விருது வாங்கிய கையுடன் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அஜித் - என்ன ஆச்சு தெரியுமா?
பத்ம பூஷன் விருது வாங்கிய கையோடு அஜித் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்தியாவில் மத்திய அரசால் வழங்கப்படும் விருதுகளில் ஒன்றான பத்ம விருதுகள் ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு பிரிவுகளை சார்ந்தவர்களுக்கு அறிவிக்கப்படுகிறது. அந்த வகையில் இந்த 2025 ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் 23 பெண்கள் உட்பட 139 பேருக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது.
அந்த வகையில் கலைத்துறையில் சிறந்து விளங்கும் நடிகர் அஜித்துக்கும் இந்த விருது வழங்கப்பட்டு இருக்கிறது. டெல்லியில் தான் பத்ம விருதுகள் விழா நடைபெற்றது. இந்த விருதை வாங்க அஜித் தன்னுடைய குடும்பத்துடன் சென்று இருந்தார். டெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில் குடியரசு தலைவர் கையால் அஜித் விருதை வாங்கி இருக்கிறார். இதற்கு ரசிகர்கள், பிரபலங்கள் என பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள்.
விருது வாங்கிய அஜித்:
மேலும், பத்மபூஷன் விருது வாங்கியதை அடுத்து நீண்ட நாட்களுக்குப் பிறகு பிரபல ஊடகத்திற்கு அஜித்குமார் பேட்டி ஒன்று அளித்திருந்தார். அதில் பத்மபூஷன் வாங்கியது தொடர்பாக அனைவருக்கும்
அஜித்குமார் நன்றி தெரிவித்து பேசி இருந்தார். பின் விருது வாங்கிய கையுடன் நேற்று அஜித் தன்னுடைய குடும்பத்துடன் சென்னை திரும்பினார். விமான நிலையத்தில் அஜித்தை ரசிகர்கள் உற்சாகமுடன் வரவேற்றார்கள்.
மருத்துவமனையில் அஜித்:
அது மட்டுமில்லாமல் மீடியாவும் அஜித்தை சுற்றிவலைத்தது. இருந்தாலுமே, அஜித் விரைவில் சந்திப்பேன் என்று கூறிவிட்டு சென்றுவிட்டார். இப்படி இருக்கும் நிலையில் சென்னை திரும்பி கையோடு இன்று அஜித் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அதாவது, அஜித் அவர்கள் சென்னை அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இவர் தன்னுடைய உடல் நல பரிசோதனைக்காக தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
https://www.youtube.com/watch?v=xi03snEwruE
ஹாஸ்பிடல் போன காரணம்:
இது ஒரு நார்மல் செக்கப் தான். மற்றபடி எந்த பிரச்சனையும் இல்லை என்றும் கூறப்படுகிறது. அதோடு சென்னை விமான நிலையத்தில் கூட்ட நெரிசலில் சிக்கிய போது அவருக்கு காலில் காயம் ஏற்பட்டதால் அதற்காக பிசியோதெரபி சிகிச்சையும் அளிக்கப்படுவதாக கூறப்படுகிறது. இந்த தகவல் வெளியானதை தொடர்ந்து ரசிகர்கள் கொஞ்சம் நிம்மதி அடைந்து இருக்கிறார்கள்.
அஜித் திரைப்பயணம்:
தமிழ் சினிமா உலகில் 90s காலகட்டங்களில் தொடங்கி தற்போது வரை தனது கடுமையான உழைப்பினால் உயர்ந்து அல்டிமேட் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் ஜொலித்து கொண்டிருப்பவர் அஜித். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்று இருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் நடிகர் அஜித் நடிப்பில் வெளிவந்த குட் பேட் அக்லி படம் மிக பெரிய அளவில் வரவேற்பை பெற்று வசூல் சாதனையும் செய்து வருகிறது. இதை ரசிகர்களும் கொண்டாடி வருகிறார்கள். இதை அடுத்து அஜித் அவர்கள் தன் கார் ரேஸில் கவனம் செலுத்தி வருகிறார்.