வெளிநாட்டில் ஆட்டம் போட நேரம் இருக்கு கேப்டன் இறப்பிற்கு வர நேரமில்லையா? அஜித்தை விமர்சிக்கும் நெட்டிசன்கள்.

By subhashini · 3/1/2024

புத்தாண்டு கொண்டாட்டத்தில் ரசிகையுடன் அஜித் போட்டிருக்கும் குத்தாட்ட வீடியோ தான் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் 90 காலகட்டத்தில் தொடங்கி தற்போது வரை தனது கடுமையான உழைப்பினால் உயர்ந்து அல்டிமேட் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் ஜொலித்து கொண்டு இருப்பவர் அஜித். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்று இருக்கிறது.

https://twitter.com/mangathadaww/status/1742447602736791707

அந்த வகையில் கடைசியாக அஜித் நடிப்பில் வெளியான படம் துணிவு. இந்த படத்தை இயக்குனர் எச் வினோத் இயக்கி இருந்தார். இப்படம் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது. இதனை அடுத்து அஜித் அவர்கள் ஏகே 62 படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை முதலில் விக்னேஷ் சிவன் தான் இயக்க இருந்தது. அதற்கான அறிவிப்புகள் எல்லாம் வெளியாகியிருந்தது. பின் இந்த படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் விலகிவிட்டார் என்று கூறப்பட்டது.

விடாமுயற்சி படம்:

அதன் பின் அஜித்தின் ஏகே 62 படத்தை இயக்குனர் மகிழ்திருமேனி இயக்க இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. பின் இந்த படத்திற்கு விடா முயற்சி என்று பெயரிடப்படுகிறது. இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக திரிஷா நடிக்கிறார். இவர்களுடன் இந்த படத்தில் சஞ்சய் தத், ஆரவ், அர்ஜுன் தாஸ், அருண் விஜய், ரெஜினா உட்பட பல நடிகர்கள் நடிக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் இந்த படத்தில் ஆக்ஷன் கிங் அர்ஜுனும் நடிப்பதாக கூறப்படுகிறது. மங்காத்தா படத்திற்கு பிறகு இந்த படத்தில் இருவரும் மீண்டும் இணைந்து நடிக்கிறார்கள். இதனால் இந்த படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

https://twitter.com/V_I_P_E_R__/status/1742445744077066341

படம் குறித்த தகவல்:

மேலும், இந்த படம் முழுக்க முழுக்க ஆக்ஷன் கதையாக இருப்பதாகவும், சில இடங்களில் எமோஷன் காட்சிகளும் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தினுடைய முதற்கட்ட படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்று இருக்கிறது. ஆனால், கடந்த மாதம் இந்த படத்தின் கலை இயக்குனர் மிலன் மாரடைப்பால் இறந்து விட்டார். இவருடைய இழப்பு அஜித் உட்பட பலரையும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. எல்லோரும் படப்பிடிப்பு நின்று விடும் என்று எதிர்பார்த்தார்கள். ஆனால், விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு மும்முறமாக நடைபெற்று வருகிறது.

அஜித் வீடியோ;

இரண்டு மாதங்கள் ஓய்வில்லாமல் நடைபெற்ற இந்த படத்தினுடைய முதல் கட்ட படப்பிடிப்பு முடிவடைந்து இருக்கிறது. இதனால் ஓய்விற்காக அஜித் குடும்பத்துடன் துபாய் சென்றிருக்கிறார். பின் தன்னுடைய மனைவி ஷாலினி, மகன், மகளுடன் புத்தாண்டை சிறப்பாக கொண்டாடி இருக்கிறார். மேலும், அஜித் துபாயில் குடும்பத்துடன் ஜாலியாக கப்பலில் எல்லாம் சுற்றி பார்த்திருக்கிறார்கள். அப்போது அஜித்தை பார்த்து ரசிகர்கள் தல, தல என்று ஆர்ப்பாட்டம் செய்து இருக்கிறார்கள். அஜித் கப்பலில் இருந்து கொண்டே கையசைத்து இருக்கிறார்.

https://twitter.com/bloody_expiry/status/1742446753780269324?s=48

ரசிகர்கள் விமர்சனம் :

இந்த நிலையில் அஜித் போட்டு இருக்கும் குத்தாட்ட வீடியோ தான் தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. அதாவது, புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது அஜித் அவர்கள் பெண் ரசிகையுடன் சேர்ந்து நடனம் ஆடி இருக்கிறார். இதை அங்கிருந்தவர்கள் பார்த்து ஆரவாரத்துடன் கைதட்டி உற்சாகம் செய்திருக்கிறார்கள். தற்போது இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வரும் நிலையில் விஜயகாந்தின் இறப்பிற்கு வர நேரமில்லை இதற்கு மட்டும் நேரமிருக்கிறதா என்று விமர்சனம் செய்து வருகின்றனர்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full