் கட்டி இருந்ததாகவும் அதனை அறுவை சிகிச்சை மூலம் மருத்துவர்கள் எடுத்துவிட்டதாகவும் டிவி சேனல்களில் செய்திகள் வெளியாகி வருகிறது. வழக்கமான பரிசோதனைக்கு சென்ற அஜித்திற்கு மூளையில் கட்டி இருப்பதாக மறுத்தவர்கள் கண்டிருந்ததாக செய்திகள் வெளியிடப்பட்டு வருகிறது.

கேரளா, மதுரை ஆகிய இடங்களில் இருந்து வரவழைக்கப்பட்ட மருத்துவ நிபுணர்களால் நடிகர் அஜித் குமாருக்கு அறுவை சிகிச்சை செய்ததாக டிவி சேனல்கள் செய்திகளை வெளியிட்டு வருகிறது.  மூளையில் சிறிய கட்டி இருந்ததாகவும், அதனை நான்கு மணிநேர அறுவை சிகிச்சை மூலம் மருத்துவர்கள் அதனை வெற்றிகரமாக அகற்றியிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், மூளைப்பகுதியில் 'ஸ்டன்ட்' அதாவது 'ஸ்கிரீன்' வைக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகி வருகிறது.

https://twitter.com/ThalapathiRISHI/status/1765772147505664178

கடைசியாக இயக்குனர் எச் வினோத் இயக்கத்தில் அஜித் ' துணிவு' படத்தில் நடித்திருந்தார். இதனை அடுத்து தற்போது அஜித் அவர்கள் விடாமுயற்சி படத்தில் நடிக்கிறார். இந்த படத்திற்கு அனிரூத் இசை அமைக்கிறார். இந்த படம் பயணம் சார்ந்த கதையாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக திரிஷா நடிக்கிறார். இந்த படத்தில் சஞ்சய் தத், ஆரவ், அர்ஜுன் தாஸ், அருண் விஜய், ரெஜினா உட்பட பல நடிகர்கள் நடிக்கிறார்கள். இந்த படம் முழுக்க முழுக்க ஆக்ஷன் கதையாக இருப்பதாகவும், சில இடங்களில் எமோஷன் காட்சிகளும் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full