"மறுபடியும் அஜித் என்னைக் கூப்பிடுவார்னு நம்பிக்கை இருக்கு!" காத்திருக்கும் அப்புக்குட்டி

By Ashok · 7/10/2017
'ஓம் மண்ணெண்ணெயாய நமஹ!', 'ஒரே ஒரு குருக்கள் வர்றார் வழிவிடுங்கோ'... இப்படி ஒற்றை காட்சி, ஒருவரி வசனங்களில் ஆரம்பித்த அப்புக்குட்டி, குதிரையுடன் விளையாட்டு, தேசிய விருது, அஜித் ஃபோட்டோஷூட், பல பட கமிட்மென்ட்ஸ்... என பரபரப்பாக இருக்கும் அப்புக்குட்டியிடம் பேசினோம். "உங்களுக்கும் அஜித்திற்குமான பழக்கம் பற்றி சொல்லுங்க..." " சிவா சார்தான் என் படங்களைப் பார்த்துட்டு கூப்பிட்டு, ‘தல-க்கு தம்பிமாதிரி ஒரு கேரக்டர்னு சொன்னார். வேற எதுபற்றியும் நான் கேட்கலை. அஜித் சாருக்கு என்னை யாருனே தெரியாது அவர் என் படங்களைப் பார்த்ததும் இல்லை. சிவா சார்தான், ‘தேசிய விருது வாங்கினவர்’னு அறிமுகப்படுத்தினார். அப்புறம், கைகொடுத்த தல, ஷூட் போகப்போக நல்ல பழக்கமாகிட்டார். நல்லா நடிச்சா, டயலாக் டெலிவரிலாம் சரியா பண்ணினா முதல்ல வந்து பாராட்டுவார். பத்திரிகை வைக்கிற சீனும் அவர் என் கல்யாணத்துக்கு வந்து பத்திரம் கொடுக்குற சீனும்தான் படத்தில் எனக்கு ரொம்பப் பிடிச்ச காட்சிகள்.” "அவர் உங்களை வெச்சு போட்டோஷூட் பண்ணும்போது எப்படி ஃபீல் பண்ணீங்க? இப்ப அவருடன் தொடர்பில் இருக்கீங்களா?” “ ‘வீரம்’ படப்பிடிப்பில அஜீத் சார் என்கிட்ட, 'தம்பி எல்லாப் படங்களிலும் ஒரே வித தோற்றத்தில் வருவது உங்க வளர்ச்சிக்குத் தடையா இருக்கும். முடிஞ்சவரை படத்துக்குப் படம் தோற்றத்தை மாற்றப் பாருங்க'னு சொன்னார். அப்புறம் அப்படியே நாள்கள் ஓடிடுச்சு. படம் எல்லாம் முடிச்சு கொஞ்சநாள்ல என்னை ஒரு இடத்துக்கு வரச்சொன்னார். அங்கபோன எனக்கு பயங்கர ஷாக். என் உடம்புக்கு தகுந்தமாதிரி தைக்கப்பட்ட துணிகள், மேக்கப் பொருள்கள், எனக்காகவே வரவழைக்கப்பட்ட ஒப்பனையாளர்கள்னு அசத்திட்டார். அப்போ எடுத்த போட்டோஸ்தான். அதுக்கு அப்புறம் நான் போட்டோவே எடுக்கலை. என்னைக்கோ சொன்னதை ஞாபகம் வெச்சுகிட்டு அதைச் சொன்னபடி செஞ்சிட்டார். அதான் தல. அவர் ரொம்ப பிஸியான நபர். அதனால போன் தொடர்புலாம் இல்லை. ஆனா, மறுபடியும் சிவா சாரும் தலயும் என்னைக் கூப்பிடுவாங்க என்ற நம்பிக்கை எனக்கு இருக்கு." "இப்ப என்னென்ன படங்கள் கைவசம் வெச்சுருக்கீங்க?” " 'வல்லவனுக்கு வல்லவன்', 'எங்க காட்டுல மழை', 'வைரி', 'காத்திருப்போர் பட்டியல்', 'நெஞ்சில் துணிவிருந்தால்', 'வெண்ணிலா கபடிக்குழு-2', '100% காதல்', 'பூம்பூம் காளை'னு பல படங்கள் பண்ணிட்டு இருக்கேன். இந்தப் படங்கள்ல காமெடி கேரக்டர்களுக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கிறேன். இதுதவிர 'விவசாயி'னு ஒரு படத்துல ஹீரோவா நடிச்சிட்டு இருக்கேன். இந்த காமெடி கலந்த ஹீரோவா என் தோற்றத்துக்கு ஏற்ற கதை வந்தா பண்ணணும்ங்கிற ஆசையும் இருக்கு ''
Tamil Behind Talkies AMP · Quick view
View full