தமிழில் கடந்த 2001 ஆம் ஆண்டு கேப்டன் விஜயகாந்த் நடிப்பில் வெளியான நரசிம்மா என்ற படத்தின் மூலம் வில்லன் நடிகராக அறிமுகமானவர் நடிகர் ராகுல் தேவ். வட இந்தியாவில் பிரபல நடிகரான இவர் மிழில் மழை,பரசுராம்,முனி போன்ற பல படத்தில் வில்லனாக நடித்தவர். கடைசியாக அஜித் நடிப்பில் வெளியான ‘வேதாளம்’ படத்தில் வில்லனாக நடித்திருந்தார். இவருக்கு தற்போது 51 வயது ஆகிறது. ஆனால், இவர் 33 வயதை கொண்ட நடிகை முக்தா கோட்சே என்ற நடிகையுடன் காதலில் இருந்து வருகிறார்.

mugdha in Thani Oruvan

Advertisement

நடிகை முக்தா கோட்சே வேறு யாரும் இல்லை இயக்குனர் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான ‘தனி ஒருவன்’ திரைப்படத்தில் நடித்தவர் தான். தனி ஒருவன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்தப்படத்தில் அரவிந்த்சாமி வில்லனாக அசத்தி இருந்தார், அவருக்கு மனைவியாக ஷில்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர்தான் முக்தா கோட்சே.

மகாராஷ்டிரா மாநிலம் புனேவை சேர்ந்த மாடல் அழகியான இவர் பிரியங்கா சோப்ரா நடிப்பில் 2008 ஆம் ஆண்டு வெளியான ‘ஃபேஷன்’ என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அந்த படத்திற்கு பின்னர் ஹிந்தியில் பல்வேறு திரைப்படத்தில் நடித்திருந்தார். இவர் பிரபல நடிகரான ராகுல் தேவ் என்பவரை பல வருடங்களாக காதலித்து வந்தார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் இவர்கள் தங்களது உறவு குறித்து வெளிப்படையாக அறிவித்தனர்.

Advertisement

Advertisement

ராகுல் தேவ் ஏற்கனவே கடந்த 1998 ஆம் ஆண்டு ரீனா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சித்தார்த் என்ற மகனும் பிறந்தார். கடந்த 2009 ஆம் ஆண்டு ராகுல் மனைவி ரீனா காலமானார். அதன் பின்னர் ஒற்றை தந்தையாக இருந்து தனது மகனை வளர்த்து வந்தார் ராகுல். அதன் பின்னரே நடிகை முக்தாவை காதலித்தார். நடிகை முக்தாவை கடந்த 2013 ஆம் ஆண்டு ஒரு நண்பரின் திருமணத்தில் தான் ராகுல் சந்தித்தார். அதன் பின்னர் இவர்கள் பழகி கதாலிக்க துவங்கிவிட்டனர்.

Advertisement