தற்போது இந்தியாவில் கொரோனாவால் ஒரு லட்சத்துக்கும் அதிகமான பேர் பாதிக்கப்பட்டும், 3867 பேர் உயிர் இழந்தும் உள்ளார்கள். இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்வதால் ஊரடங்கு உத்தரவை பல மாநிலங்களில் இன்னும் சில நாட்களுக்கு நீட்டித்து உள்ளார்கள். தமிழகத்தில் 14751 பேர் பாதிக்கப்பட்டும், 98 பேர் உயிர் இழந்தும் உள்ளார்கள். இதனால் தமிழக முதலமைச்சர் நான்காம் கட்ட ஊரடங்கு உத்தரவை நீட்டித்து உள்ளார். மேலும், மக்கள் யாரும் வெளியில் வரக்கூடாது என்பதால் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்குகிறார்கள்.

இந்த கொரோனா வைரஸ்சால் மக்களின் இயல்பு நிலை பதிப்பட்டுள்ளதை போல சினிமா படப்பிடிப்புகள் எல்லாம் சில மாதங்களாக மூடப்பட்டு உள்ளதால் திரைப்பட தொழிலாளர்கள் தங்களின் வாழ்வாதரத்திற்கே கஷ்டப்படும் நிலையில் உள்ளார்கள். சினிமா தொழிலாளர்களுக்கு உதவ வேண்டும் என பெப்சி அமைப்பு நிதி திரட்டி வருகிறது.

Advertisement

இதனை அறிந்த பல நடிகர்கள் தங்களால் முடிந்த நிதி உதவிகளை வழங்கி வருகின்றனர். இதுவரை பெப்சி அமைப்புக்கு ரூ.2 கோடியே 45 லட்சம் நிதி வசூலாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. நடிகர்களை பொறுத்த வரை சிவகார்த்திகேயன்-விஜயசேதுபதி சூர்யா ஆகியோர் தலா 10 லட்சமும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 50 லட்சமும், அஜித் 1.25 கோடியும் அளித்திருந்தனர்.

படப்பிடிப்புகள் முடங்கி உள்ளதால் நடிகர்களும் வீட்டில் தான் இருந்து வந்தனர். ஆனால், சாதாரண நாட்களிலேயே வெளியில் அவ்வளவாக தலை காண்பிக்காத அஜித், தனது மனைவி ஷாலினியுடன் மருத்துவமனைக்கு வந்த வீடியோ ஒன்றை அங்கு இருந்தவர்கள் எடுத்துள்ளனர். இந்த வீடியோ சமூக வளைத்ததில் வைரலாக பரவி வருகிறது.

Advertisement

மேலும், அஜித் அவர்களின் தந்தைக்கு உடல் நிலை சரியில்லை என்றும் அவரை காணத்தான் அஜித் மருத்துவமனைக்கு சென்றார் என்றும் கூறப்பட்டது. ஆனால், இது குறித்து அஜித் தரப்பில் கூறப்பட்டுள்ளது என்னவெனில், அஜித்துக்கு பல ஆண்டுகளுக்கு முன்னர் செய்பட்ட அறுவை சிகிச்சைக்காக அவர் 3 மாதத்திற்க்கு ஒரு முறை மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு செல்வார். அப்படிபட்ட விசிட் தான் இது என்று கூறியுள்ளனர்.

Advertisement
Advertisement