சீறிப் பாயும் ஸ்டன்ட் காட்சிகள், கூட கொஞ்சம் எமோஷன்ஸ், தீபாவளிக்கு வெளியாகிறதா படம்? - விடாமுயற்சி அப்டேட்
அஜித்தின் 'விடாமுயற்சி' படம் குறித்த புதிய அப்டேட் தான் தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் 90s காலகட்டங்களில் தொடங்கி தற்போது வரை தனது கடுமையான உழைப்பினால் உயர்ந்து அல்டிமேட் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் ஜொலித்து கொண்டிருப்பவர் அஜித். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்று இருக்கிறது.
அந்த வகையில் கடைசியாக அஜித் நடிப்பில் வெளியான படம் 'துணிவு'. இந்த படத்தை இயக்குனர் எச் வினோத் இயக்கி இருந்தார். இப்படம் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது. இதனை அடுத்து அஜித் அவர்கள் 'ஏகே 62' படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தை முதலில் விக்னேஷ் சிவன் தான் இயக்க இருந்தது. அதற்கான அறிவிப்புகள் எல்லாம் வெளியாகி இருந்த நிலையில், இந்த படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் விலக்கி விட்டார் என்று கூறப்பட்டது.
விடாமுயற்சி படம்:
அதற்குப் பின் அஜித்தின் ஏகே 62 படத்தை இயக்குனர் மகிழ் திருமேனி இயக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியானது. படத்தின் பெயரும் 'விடாமுயற்சி' என்று அறிவிக்கப்பட்டது. இந்தப் படத்தில் அஜித், அர்ஜுன், திரிஷா, ரெஜினா கசன்ட்ரா, ஆரவ் என பலரும் நடித்திருக்கின்றனர். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார். அனிருத் இசையமைத்திருக்கிறார். மேலும், ஆக்ஷனும் எமோஷனும் கலந்த இக்கதையின் பெரும் பகுதி வெளிநாட்டில் நடக்கிறது.
SUCCESSFUL COMPLETION OF "VIDAAMUYARCHI" schedule in the endless terrains of AZERBAIJAN, BAKU! 🤗#VidaaMuyarchi #EffortsNeverFail#AjithKumar #MagizhThirumeni @LycaProductions #Subaskaran @gkmtamilkumaran @trishtrashers @akarjunofficial @anirudhofficial @Aravoffl… pic.twitter.com/nrg1peZiZN
— Lyca Productions (@LycaProductions) July 21, 2024
அஜர்பைஜானில் படப்பிடிப்பு:
அதற்காக இப்படத்தின் மொத்த குழுவும் அஜர்பைஜான் சென்று இருந்தது. சுப்ரீம் சுந்தரின் ஸ்டன்டில் ஆக்ஷன் காட்சிகளும், சேசிங் காட்சிகளும் இப்படத்தில் நிறைய இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் சேஸிங்கின் போது அஜித்தின் கார் விபத்திற்குள்ளானது. அந்த விபத்தின் வீடியோவும் வெளியாகி சோசியல் மீடியாவில் வைரலானது. மேலும் இப்படத்தில் வெளிநாட்டு ஸ்டாண்ட் கலைஞர்கள் உட்பட பலரும் நடித்துள்ளனர்.
நிறைவடைந்த ஷூட்டிங்:
அஜர்பைஜானில் கடந்த சில வாரங்களாக விடாமுயற்சி படத்தின் இரண்டாவது கட்ட படப்பிடிப்பு நடந்து வந்த நிலையில் தற்போது நிறைவடைந்து இருக்கிறது. மேலும் இந்தப் படத்தின் இடைவெளியில் தான், அஜித் அடுத்த படமான ' குட் பேட் அக்லி' படப்பிடிப்பை ஆரம்பித்து, ஒரு ஷெட்யூலையும் முடித்துக் கொடுத்திருக்கிறார். மேலும் தற்போது அஜர்பைஜான் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், அடுத்த மாதம் புனேயில் ஒரு ஷெட்யூல் படப்பிடிப்பு நடைபெறுவதாக தெரிகிறது.
தீபாவளி ரிலீஸ்:
அதற்காக மொத்த டீமும் புனே செல்கிறது. அத்துடன் படத்தின் மொத்த ஷூட்டிங்கும முடிகிறது. மேலும் திட்டமிட்டபடி ஆகஸ்டில் படப்பிடிப்பு முடிவடைந்தால் தீபாவளிக்கு ரிலீஸ் எதிர்பார்க்கலாம் என்று பட குழுவினர் கூறுகின்றனர். இதற்கு இடையில் அடுத்த மாதம் படத்தின் டீசரை வெளியிட திட்டமிட்டுள்ளனர். மேலும் சிலர் படம் நவம்பரில் கண்டிப்பாக திரைக்கு வரும் என்று கூறுகின்றனர். 'விடாமுயற்சி' மற்றும் 'குட் பேட் அக்லி' படங்களில் ஒரே சமயத்தில் அஜித் நடிப்பதால், அவரின் வேகம் ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.