தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் அஜித் குமார். ரசிகர்கள் அன்போடு ‘தல’ என்று அழைக்கப்படும் அஜித், 1993-ஆம் ஆண்டு வெளி வந்த ‘அமராவதி’ என்ற படத்தில் தான் முதன் முறையாக கதையின் நாயகனாக நடித்தார். அந்த படத்தினை இயக்குநர் செல்வா இயக்கியிருந்தார். இதனைத் தொடர்ந்து ‘பவித்ரா, ஆசை, வான்மதி, கல்லூரி வாசல், காதல் கோட்டை, உல்லாசம், காதல் மன்னன், வாலி, அமர்க்களம், சிட்டிசன்’ போன்ற பல படங்களில் நடித்தார் ‘தல’ அஜித்.

1995-ஆம் ஆண்டு தமிழ் திரையுலகில் வெளி வந்த திரைப்படம் ‘ஆசை’. இந்த படத்தினை பிரபல இயக்குநர் வஸந்த் இயக்கியிருந்தார். அஜித் கதையின் நாயகனாக நடித்திருந்த இப்படத்தில் அவருக்கு ஜோடியாக சுவலக்ஷ்மி டூயட் பாடி ஆடியிருந்தார். மேலும், முக்கிய கதாபாத்திரங்களில் பிரகாஷ் ராஜ், ரோகினி, நிழல்கள் ரவி, வடிவேலு, தாமு, மயில் சாமி, மதன் பாப், மகாநதி ஷங்கர் ஆகியோர் நடித்திருந்தனர்.

Advertisement

இந்த படத்தில் ஹீரோவாக நடிக்க முதலில் இயக்குநர் வஸந்த் அணுகிய நடிகர் அரவிந்த் சாமியாம். அப்போது, அரவிந்த் சாமி பல படங்களில் செம பிஸியாக நடித்து கொண்டிருந்தார். ஆகையால், அவர் கால்ஷீட் இப்படத்திற்கு கிடைக்கவில்லையாம். பின், ஒரு புதுமுக நடிகரை நடிக்க வைக்கலாம் என வஸந்த் தேடிக் கொண்டிருந்தபோது, ‘தூர்தர்ஷன்’ சேனலில் ஒளிபரப்பான ஒரு வேட்டி விளம்பர படத்தில் அஜித்தை பார்த்திருக்கிறார்.

அதன் பிறகு அஜித்தை சந்தித்து கதை சொல்ல, அவருக்கு பிடித்து போய் உடனே கிரீன் சிக்னல் கொடுத்து விட்டாராம். இதை இயக்குநர் வஸந்தே ஒரு பேட்டியில் தெரிவித்திருக்கிறார். இந்த ‘ஆசை’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று சூப்பர் ஹிட்டானது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Advertisement