வலிமை பட பர்ஸ்ட் லுக் அறிவிப்பு - தல ரசிகர்களின் காத்திருப்பிற்கு தீனி போட்ட போனி.

By Rajkumar · 15/3/2021

பல மாதங்களாக ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வந்த வலிமை படத்தின் பர்ஸ்ட் லுக் பற்றிய அறிவிப்பை அப் படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் வெளியிட்டு இருக்கிறார். நீண்ட மாதமாக வலிமை அப்டேட் வராததால் அஜித் ரசிகர்கள் யாரை பார்த்தாலும் வலிமை அப்டேட்டை கேட்க ஆரம்பித்தனர். அஜித் ரசிகர்கள் பலரும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனி சாமி பிரச்சாரத்திற்கு சென்ற போது வலிமை அப்டேட் எப்போது வரும் என்று கேட்டு இருந்தனர். அதே போல சமீபத்தில் நடைபெற்ற இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிக்கு இடையிலான டெஸ்ட் போட்டியின் போது பீல்டிங் செய்து கொண்டு இருந்த இங்கிலாந்து வீரர் மொயின் அலியை அழைத்து அவரிடம் வலிமை அப்டேட்டை கேட்டு இருந்தனர் அஜித் ரசிகர்கள்.

https://twitter.com/BoneyKapoor/status/1371393243342987269

அவ்வளவு ஏன் பல்வேறு திட்டங்களை துவங்கி வைப்பதற்காக கடந்த பிப்ரவரி 14 தமிழ் நாட்டிற்கு வந்த பிரதமர் மோடியிடமே அஜித் ரசிகர்கள் வலிமை அப்டேட்டை கேட்டனர். அந்த வீடியோவும் வைரலானது.இப்படி ஒரு நிலையில் வரமுறை இல்லாமல் தேவையில்லாத இடத்தில் எல்லாம் அப்டேட் கேட்கும் ரசிகர்களால் கடுப்பான அஜித் தனது ரசிகர்களின் செய்யல்பாட்டால் வருந்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

நடிகர் அஜித் நடித்துள்ள 'வலிமை' படத்தின் பெயரை பயன்படுத்தி தேர்தல் ஆணையம் விழிப்புணர்வு விளம்பரங்களை வெளியிட்டு இருந்தது. அவ்வளவு ஏன் சமீபத்தில் ருகிற சட்டமன்ற தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் பாஜக கட்சி சார்பாக நிற்கும் வானதி ஸ்ரீனிவாசனிடம் கோவை அஜித் ரசிகர்கள் வலிமை அப்டேட் எப்போது என்று ட்விட்டரில் கேள்வி எழுப்பி இருந்தனர்.

இதற்கு பதில் அளித்துள்ள வானதி ஸ்ரீநிவாசன், நான் வெற்றி பெற்ற உடன் நிச்சயமாக வலிமை பட அப்டேட் கிடைக்கும் தம்பி என்று பதில் அளித்ததோடு, Vanathi4KovaiSouth #Valimai #ValimaiUpdate போன்ற ஹேஷ் டேக்குகளையும் போட்டு இருந்தார். இப்படி ஒரு நிலையில் வலிமை படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வரும் மே 1 ஆம் தேதி அதாவது அஜித்தின் 50 வது பிறந்தநாளையொட்டி வெளியாகும் என்று அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனால் அஜித்தின் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

behindtalkies AMP · Quick view
View full