தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து கொண்டு இருப்பவர் நடிகர் அஜித் குமார். தற்போது தல அஜித்தின் “வலிமை” படம் குறித்து ஒரு செமயான தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதனால் தல ரசிகர்கள் எல்லாம் மிகுந்த கவலையில் உள்ளார்கள். இறுதியாக அஜித் அவர்களின் நடிப்பில் வெளிவந்த ‘விஸ்வாசம் மற்றும் நேர்கொண்ட பார்வை’ ஆகிய இரண்டு படமுமே மக்களிடையே நல்ல வரவேற்பையும், வசூலையும் பெற்றது.

அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தின் மாஸ் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் வினோத்தும், தயாரிப்பாளர் போனிகபூர் இருவரும் மீண்டும் இணைந்து தல அஜித்தை வைத்து “வலிமை” படத்தை உருவாக்கி வருகிறார்கள். இந்த படத்தின் பணிகள் துவங்கி ஒன்றரை ஆண்டுக்கு மேல் ஆன நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தான் இந்த படத்தில் மோஷன் போஸ்டர் வெளியாகி இருந்தது.

Advertisement

அதிலும், இந்த மோஷன் போஸ்டரில் பெரும்பாலும் பைக் தீமை வைத்து தான் உருவாக்கப்பட்டு இருந்தது. இதனால் இந்த படத்தில் பைக்கிற்கும் கதைக்கும் ஒரு முக்கிய தொடர்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படி ஒரு நிலையில் தான் அஜித் படு ஸ்டைலாக சூப்பர் பைக் மீது அமர்ந்து இருக்கும் போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டனர்.

எம்வி அகுஸ்ட்டா RR புரூட்டேல் 800

இந்த படத்தில் நடிகர் அஜித், எம்வி அகுஸ்ட்டா RR புரூட்டேல் 800 (பழைய மாடல்) பைக்கைத்தான் பெரும்பாலான காட்சியில் பயன்படுத்தியுள்ளாராம். இந்த பைக்கின் டாப் ஸ்பீடு 244 கிமீ. இந்த பைக்கைக் கையாள்வதற்குக் கொஞ்சம் கட்டுமஸ்த்தாக இருந்தால்தான் முடியும். காரணம், இதன் எடை 175 கிலோ. இதன் சீட் உயரம் 830 மிமீ, இதனால் உயரம் குறைவானார்கள் ஓட்டுவதும் சிரமம்.

Advertisement

ஆகையில் இந்த பைக்கை கொஞ்சம் ஸ்லிம்மாக இருக்கும் விஜய்யோ, உயரத்தில் குறைவாக இருக்கும் சூர்யாவோ ஓட்ட முடியுமா என்பது கொஞ்சம் சந்தேகம் என்று தான் தோன்றுகிறது. ஆனால், அஜித் கட்டுமஸ்தான உடல், போதுமான உயரம் என்று இருக்கக் கூடியவர். அதே போல பைக்கில் கில்லாடி என்பதால் இந்த பைக் ஓட்டுவது எல்லாம் வடிவேலு சொல்லுவது போல டுப்ஸ் மேட்டர்.

Advertisement
Advertisement