பொறாமை மற்றும் வெறுப்பு குறித்து ரசிகர்களுக்கு அஜித்தின் அட்வைஸ் - வைரலாகும் Whatsapp மெசேஜ்.

By Rajkumar · 17/11/2022

90ஸ்களில் அமராவதி திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகி கடந்த ஆண்டு வெளியான வலிமை திரைப்படம் வரை தனது உழைப்பினால் உயர்ந்து அல்டிமேட் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் இருப்பவர்தான் அஜித். இவர் திரைப்படங்களில் மட்டும் இல்லை துப்பாக்கி சுடுதல் , கார் மற்றும் பைக் ஓட்டுவதிலும் மிகுந்த ஆர்வம் கொண்டவர். அதற்க்காக பல விருதுகளையும் வாங்கியிருக்கிறார். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் பல ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்று இருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் வெளியான அஜித்தின் வலிமை படம் ரசிகர்கள் மத்தியில் மிக பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டு இருந்தது. ஆனால், விமர்சன ரீதியாக இந்த படம் கலவையான விமர்சனங்களை மட்டுமே பெற்று இருந்தது.

இருப்பினும் வலிமை படம் ஹிட் தான் என்று அஜித் ரசிகர்கள் கூறிக்கொண்டு தான் வருகின்றனர். தற்போது வலிமை படத்தை இயக்கிய இயக்குனர் வினோத் குமாரின் மொத்த டீமும் துணிவு படத்திற்கான வேலையில் மும்முரமாக இறங்கி இருக்கிறார்கள். இந்த படம் பல மொழிகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டு இருக்கின்றனர். அதோடு இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் செய்ய இருப்பதாகவும் கூறப்படுகிறது.

அஜித்தின் துணிவு :

இந்த கதையில் அஜித் மிகவும் இன்வால்வ் ஆகி இருப்பதால் அவரது லுக்கை அவரே டிசைன் செய்து இருக்கிறார். மேலும், படத்தில் அஜித் வில்லன் கதாபாத்திரத்திலும் வில்லன் கதாபாத்திலத்திலும் இரட்டை வேடத்தில் நடிக்கிறார் என்று கூறப்படுகிறது . இதனால் அஜித் இந்த படத்திற்காக 20 முதல் 25 கிலோ வரை எடை குறைத்து இருக்கிறார். மேலும் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக மஞ்சுவாரியர் நடிக்கிறார் அதோடு சில முக்கிய கதாபாத்திரத்தில் மலையாள நடிகர் சிஜோய் வர்கீஸ், ஜான் கொகைன், வீரா, சமுத்திரக்கனி உள்பட பலர் நடிக்கிறார்கள்.

Thunivu

பொங்கல் ரிலீஸ் :

தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த படம் ஒரு வங்கி கொள்ளை சம்பந்தமான கதை என்ற தகவல் அனைவரும் அறிந்த ஒன்று. அதாவது, பஞ்சாப் மாநிலத்தில் நடந்த உண்மை சம்பவத்தை வைத்து தான் இயக்குனர் வினோத் இந்த படத்தை இயக்கி வருகிறார். சமீபத்தில் தான் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இருந்தது. போஸ்டர் வெளியான நிலையில் வரும் பொங்கலன்று துணிவு திரைப்படமானது வெளியாகும் என்று அதிகாரபூர்வ செய்தி வெளியாகியிருக்கிறது.

அஜித்தின் வாட்ஸ் அப் மெசேஜ் :

இந்நிலையில் நடிகர் விஜய் நடித்து வரும் வாரிசு படமும் அதே கொங்கலன்றுதான் வெளியாகும் என்பதினால் ரசிகர்களுக்கு இடையே சில சர்ச்சைகள் உருவாக்கி வருகிறது.இந்நிலையில் தான் அஜித் தன்னுடைய ரசிகர்களுக்கு அறிவுரை கூறியுள்ளார். அதில் உங்களைச் சிறப்பாகச் செய்யத் தூண்டும் நபர்களுடன் உங்களைச் சுற்றி வையுங்கள். நாடகமோ எதிர்மறை கருத்துக்களோ வேண்டாம் உயர்ந்த இலக்குகள் மனதில் வையுங்கள். பொறாமையோ எதிர்ப்போ வேண்டாம் ஒருவருக்கொருவர் நல்ல சிந்தனை களுடன் உதவி செயல் படுங்கள் என்று அவரது மேனேஜர் சுரேஷ் சந்திரா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full